கூட்டு துஆவும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவும்(?)
Tuesday, February 8, 2011
மார்க்க விஷயத்தில் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் எதனைக் காட்டித் தந்துள்ளார்களோ அவற்றைத் தான் நாம் பின்பற்ற வேண்டும் அவையல்லாத எந்த ஒன்றைப் பின்பற்றினாலும் இறைவன் ஏற்றுக் கொள்ள மாட்டான் என்பது இஸ்லாமிய அடிப்படை.
ஆனால் இன்றைக்கு முஸ்லீம்கள் என்று தங்களை சொல்லிக் கொள்பவர்கள் மார்க்கத்தில் இல்லாத பல வழிமுறைகளை மார்க்கமாக நினைத்து செயல் படுகிறார்கள்.
இப்படி செயல்படுபவர்களுக்கு பின்னனியாக இருப்பவர்கள் உலமாக்கள்(?)என்று சொல்லப்படக் கூடியவர்கள் தான்.
இந்த உலமாக்கள் தங்கள் சுய நலத்திற்காக மார்க்கத்தில் இல்லாத பித்அத்களை ஆதரித்து வக்காலத்து வாங்குவதை பாருங்கள்.
ஜம்மிய்யதுல் உலமா(?)வின் பத்வா.
மேற்கண்ட ஜம்மிய்யதுல் உலமாவின் பத்வாவில் உள்ள அபத்தங்களை ஒவ்வொன்றாக ஆராய்வோம்.
ஜ.உலமா(?)வின் வாதம்:
துஆ என்பது மார்க்கத்தில் உள்ள பிரதானமான ஒரு வணக்கமாகும்.
நமது பதில்:
ஜம்மிய்யதுல் உலமாவின் முதலாவது வாசகத்தை நாமும் ஏற்றுக் கொள்கிறோம்.துஆ என்பது மார்க்கத்தில் உள்ள ஒரு முக்கியமான விஷயம் என்பதில் நமக்கு எந்தவொரு மாற்றுக் கருத்தும் இல்லை.
ஏன் எனில் மார்க்கம் இப்படி சொல்லித் தருகிறது.
தான் பலவீனமானவன் என்பதையும் இறைவன் சர்வ சக்தி படைத்தவன் என்பதையும் பிரார்த்தனையின் மூலம் மனிதன் ஒப்புக் கொள்கின்றான். எனவே அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுமாறு திருக்குர்ஆனில் பல இடங்களில் கூறப்பட்டுள்ளது. மேலும் நபி (ஸல்) அவர்களும் இதை வலியுறுத்தியுள்ளார்கள்.
حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ مَنْصُورٍ عَنْ ذَرٍّ عَنْ يُسَيْعٍ الْحَضْرَمِيِّ عَنْ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الدُّعَاءُ هُوَ الْعِبَادَةُ قَالَ رَبُّكُمْ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ رواه ابوداود
”பிரார்த்தனை தான் வணக்கமாகும். (ஏனெனில்) உங்கள் இறைவன் கூறுகின்றான்: என்னை அழையுங்கள்! உங்களுக்குப் பதிலளிக்கின்றேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : நுஃமான் பின் பஷீர் (ரலி) நூற்கள் : அபூதாவூத் (1264) திர்மிதீ (2895 3170 3294) இப்னுமாஜா (3818) அஹ்மத் (17629)
அந்த அடிப்படையில் துஆ என்பது மார்க்கத்தில் உள்ள ஒரு பிரதான வணக்கம் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.
ஜ.உலமாவின் வாதம் :
துஆவை தனியாக செய்வதற்கு ஆதாரங்கள் இருப்பதைப் போன்று கூட்டாக செய்வதற்கும் ஆதாரங்கள் இருக்கின்றன.
நமது பதில் :
துஆவை எப்படி செய்ய வேண்டும் என திருமறைக் குர்;ஆனும் ஹதீஸ்களும் மிகத் தெளிவாக நமக்க அறிவித்துத் தந்துள்ளன.அப்படியிருக்கும்; போது நாம் அதில் சொந்தக் கருத்தை நுழைப்பது அதிகப் பிரசங்கித்தனம் ஆகும்.
நீங்கள் சொல்வதைப் போல் ஆதாரங்கள் இருந்தால் அவற்றையும் சேர்த்து வெளியிடுங்கள் நாம் அவை ஒவ்வொன்றுக்கும் பதில் தர காத்துக் கொண்டிருக்கிறோம்.
ஜ.உலமா(?)வினரே! மார்க்கத்தின் தீர்பைப் பாருங்கள்.
பிரார்த்தனை செய்பவரிடம் முக்கியமாக பின்வரும் காரியங்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று குர்ஆனும் நபிமொழிகளும் நமக்குக் கட்டளையிடுகின்றன.
1. பணிவுடன் கேட்க வேண்டும்; அதிகார தோரணையில் பிரார்த்தனை அமையக் கூடாது.
2. ஆசையோடு கேட்க வேண்டும்.
3. தன்னைப் படைத்த இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றோம் என்ற பயம் இருக்க வேண்டும்.
4. தன் கோரிக்கையை அல்லாஹ் நிறைவேற்றி வைப்பான் என்ற மன உறுதி வர வேண்டும்.
5. பிரார்த்தனை அடுத்தவர் கேட்கும் வண்ணம் இல்லாமல் மெதுவாக இருக்க வேண்டும்.
மேற்குறிப்பிட்ட முக்கியமான இந்த ஐந்து நிபந்தனைகளுக்குரிய ஆதாரங்கள்:
ادْعُوا رَبَّكُمْ تَضَرُّعًا وَخُفْيَةً إِنَّهُ لَا يُحِبُّ الْمُعْتَدِينَ(55) سورة الأعراف
உங்கள் இறைவனைப் பணிவுடனும் இரகசியமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள்! வரம்பு மீறியோரை அவன் நேசிக்க மாட்டான். (அல்குர்ஆன் 7:55)
وَادْعُوهُ خَوْفًا وَطَمَعًا إِنَّ رَحْمَةَ اللَّهِ قَرِيبٌ مِنْ الْمُحْسِنِينَ(56) سورة الأعراف
அச்சத்துடனும் நம்பிக்கையுடனும் அவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்! அல்லாஹ்வின் அருள் நன்மை செய்வோருக்கு அருகில் உள்ளது. (அல்குர்ஆன்7:56)
تَتَجَافَى جُنُوبُهُمْ عَنْ الْمَضَاجِعِ يَدْعُونَ رَبَّهُمْ خَوْفًا وَطَمَعًا وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنفِقُونَ(16
அச்சத்துடனும் எதிர்பார்ப்புடனும் தமது இறைவனைப் பிரார்த்திக்க அவர்களின் விலாப்புறங்கள் படுக்கைகளி ருந்து விலகும். நாம் வழங்கியவற்றி ருந்து (நல் வழியில்) செலவிடுவார்கள். (அல்குர்ஆன் 32:16)
إِذْ نَادَى رَبَّهُ نِدَاءً خَفِيًّا(3) سورة مريم
அவர் (ஜக்கரியா) தமது இறைவனை இரகசியமாக அழைத்துப் பிரார்த்தித்தார்.(அல்குர்ஆன் 19:3)
6338حَدَّثَنَا مُسَدَّدٌ حَدَّثَنَا إِسْمَاعِيلُ أَخْبَرَنَا عَبْدُ الْعَزِيزِ عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَعَا أَحَدُكُمْ فَلْيَعْزِمْ الْمَسْأَلَةَ وَلَا يَقُولَنَّ اللَّهُمَّ إِنْ شِئْتَ فَأَعْطِنِي فَإِنَّهُ لَا مُسْتَكْرِهَ لَهُ رواه البخاري
”நீங்கள் பிரார்த்தித்தால் (உங்கள்) கோரிக்கையை வலியுறுத்திக் கேளுங்கள்.‘அல்லாஹ்வே! நீ நினைத்தால் எனக்கு வழங்கு‘ என்று சொல்ல வேண்டாம்.(வலியுறுத்திக் கேட்பது இறைவனை நிர்ப்பந்திப்பது ஆகாது.) ஏனெனில் அவனை நிர்ப்பந்திப்பவர் எவருமில்லை” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
நூல்கள் : புகாரி (6338) முஸ்லிம் (4837)
அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
நூல்கள் : புகாரி (6338) முஸ்லிம் (4837)
4838 حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ وَقُتَيْبَةُ وَابْنُ حُجْرٍ قَالُوا حَدَّثَنَا إِسْمَعِيلُ يَعْنُونَ ابْنَ جَعْفَرٍ عَنْ الْعَلَاءِ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا دَعَا أَحَدُكُمْ فَلَا يَقُلْ اللَّهُمَّ اغْفِرْ لِي إِنْ شِئْتَ وَلَكِنْ لِيَعْزِمْ الْمَسْأَلَةَ وَلْيُعَظِّمْ الرَّغْبَةَ فَإِنَّ اللَّهَ لَا يَتَعَاظَمُهُ شَيْءٌ أَعْطَاهُ رواه مسلم
உங்களில் எவரேனும் பிரார்த்தித்தால் ‘நீ நாடினால் என்னை மன்னிப்பாயாக!‘என்று கேட்க வேண்டாம். (உங்கள்) கோரிக்கையை வலியுறுத்திக் கேளுங்கள்.மகத்துவம் மிக்கதைக் கேளுங்கள். ஏனெனில் அல்லாஹ் வழங்கிய எந்த ஒன்றும் அவனுக்குப் பெரிதாகத் தெரிவதில்லை என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : முஸ்லிம் (4838)
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : முஸ்லிம் (4838)
2992 حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ عَاصِمٍ عَنْ أَبِي عُثْمَانَ عَنْ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَكُنَّا إِذَا أَشْرَفْنَا عَلَى وَادٍ هَلَّلْنَا وَكَبَّرْنَا ارْتَفَعَتْ أَصْوَاتُنَا فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا أَيُّهَا النَّاسُ ارْبَعُوا عَلَى أَنْفُسِكُمْ فَإِنَّكُمْ لَا تَدْعُونَ أَصَمَّ وَلَا غَائِبًا إِنَّهُ مَعَكُمْ إِنَّهُ سَمِيعٌ قَرِيبٌ تَبَارَكَ اسْمُهُ وَتَعَالَى جَدُّهُ رواه البخاري
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். நாங்கள் ஒரு பள்ளத்தாக்கில் (மேடான பகுதியில்) ஏறும் போது ‘லாயிலாஹ இல்லல்லாஹ் லி வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை‘என்றும் ‘அல்லாஹு அக்பர் லி அல்லாஹ் மிகப் பெரியவன்‘ என்றும் கூறி வந்தோம். (ஒரு கட்டத்தில்) எங்கள் குரல்கள் உயர்ந்து விட்டன. அப்போது நபி (ஸல்) அவர்கள் ”மக்களே! மெதுவாகக் கூறுங்கள்! ஏனெனில் நீங்கள் காது கேட்காதவனையோ அல்லது மறைந்திருப்பவனையோ அழைக்கவில்லை. அவன் உங்களுடனே இருக்கின்றான். அவன் செவியேற்பவன்;அருகிலிருப்பவன்; அவனது பெயர் நிறைவானது. அவனது மதிப்பு உயர்ந்தது”என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ மூஸா (ரலி) நூல்கள் : புகாரி (2992 4205 6384 6409 6610 7386) முஸ்லிம் (4873 4874)
முஸ்லிமின் (4874வது) அறிவிப்பில் ‘லாயிலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர்’ என்று அழைத்ததாக இடம் பெற்றுள்ளது.
மேற்கூறப்பட்ட குர்ஆன் வசனங்கள் நபிமொழிகளின் மூலம் விளங்கப்படும் பிரார்த்தனை ஒழுங்குகளில் ஒன்றான ‘இரகசியமாகக் கேட்க வேண்டும்’ என்ற ஒழுங்கை பல்வேறு இடங்களில் முஸ்லிம்கள் மீறுவதைப் பார்க்கின்றோம்.
ஐவேளைத் தெழுகைக்குப் பிறகு இமாம் மைக் வைத்து சப்தமிட்டு துஆச் செய்வதையும்இ பின்னால் உள்ளவர்கள் (அதன் பொருள் கூட விளங்காமல்) ஆமீன் என்று சப்தமிட்டுக் கூறுவதையும் பார்க்கிறோம்.
மேலும் மாநாடு பொதுக்கூட்டங்கள் முடிவிலும் ஒருவர் சப்தமிட்டு துஆ கேட்க மற்றவர்கள் சப்தமிட்டு ஆமீன் கூறுவதையும் காண்கிறோம்.
இதைப் போன்று குர்ஆன் ஓதி முடிக்கும் போது கத்தம் ஃபாத்திஹாக்கள் என்ற பித்அத்தை நிறைவேற்றும் போது வீடு குடி புகும் போது மவ்லிது ஓதும் போதுஇ திருமணம் நடக்கும் போது மண்ணறையில் அடக்கம் செய்யும் போது இப்படிப் பல இடங்களில் திருமறைக் குர்ஆனின் (7:55) வசனத்தை நேரடியாக மீறுவதைக் காண்கிறோம்.
பொதுவாக பிரார்த்தனையை இரகசியமாகக் கேட்க வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான். எந்த வகைப் பிரார்த்தனையாக இருந்தாலும் இரகசியமாகவே கேட்க வேண்டும். இதற்கு மாற்றமாக சப்தமிட்டுக் கேட்க வேண்டுமானால் அந்த வகைப் பிரார்த்தனைக்கு தெளிவான சான்று குர்ஆன்இ நபிமொழிகளில் இருக்க வேண்டும்.
எதற்கு சப்தமிட்டுக் கேட்க அனுமதிக்கப் படுகின்றதோ அந்தப் பிரார்த்தனையைத் தவிர வேறு எதற்கும் இதைச் சான்றாக எடுத்துக் கொள்ளவும் கூடாது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஜம்இய்யதுல் உலமாவில் அங்கத்துவம் பெற்ற உலமாக்கள் பத்வா கொடுப்பதற்கு தகுதி பெற்றவர்கள் என்ற எண்ணம் மாத்திரம் இருந்தால் போதாது மார்க்கத்தின் தெளிவும் வேண்டும் என்பதை குறிப்பிட்ட உலமாக்கள் மனதில் நிருத்திக் கொள்ள வேண்டும்.
ஜ.உலமாவின் வாதம் :
தொழுகையின் பின் கூட்டாக துஆ கேட்பதற்கு நபிவழியில் ஆதாரம் கிடையாது என்பதால் ஆலிம்களில் ஒரு சாரார் அது கூடாது என்று கருதுகின்றனர்.அதே வேலை தொழுகைக்குப் பின் கேட்கப்படுகின்ற பிரார்த்தனை ஏற்கப்படுகின்றது.கூட்டாகக் கேட்கப்படும் துஆ மறுக்கப்படுவதில்லை.என்பன போன்ற கருத்துக்கள் உள்ளடங்கிய ஹதீஸ்களை அடிப்படையாகக் கொண்டு இம்முறை கூடுமென்று வேறொரு சாரார் கருதுகின்றனர்.
நமது பதில் :
தொழுகையின் பின் கூட்டாக துஆ கேட்பதற்கு நபிவழியில் ஆதாரம் கிடையாது என்பதால் ஆலிம்களில் ஒரு சாரார் அது கூடாது என்று கருதுகின்றனர்.மேற்கண்ட ஜம்மிய்யதுல் உலமாவின் முதல் வாதத்தை சிந்தித்துப் பாருங்கள் தொழுகைக்குப் பின் கூட்டாக துஆ கேட்பதற்கு நபிவழியில் ஆதாரம் கிடையாது என்பதால் தான் ஆலிம்களில் ஒரு சாரார் இதனை மறுக்கிறார்கள் என்று சொல்லிக் கொண்டு பின்னால் அதனை ஜ.உலமாவே சப்பைக்கட்டு கட்டுவதைப் பார்க்கிறோம்.
ஜ.உலமாவின் வாதம் :
விரும்பியவர்கள் தத்தமது ஆய்வுகளுக்கேற்ப கருத்துக்களை தேர்ந்தெடுத்து செயற்படுத்துவதில் எத்தவறும் இல்லை.
நமது பதில் :
ஜ.உலமாவினரே! தாங்கள் எந்த அடிப்படையில் கூட்டு துஆ இருக்கிறது என்று சொல்பவர்களை ஆய்வு செய்து முடிவெடுத்தவர்கள் என்று கணித்தீர்கள் அவர்கள் உங்களிடத்தில் தங்கள் ஆய்வின் முடிவை தந்தார்களா என்ன?
ஒரு அபத்தத்தை ஆய்வு என்று சொல்லி மார்க்கத்தின் உண்மை நிலைபாட்டை நிலை நிருத்த வேண்டிய நீங்கள் இப்படி வலைந்து கொடுப்பதலால் தான் நமது சமுதாயத்தில் இன்னும் எத்தனையோ மூட நம்பிக்கைகள் புரையோடிப் போயுள்ளன.
பகிரங்கமாக ஒரு பித்அத்துக்கு வக்காலத்து வாங்கும் நீங்கள் எப்படி குர்ஆன் ஹதீஸின் அடிப்படையில் பேசுவீர்கள்.
நமது மார்க்கத்தில் இல்லாத ஒரு செயலை யார் செய்கிறாரோ அது (இறைவனிடம்) நிராகரிக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி )
நூல்: முஸ்லி ம் (3541)
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி )
நூல்: முஸ்லி ம் (3541)
செய்திகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம் (குர்ஆன்) ஆகும். வழிகாட்ட ல் சிறந்தது முஹம்மதின் வழிகாட்டலாகும். செயல்களில் தீயவை (மார்க்கத்தின் பெயரால்) புதிதாக உண்டாக்கப் படுபவை ஆகும். (மார்க்கத்தின் பெயரால் புதிதாக உருவாக்கப்படும்) ஒவ்வொரு புதுமையும் வழிகேடு ஆகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி )
நூல்: முஸ்லி ம் (1573)
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி )
நூல்: முஸ்லி ம் (1573)
நஸயீயின் அறிவிப்பில்… ”ஒவ்வொரு வழிகேடும் நரகில் கொண்டு சேர்க்கும்”என்று இடம் பெற்றுள்ளது.
மேற்கண்ட ஹதீஸ்கள் எதனை சொல்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா? தெரிந்தாலும் அதன் அடிப்படையில் பத்வாக் கொடுக்கப் போகிறீர்களா என்ன?
ஜ.உலமாவின் வாதம் :
வேற்றுமையில் ஒற்றுமை
நமது பதில் :
இதுதான் ஜ.உலமாவின் தாரக மந்திரம் இதன் அடிப்படையில் மார்க்க விஷயத்தில் விட்டுக் கொடுப்பு செய்து பித்அத்தை செய்தாலும் பரவாயில்லை ஒற்றுமை சீர் குலையக் கூடாது.இப்படிப் பட்டவர்கள் தங்களை எப்படி ஆலிம்கள் என்று கூறிக்கொள்ள முடியும்? சிந்தித்துப் பாருங்கள்.
குறிப்பு : ஜம்மிய்யதுல் உலமாவின் மேற்கண்ட பத்வா அவர்களின் அதிகாரப் பூர்வ இணையதளத்தில் இருந்து எடுக்கப் பட்டதாகும்.
அதில் உள்ள இன்னும் பல மார்க்கத்திற்கு விரோதமான பத்வாக்கள் தொடர்பாக தொடர்ந்து நாம் எழுதுவோம் இன்ஷா அல்லாஹ்.
தேவைப்பட்டால் கூட்டு துஆ தொடர்பாக எதிர் தரப்பினர் வைக்கும் வாதங்களுக்கும் அடுக்கடுக்காக பதில் தரப்படும்.
நன்றி
www.rasminmisc.tk
0 கருத்துரைகள்:
Post a Comment