காது மூக்கு குத்தி நகை அணியலாமா?
Tuesday, December 13, 2011
காது மூக்கு குத்தி நகை அணியலாமா?
இது தான் இஸ்லாம்.காம் இற்கு சகோதரர் ரஸ்மியின் பதில்.
இதுதான் இஸ்லாம்.காம் இல் ஒரு நேயரின் கேள்வி கீழே உள்ளது.175 கேள்வி - பெண்கள் காதணி, மூக்குத்தி அணியலாமா...? இந்த கேள்விக்கு பதில் அளித்தது சரியா தவறா என்று என்னால் விளங்க முடியவில்லை. முன்பு நான் ஒரு புரோகிராமில் பி.ஜே அவர்கள் பெண்கள் காது மூக்கு குத்த கூடாது என்று கூறி, அல்லாஹ் உடைய வசனத்தையும் குறிப்பிட்டர்கள். நானும் என் மகளுக்கு அதிக நாள் காது குத்தாமல் தான் இருந்தேன் தாங்கள் கம்மல் முக்குத்தி அணியலாம் என்று கூறியதும் எனக்கு வியப்பாக உள்ளது தாங்கள் இதற்கு விளக்கம் தருமாரு கேட்டுக்கொள்கிறேன். ( பி.ஜே அவர்கள் குறிப்பிட்ட வசனத்தையும் கீழே குறிப்பிட்டு உள்ளேன்) 4:119 ''இன்னும் நிச்சயமாக நான் அவர்களை வழி கெடுப்பேன்; அவர்களிடம் வீணான எண்ணங்களையும் உண்டாக்குவேன்; (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால்நடைகளின் காதுகளை அறுத்து விடும்படியும் அவர்களை ஏவுவேன். இன்னும் அல்லாஹ்வின் படைப்புகளையுடைய கோலங்களை மாற்றும்படியும் ஏவுவேன்'' என்றும் ஷைத்தான் கூறினான்; எனவே எவன் அல்லாஹ்வை விட்டு ஷைத்தானை உற்ற நண்பனாக ஆக்கிக் கொள்கிறானோ, அவன் நிச்சயமாக பகிரங்கமான பெரு நஷ்டத்தை அடைந்தவன் ஆவான். ஷரீப் - யாஹூ மெயில் வழியாக.
மேலே உள்ள கேள்விக்கான உங்களது பதிலில் காது மூக்கு குத்துவது கூடும் என்று உங்கள் இணையத்தளத்தில் நீங்கள் எழுதியிருந்ததை நான் கண்டேன். நீங்கள் ஆய்வு செய்த விதம் குர்ஆன் ஹதீஸ் ஒளியில் இருப்பது கண்டு எனக்கு சந்தோஷம். ஆனால் உங்கள் ஆய்வில் ஏராளமான தவறுகள் இருப்பதால் அதை இங்கு சுட்டிக்காட்டுகிறேன்.
உங்கள் முதல் பந்தி இதுதான்
//'ஷைத்தானின் முக்கிய பணியே நம்மை வழி கெடுத்து நரகத்திற்கு அனுப்புவதுதான் என்பதை நீங்கள் முதலில் புரிந்துக் கொள்ள வேண்டும். எந்த விதத்தில் மனிதனிடம் அணுகினால் அவனை வழிக்கேட்டை நோக்கி திருப்ப முடியும் என்பதில் தான் அவனது முழு கவனமும் - செயல்பாடும் இருக்குமே தவிர மனிதர்களுடன் செல்ல விளையாட்டு அவன் விளையாடிக் கொண்டிருக்க மாட்டான். காது மூக்கு குத்தி நகை அணிவதால் அவ்வாறு அணிந்தவர்களை நரகத்தை நோக்கி திருப்பி விட முடியுமா என்றும், இன்றைக்கு காது மூக்கு குத்தியவர்கள் அனைவரும் ஷைத்தனுக்கு கட்டுப்பட்டுதான் அந்த காரியத்தை செய்துள்ளார்கள் என்றும் உங்களால் ஒப்புக் கொள்ள முடியுமா..?'//
எனது மறுப்பு.
அல்லாஹ் ஒரு விடயத்தைக் கூறி இது ஷைத்தானின் செயல் என்று கூறிவிட்டால், அது செல்ல விளையாட்டாக தோன்றினாலும் அல்லாஹ் அதைத் தடை செய்திருப்பதால் அது கூடாது என்று முடிவெடுப்பதே அறிவுடமை. செல்ல விளையாட்டாக மக்களிடம் ஷைத்தான் விளையாடும் சிலவற்றை நான் இங்கு குறிப்பிடுகிறேன். வெள்ளை முடிக்கு கருப்பு நிறம் இடுவது சிலருக்கு செல்ல விளையாட்டு. பொய் சடை(முடி) போடுவது சிலருக்கு செல்ல விளையாட்டு. தாடியை மழிப்பது ஆண்களில் சிலருக்கு செல்ல விளையாட்டு. முடியின் பாதியை மழித்து மீதியை விடுவது சிலருக்கு செல்ல விளையாட்டு. Plastic Surgery செய்து தனது கோலத்தை மாற்றுவது சிலருக்கு செல்ல விளையாட்டு. புருவத்தை மழிப்பது பெண்களில் சிலருக்குச் செல்ல விளையாட்டு. இப்போது உங்கள் வாதப்படிஉங்களின் அதே வார்த்தைப்படியே இதை நியாயப்படுத்திப் பார்ப்போம். இவ்வாறு முடிக்கு கருப்பு நிறம் இடுவதால், பொய் சடை(முடி) போடுவதால், தாடியை மழிப்பதால், முடியின் பாதியை மழித்து மீதியை விடுவதால் Plastic Surgery செய்வதால், பெண்கள் புருவத்தை மழிப்பதால், அவர்களை நரகத்தை நோக்கி திருப்பி விட முடியுமா என்றும், இவ்வாறு செய்பவர்கள் அனைவரும் ஷைத்தனுக்கு கட்டுப்பட்டுதான் அந்த காரியத்தை செய்துள்ளார்கள் என்றும் உங்களால் ஒப்புக் கொள்ள முடியுமா..? இவ்வாறு நீங்கள் கேட்டது போன்ற அதே அறிவுபூர்வமான(?) கேள்விகளை நானும் கேட்டு மேலே கூறிய செல்ல விளையாட்டுக்களை என்னாலும் நியாயப்படுத்த முடியும் என்றால் நீங்கள் காது, மூக்குக் குத்துவதை நியாயப்படுத்தியது சரிதான்.
மேலும் நாம் நினைக்கும் சில செல்ல விளையாட்டுகள் தான் எம்மை நரகத்துக்கு இட்டுச்செல்கின்றது.
”உலக வாழ்க்கை வீணும் விளையாட்டுமேயன்றி வேறில்லை. பயபக்தியுடையவர்களுக்கு நிச்சயமாக மறுமை வீடே மிகவும் மேலானதாகும். நீங்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டாமா?” 6:32
உங்கள் அடுத்த பந்தி
//'எந்த காரியத்தை செய்வதால் அவனுக்கு பலனில்லையோ அந்த காரியத்தை ஷைத்தான் ஒரு போதும் செய்ய மாட்டான்.'//
எனது மறுப்புகாது மூக்கு குத்துவது அல்லாஹ் படைத்த கோலத்தை மாற்றுவது ஆகும். இதனால் ஷைத்தானுக்குப் பலன் உண்டு என்று அல்லாஹ்தான் சொல்கிறான். அல்லாஹ்வே ஷைத்தானுக்கு பலன் உண்டு என்று சொன்ன பிறகு அக்காரியத்தைச் ஷைத்தான் ஒரு போதும் செய்யாமல் இருக்க மாட்டான்.
அடுத்ததாக நீங்கள் கூறியது.
'//அப்படியானால் நீங்கள் சுட்டி காட்டியுள்ள வசனத்திற்கு என்ன பொருள்.
அந்த வசனமே விடையை சொல்லி விடுகிறது.நான் அவர்களை வழி கெடுப்பேன் ''அவர்களின் உள்ளங்களில் வீணாண எண்ணங்களை உண்டாக்குவேன்''
மனதில் வீணாண எண்ணங்களை உண்டாக்குவதின் வழியாகத்தான் நான் அவர்களை வழி கெடுப்பேன் என்று ஷைத்தான் தெளிவாகவே அறிவித்துள்ளான். மனதில் வீணாண எண்ணங்களை போட்டு அதன்படி வழி நடக்க வைப்பதன் மூலமே ஷைத்தானின் திட்டங்கள் நிறைவேறும். இப்படித்தான் அவன் ஆதம் - ஹவ்வா (அலை - ம்) இருவரையும் அணுகினான்.
''...அவர்களின் மானத்தை அவர்களுக்கு வெளிபடுத்தும் பொருட்டு அவர்களின் உள்ளங்களில் (தவறானவற்றை) ஊசலாட செய்தான், (அல் குர்ஆன் 7:20)
''அவன் மனிதர்களின் உள்ளங்களில் வீண் சந்தேகங்களை உண்டாக்குகிறான்'' (அல் குர்ஆன் 114:5)
ஷைத்தானின் செயல்பாடுகள் இப்படித்தான் இருக்கும். நிங்கள் எடுத்துக் காட்டிய வசனத்திற்கு அடுத்த வசனத்தை கவனியுங்கள் 'ஷைத்தான் அவர்களுக்கு வீணாண ஆசைகளை ஊட்டுகிறான்' என்ற இறைக்கூற்றும் வருகிறது.'//
எனது மறுப்பு
நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மைதான். காது மூக்கு குத்தி அல்லாஹ் படைத்த கோலத்தை நாம் மாற்றுவது ஏன் தெரியுமா? அல்லாஹ் தடுத்திருந்தும், அழகுக்காக செய்கிறோம்... இதனால் என்ன வந்துவிடப் போகிறது... இந்த செல்ல விளையாட்டால் எல்லாம் ஷைத்தான் வழிகெடுப்பானா?... என்று எமது உள்ளங்களில் ஷைத்தான் போட்ட வீணாண எண்ணங்களாலே அன்றி வேறெதனாலும் அல்ல. இதை வேறு எங்கும் போகாமல் இந்த வசனத்தில் இருந்தே தெரிந்து கொள்ளலாம்(நீங்கள் கூறியது போன்று 'அந்த வசனமே விடையை சொல்லி விடுகிறது' என்றுதான் நானும் சொல்கிறேன்) . 'கால்நடைகளின் காதுகளை அறுத்து விடும்படியும் அவர்களை ஏவுவேன்' என்ற வசனம் எதைச் சொல்கிறது? அல்லாஹ் படைத்த கால்நடைகளின் கோலத்தை மாற்றுவது எனும் அர்த்தமும் இவ்வசனத்துக்கு உண்டா இல்லையா? இது கால்நடைகளுக்கு மட்டும் உரிய சட்டம் என்று புரியக்கூடாது என்பதற்காகவோ என்னவோ இவ்வசனத்தைத் தொடர்ந்து 'இன்னும் அல்லாஹ்வின் படைப்புகளையுடைய கோலங்களை மாற்றும்படியும் ஏவுவேன்' என்று பொத்தாம் பொதுவாக அல்லாஹ் கூறியுள்ளான். கால்நடைகளிகளின் காதுகளை அறுக்கக் கூடாது என்று மட்டும் இவ்வசனம் கூறவில்லை. மனிதக் காதுகளையும் அறுக்கக் கூடாது என்றும்தான் இவ்வசனம் கூறகிறது. ஒரு வாதத்திற்காக கூறுகிறேன், விலங்கு வேளாண்மையில்கூட பல்வேறு தேவைகளுக்காகத்தான் விலங்குகளின் காதுகள் அறுக்கப்படுகின்றன. ஆனால் மனிதக் காதுகள் அழகு என்ற நொண்டிச் சாட்டுக்காக அறுக்கப்படுகின்றது. ஷைத்தான் மனித உள்ளங்களில் போட்ட வீணாண எண்ணங்களின் விளைவு விளங்குகிறதா? இங்கு வேறு உறுப்புகளைக் கூறாமல் காது என்றே அல்லாஹ் கூறியிருப்பதைப் பார்க்கும் போது ஆச்சரியமாக உள்ளது.
நீங்கள் வைக்கும் அடுத்த வாதம்
//'அடுத்து, அதே வசனத்தில் அல்லாஹ்வின் படைப்புகளின் கோலங்களை மாற்றுவேன் என்பதின் பொருள் என்ன என்ற சந்தேகம் வரும். அரபு மூலத்தில் 'கல்கல்லாஹ்' என்ற பதம் வருகிறது. இதற்கு அல்லாஹ்வின் படைப்பு என்று பொருள். இதை அல்லாஹ் படைத்த கோலத்தை மாற்றுவதாக விளங்குவதா... அல்லாஹ் படைத்த நோக்கத்தை மாற்றுவதாக விளங்குவதா...
அல்லாஹ் படைத்த நோக்கத்தை மாற்றுவதாக விளங்குவதுதான் சரியாகும். அதாவது எந்த நோக்கத்திற்காக மனிதனை இறைவன் படைத்தானோ அந்த நோக்கத்தை மாற்றுவதுதான் ஷைத்தான் மேற்கொண்ட சபதம் என்பதால் நோக்கத்தை மாற்றுவது என்றுதான் பொருள் கொள்ள வேண்டும். இறைவனை வணங்குவதற்காகவே மனிதன் படைக்கப்பட்டான். எந்த நோக்கத்திற்காக மனிதன் படைக்கப்பட்டானோ அந்த படைப்பின் நோக்கத்தை ஷைத்தான் மாற்றுகிறான். எனவே அந்த வசனத்தில் கோலத்தை மாற்றுவது என்று பொருள் எடுக்க முடியாது.
நம் கண்முன்னே எவ்வளவோ பேர்கள் காபிராகவே வாழ்ந்து காபிராகவே இறந்துப் போகிறார்;கள். இவர்களெல்லாம் கோலம் மாற்றப்பட்டு இறந்தவர்களா.. நோக்கம் மாற்றப்பட்டு இறந்தவர்களா... என்று நீங்களாகவே சிந்தித்தால் அந்த வசனத்தின் பொருள் என்ன என்பது உங்களுக்கு புரிந்து விடும். '
//எனது மறுப்பு
மருந்துக்குக் கூட அரபிமொழி தெரியாதவர்களாகத்தான் நீங்கள் இருக்கிறீர்கள் என்பதற்கு இதைவிட என்ன சான்று வேண்டும்?. 'ஃபலயுஅஃய்யிருன்ன (k)கல்கல்லாஹி' என்பதன் பொருள் 'அல்லாஹ் படைத்த நோக்கத்தை மாற்றுவது' என்று எந்த அகராதியில் இருந்து எடுத்தீர்கள்?
இது தவிர அல்குர்ஆனில் '(k)கல்கல்லாஹி' என்று வந்துள்ள இடங்கள் அனைத்திலும் அல்லாஹ்வின் படைப்பு என்ற அர்த்தத்திலேயே வந்துள்ளது.
உதாரணமாக
'தம் கர்ப்பக் கோளறைகளில், அல்லாஹ் படைத்திருப்பதை மறைத்தல் கூடாது.' பகரா 228
'வானங்கள், பூமி, இவற்றின் ஆட்சியையும் அல்லாஹ் படைத்திருக்கும் மற்றப் பொருள்களையும் அவர்கள் நோட்டமிடவில்லையா?' அல் அஃராப் 185 மேலும் பார்க்க அல்குர்ஆன் 10:5, 10:6, 16:48, 24:45, 29:44, 30:8, 30:30, 31:11, 45:22, 71:15
இவ்வனைத்து வசனங்களிலும் '(k)கல்கல்லாஹி' என்ற சொல்லே வந்துள்ளது. இங்கு நீங்கள் சொல்வது போன்று நோக்கம் என்ற பொருளில் வரவே இல்லை. அல்லாஹ் படைத்த நோக்கம் என்றுதான் விளங்கவேண்டும் என இவர்கள் வாதிடுவது எந்த அடிப்படையும் இல்லாதது.
ஒரு வாதத்திற்காக இவர்கள் செய்த அர்த்தத்தையே செய்து பார்ப்போம். அதாவது 'அல்லாஹ்வின் படைப்புகளுக்குரிய நோக்கத்தை மாற்றுவார்கள்'.இதுதான் இவர்கள் செய்யும் அர்த்தம். இவர்களின் இந்த கற்பனை அர்த்தப்படி அந்த வசனம் அவர்களுக்கு எதிரான வாதத்தையே கொடுக்கிறது. மனிதன் படைக்கப்பட்ட நோக்கத்தை மாற்றுவது எவ்வாறு தவறோ அவ்வாறுதான் மனிதனின் ஒவ்வொரு அங்கமும் படைக்கப்பட்ட நோக்கத்தை மாற்றுவதும். காதை அல்லாஹ் படைத்திருப்பதன் அடிப்படை நோக்கம் செவியேற்பதற்கே தவிர ஓட்டை போட்டு தொங்கவிடுவதற்கல்ல. எனவே ஓட்டை போட்டு காதில் எதையேனும் தொங்கவிடுவது அல்லாஹ் காதைப்படைத்த நோக்கத்தையே மாற்றுகிறது. இதே போல்தான் மூக்கு, நாக்கு, தொப்புள், கண் புருவம் இன்னும் Fashion என்று ஓட்டை போடும் எல்லா இடமும்.
துளையிட்டு காதணி அணிவது சுகாதாரத்தக்குக் கேடு என்று மருத்துவம் சொல்கிறது. பல்வேறு நோய்த் தொற்றுக்கும் சொறி சிறங்குகளக்கும்( Rash) அது காரணமாக அமைகிறது.
http://www.sciencedaily.com/releases/2004/02/040226072625.htm
http://www.wisegeek.com/what-can-i-do-if-my-earrings-cause-a-rash.htm
மேலும் HIV தொற்றுக்கும் இது ஏதுவாக அமைவதாக கருத்துகள் நிலவுகின்றன
http://www.cdc.gov/hiv/resources/factsheets/transmission.htm
இன்னும் இதில் வேடிக்கை என்னவென்றால் மனிதன் படைக்கப்பட்ட நோக்கத்தை மாற்றக்கூடாதாம். தர்க்கரீதியாக சிந்தித்துப் பாருங்கள். யாராவது ஒருவன் ஒரு பொருளை குறித்த ஒரு நோக்கத்துக்காக உருவாக்குகிறான் என்று வைத்தக்கொள்ளுங்கள். அப் பொருள் உருவாக்கப்பட்ட நோக்கத்தை மற்றவர்கள் எவ்வாறு மாற்றுவது? என்ற அடிப்படை அறிவுகூட உங்களுக்கு இல்லை. மற்றவர்கள் அதை வேறு விதமாக வேறு தேவைகளுக்குப் பயன்படுத்தலாம். அதனால் அவன் குறித்த அப்பொருளின் நோக்கத்தை செயல்படுத்தவில்லை என்றாகுமே தவிர குறித்த அப்பொருள் உருவாக்கப்பட்ட நோக்கம் மாறாது. நோக்கம் நோக்கமாகத்தான் இருக்கும். அல்லாஹ் மனிதனைப் படைத்த நோக்கம் அவனை வணங்கவே. மனிதன் அல்லாஹ்வை வணங்காது போனால் அல்லாஹ் மனிதனைப் படைத்த நோக்கம் மாறிவிடுமா என்ன? படைத்த இறைவன்தான் அவன் படைத்த நோக்கத்தை மாற்ற முடியுமே தவிர வேறு யாராலும் ஏன் ஷைத்தானாலும் அதை மாற்ற முடியாது. உங்கள் வசன நடையும் மொழிபெயர்ப்பும் அதைத்தான் கூறுகிறது. இறைவன் மனிதனைப் படைத்த நோக்கத்துக்கு எதிராக செயல்படுவது என்பது வேறு, இறைவன் மனிதனைப் படைத்த நோக்கத்தை மாற்றுவது என்பது வேறு. உங்கள் மொழிபெயர்ப்புப் பிரகாரம் இறைவன் மனிதனைப் படைத்த நோக்கத்தை மாற்றுவது என்பது சாத்தியமில்லாதது. இறைவன் மனிதனைப் படைத்த கோலத்தை மாற்றுவது என்று மொழிபெயர்த்துப் பாருங்கள். இதுவே சாத்தியமானதும் சத்தியமானதும் சரியான Logic உம் ஆகும்.
நம் கண்முன்னே எவ்வளவோ பேர்கள் காபிராகவே வாழ்ந்து காபிராகவே இறந்துப் போகிறார்கள் என்றால் அவர்கள் தாம் படைக்கப்பட்ட நோக்கத்துக்கு மாற்றமாக நடந்தார்களா? அல்லது இறைவன் மனிதனைப் படைத்த நோக்கத்தை மாற்றினார்களா? இணைவைத்து காபிராக இறந்தவன் வேறு, அல்லாஹ் படைத்த கோலத்தை மாற்றி பாவியாக இறந்தவன் வேறு. இருவருக்கும் உள்ள ஒரே ஒற்றுமை, அல்லாஹ் அவர்களைப் படைத்த நோக்கத்தை மறந்தது. (மாற்றியது அல்ல)
அடுத்த உங்கள் வாதம்
//காது மூக்கு குத்தி நகை அணிவது பெண்கள் தங்களை அழகுபடுத்திக் கொள்ளத்தானே தவிர இங்கு வேறு எந்த நோக்கமும் இல்லை. பெண்கள் நகை அணிவதையோ தங்களை அழகு படுத்திக் கொள்வதையோ இஸ்லாம் தடுக்கவில்லை. இதே அடிப்படையில் தான் நபித்தோழியர்கள் காதுகளில் கைகளில் கால்களில் நகை அணிந்திருந்தனர். தேவையின் நிமித்தம் அல்லாஹ்வின் பாதையில் தர்மம் செய்தனர். எனவே காது - மூக்கு குத்தக்கூடாது என்று தடுக்கும் எந்த ஆதாரத்தையும் நம்மால் காண முடியவில்லை.'//
எனது மறுப்பு
வேறு எந்த நோக்கமும் இல்லாமல் தங்களை அழகுபடுத்திக் கொள்ளும் நோக்கம் மட்டும் இருந்தால் எந்தத்தடையையும் மீறலாமோ? நான் மேலே சொன்ன ஷைத்தானின் செல்ல விளையாட்டுக்களான வெள்ளை முடிக்கு கருப்பு நிறம் இடுவது, பொய் சடை(முடி) போடுவது, முடியின் பாதியை மழித்து மீதியை விடுவது, Plastic Surgery செய்து தனது கோலத்தை மாற்றுவது, புருவத்தை பெண்கள் மழிப்பது, போன்றவற்றை வேறு எந்த நோக்கமும் இல்லாமல் பெண்கள் தங்களை அழகுபடுத்திக் கொள்ளும் நோக்குடன் மட்டும் செய்தால் அது கூடுமா?