போதை ஹலால் கர்ளாவியின் கண்மூடித்தனமான பத்வா!
Monday, February 7, 2011
அண்மையில் இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தினரின் மூத்த அறிஞர்களில்!ஒருவரானகலாநிதி யூஸுப் அல்கர்ளாவி அவர்கள் “ஸஹீபதுல் அரப்”பத்திரிகையில் வழங்கியுள்ள ஒரு விநோதமான பத்வா உலகளாவிய முஸ்லிம் உம்மத்தின் மத்தியில் குறிப்பாக மத்திய கிழக்கில்வாழும் முஸ்லிம்கள் மத்தியிலும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் இஸ்லாமிய அறிஞர்கள் மட்டத்திலும் கடும் விசனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
குறைந்தளவிலான அல்கஹோல்(போதை மூலப்பொருள்)கொண்டுள்ள உற்சாக பானமான “ரெட்புல்”பற்றிய வாசகரின் கேள்விக்கு பதிலளிக்கையில் பின்வருமாறு தெரிவித்தார்.
“குறைந்தளவிலான போதைப்பொருள் (அல்கஹோல்)இஸ்லாத்தில் ஹராமில்லை.குறிப்பாக இயற்கை முறையில் புளிக்கவைக்கப்பட்ட (போதையாக்கப்பட்ட)சிறியளவிலான 0.5% போதைப்பொருள் இஸ்லாத்தில் அனுமதிக்கப் பட்டதே!”
மேற்படி கர்ளாவி அவர்களின் பத்வாவை விமர்சித்த “ஷர்க்” எனும் கட்டார்நாட்டின் பத்திரிகை ஆசிரியர் மேற்படி பத்வா முஸ்லிம்களுக்கு மத்தியில் கடுமையான விசனத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும்,இந்த பத்வா கர்ளாவி அவர்களுக்கு தேவையில்லாத ஒரு பத்வா எனவும் தனது வெள்ளிக்கிழமை ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேற்படி பத்வாவின் மூலத்தை அறிய இங்கே சொடுக்கவும்.
ஆங்கிலத்தில்
அரபியில்
இதுபோன்ற இஸ்லாத்தின் பொன்னான போதனைகளுக்கு முற்றிலும் மாற்றமான,முஸ்லிம்களின் ஒழுக்க விழுமியங்களை சீர்குலைக்கின்ற பத்வாவை இந்த யூஸுப் அல்கர்ளாவி வெளியிடுவது இது தான் முதற்தடவையல்ல. இதற்கு மாறாக ஏற்கனவே இவர் சிறு அளவிலான வட்டி கூடுமென பத்வா வழங்கி தாயோடு விபச்சாரம் செய்வதற்குச் சமமென நபிகளாரால் எச்சரிக்கப்பட்டவட்டியை ஹலாலாக்கியதும்,இன்று வழிகெட்ட ஷீஆக்களின் விபச்சார முறையான “முத்ஆ” (தவணை முறை திருமணம்) வை ஹலாலாக்கி முஸ்லிம்களின் ஒழுக்கச் சீர்கேட்டுக்கு வித்திட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
மேற்படி ஆதாரமற்ற,அறிவுபூர்வமற்ற,உளறல்களை மறுதளிக்குமுகமாக நபி(ஸல்)அவர்களின்
“ஒரு பொருளை அதிகம் பாவிப்பதால் போதை ஏற்படும் என்றால் அப்பொருளைகுறைவாகப் பாவிப்பதும் ஹராமே”
எனும் ஜாபிர் பின் அப்துல்லாஹ்(ரலி)அவர்களால் அறிவிக்கப்படும் அபூதாவுதில் இடம்பெற்றிருக்கும் பொன்மொழி அமைந்துள்ளதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
سنن أبي داود – (ج 10 / ص 106)
3196 – حَدَّثَنَا قُتَيْبَةُ حَدَّثَنَا إِسْمَعِيلُ يَعْنِي ابْنَ جَعْفَرٍ عَنْ دَاوُدَ بْنِ بَكْرِ بْنِ أَبِي الْفُرَاتِ عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا أَسْكَرَ كَثِيرُهُ فَقَلِيلُهُ حَرَامٌ
பத்துக்கோப்பை மது அருந்தினால் போதை ஏற்படுமென்றிருந்தால் ஒன்பது கோப்பை அருந்துவது ஹலாலாகும், கஞ்ஞாவை ஆலிம்கள் மட்டும் குடிக்கலாம்,பாமர மக்களிடம் சொல்லக் கூடாது, விபச்சாரம் செய்து மாட்டிக்கொண்டால் “இவள் எனது மனைவி” என்று கூறி தண்டனையிலிருந்து தப்பிக்கொள்ளலாம் என்பது போன்ற மெளட்டீகங்களை உள்ளடக்கிய மத்ஹபுகளுக்கு வக்காலத்து வாங்கி அவை முஸ்லிம் சமூகத்தின் “சிந்தனைப் பாரம்பரியம்”!!என்று போற்றி வரும் இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கவாதிகளிடமிருந்து இவ்வாறான உளறல்கள் பத்வாக்களாக வெளிவருவதையிட்டு முஸ்லிம்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்
இதோ கர்ளாவியின் இணையத்திருந்து
حكم المشروبات التي تحتوي على نسبة من الكحول
موقع القرضاوي/15-4-2005
تلقى فضيلة العلامة الدكتور يوسف القرضاوي – رئيس الإتحاد العالمي لعلماء المسلمين – استفساراً من محمد لشيب(جريدة العرب) يقول فيه: فضيلة الشيخ الدكتور يوسف القرضاوي حفظه الله، السلام عليكم ورحمة الله وبركاته، (وبعد) صرح الدكتور محمد سيف الكواري المدير العام للهيئة القطرية للمواصفات والمقاييس أول أمس في ندوة حول تأثير مشروبات الطاقة، بأن هناك مواصفة قياسية قطرية بخصوص المشروبات تسمح بوجود ما نسبته0,05 % بالمائة من الكحول بالمشروبات الموجودة بالسوق.
ويؤكد الكواري على أن هذه النسبة طبيعية بفعل التخمر الطبيعي وغير مصنعة.
- فما رأي الشرع في تناول هذه المواد التي تتضمن هذه النسبة؟
- وهل التنصيص عليها قانونا جائز؟
- وماذا عن حديث الرسول صلى الله عليه وسلم: “ما أسكر كثيره فقليله حرام”؟
الجواب:
وقد أجاب فضيلته على السائل بقوله: الحمد لله، والصلاة والسلام على رسول الله، وعلى آله وصحبه، ومن اتبعه إلى يوم الدين.
(وبعد)
هذه النسبة: 0.5% خمسة من مائة في المائة – وبعبارة أخرى: خمسة في الألف – لا أثر لها في التحريم، لأنها نسبة ضئيلة جدا، وكما قال الدكتور: إنها تحدث بفعل التخمر الطبيعي، وليست مصنعة، ولذلك لا أرى حرجا من تناول هذا المشروب.
والشريعة الإسلامية شريعة واقعية، ومن واقعيتها هنا: أنها وضعت قاعدة مهمة جاء بها الحديث الشريف، وهي أن “ما أسكر كثيره، فقليله حرام”. وأعتقد أن أي إنسان شرب من هذا المشروب ما شرب فلن يسكره، ولذا لا يحرم القليل منه.
وأما التنصيص على هذه النسبة، فهو أمر جائز ولا حرج فيه، حتى يعرف الناس الحقيقة، ولا يصدقوا الشائعات التي يروجها بعض الناس أحيانا لأغراض شتى، وبيان الأمور على حقيقتها لا ضرر فيه بحال.
وأود أن أنبه على أن هذه النسبة من الكحول وما في حكمها، إذا أضيفت عمدا إلى المشروب لغير حاجة صحية أو طبية، أو نحو ذلك، فإن من أضافها يأثم على ذلك. وإن لم يكن مؤثرا في إباحتها لشاربها.
وبالله التوفيق
http://www.qaradawi.net/site/topics/article.asp?cu_no=2&item_no=5881&version=1&template_id=130&parent_id=17
0 கருத்துரைகள்:
Post a Comment