வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மீண்டும் உதவி வேண்டுகிறது ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத்.(SLTJ)
Saturday, February 5, 2011
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகள் முழுவதும் கடுமையான வெள்ளத்தினால் பாதிக்கப் பட்டதும் 10 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப் பட்டு சுமார் 32 பேர் உயிரிழந்ததுடன் 12க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போனதும் நாம் அறிந்ததே!
இதே நேரம் வெள்ளம் நின்று விட்டதோ என்று நம்பியவர்களுக்கு மீண்டும் பேரிழப்பாக வெள்ளம் அணை கடந்துள்ளது. இம்முறை வடகிழக்குக்கு மாத்திரம் பாதிப்பு ஏற்படாமல் இலங்கையின் பல பாகங்களும் பாதிப்பை எதிர் நோக்கியுள்ளன.
வடக்கு ,கிழக்கு மாகாணம்.வடகிழக்கு ,வடமத்திய மாகாணம், மத்திய மாகாணம் என பல மாகாணங்கள் வெள்ளத்தில் பாதிக்கப் பட்டுள்ளன.
பொலன்னறுவை,மட்டக்களப்பு போன்ற மாவட்டங்கள் முழுமையாக வெள்ளத்தில் முழ்கிவிட்டன. இதே நேரம் அனுராதபுர மாவட்டத்திலும் மக்கள் பெரும் இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ளார்கள்.
அதாவது கந்தலாய் குளத்தின் பல வான் கதவுகள் திறக்கப்பட்டு விளை நிளங்கள் அழிந்து விட்டன. இலங்கையின் மிகப் பெரும் குளங்களான சோனாநாயக்க சமுத்திரம் மற்றும் கலாவாவி (கலாவெவ) போன்றவற்றின் வான் கதவுகளும் திறந்துவிடப்பட்டுள்ளதுடன்.
கலாவாவி மற்றம் பளலுவாவியைப் பிரிக்கும் கலா ஓயா ஆற்றின் வான் கதவுகள் திறக்கபட்டதினால் இரண்டு ஊர்களுக்கும் இடையிலான போக்குவரத்து அதிகம் பாதிக்கப்பட்டள்ளது.
இதே நேரம் கந்தலாய் குளத்தின் வான் கதவுகள் திறக்கப் பட்டதினால் கந்தலாய் மற்றும் பொலன்னறுவைப் பகுதிகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன் கிழக்கின் பல பகுதிகள் மீண்டும் முழுமையாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டம் ஓட்டமாவடி சென்ற முறையை விட பண்மடங்கு அதிகமாகவே வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது.
அதே போல் காத்தான்குடி, காங்கையன் ஓடை உள்ளிட்டப் பகுதிகள் மிகவும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இதே நேரம் மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியும் துண்டிக்கப் பட்டள்ளது.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரணம் வழங்க வேண்டி உதவி கோறுகிறது ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத்.
கிழக்கிலங்கையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் கொழும்பு முழுவதும் பணம் மற்றும் பொருட்களை வசூல் செய்து மட்டக்களப்பு,காத்தான் குடி , ஓட்டமாவடி, மீராவோடை , செம்மனோடை,காங்கையன் ஓடை, பொலன்னறுவை,மாணிக்கம்பிட்டி,கல்எல போன்ற இடங்களுக்கு நேரடியாகச் சென்று அவர்களுக்கு தேவையான உளர் உணவுப் பொருட்கள் மற்றும் குழந்தைகளுக்குத் தேவையான பால் மா கொசு வளை , போர்வை மற்றம் டவல்,பாய் போன்றவர்றையும் வழங்கியது.
நிவாரணம் வழங்கிய காட்சிகளைப் பார்க்க தலைப்புகளை க்லிக் செய்யவும்.
இந்த உதவியை வழங்குவதற்காக கொழும்பு முழுவதும் வசூல் செய்யப் பட்டதுடன் வெளிநாடு வாழ் சகோதரர்களும் தங்களால் முடிந்த உதவிகளை வழங்கியது குறிப்பிடத்தக்கதாகும்.
இதே நேரம் தற்போது ஏற்பட்டுள்ள வரலாறு காணாத சீற்றத்திற்காக ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் மீண்டும் களத்தில் குதித்து பாதிக்கப்பட்ட மக்களுக்காக பணம்,மற்றும் பொருட்களை வசூல் செய்யும் பணியில் இறங்கியுள்ளது.
இந்தப் பணிக்கு சகோதர்கள் அனைவரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்யும் படியும், மற்ற சகோதரர்கள் மூலமாகவும் வசூல்கள் செய்து உதவி செய்யுமாறும் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் தலைமையகம் அன்பாய் கேட்டுக் கொள்கிறது.
ஜமாத்தின் வங்கிக் கணக்கிலக்கம்.
SRILANKA THAWHEED JAMATH,
HATTON NATIONAL BANK
MARADANA BRANCH
A/C NO : 108010104971
தொடர்புகளுக்கு.
ஜமாத்தின் சமூக சேவைப் பொருப்பாளர் சகோதரர் முயீன் - 0777176321
தேசிய தலைவர் சகோதரர் ரியால் - 0777255467
பொதுச் செயளாலர் சகோதரர் அப்து ராசிக் - 0771524524
பொருளாலர் சேக் கமர்தீன் - 0777413849
0 கருத்துரைகள்:
Post a Comment