முஸ்லிம் பெண்கள் சினிமாவில் நடிக்கலாம்!
Monday, February 7, 2011
யூசுஃப் அல் கர்ளாவியை ஓர் மார்க்க அறிஞராக காண்பிக்க, மார்க்கத்தின் அடிப்படைகள் தெரியாத சில கனவுலக இயக்கங்கள் முயற்சிக்கின்றன. யூசுஃப் அல் கர்ளாவிக்கு எப்படி இஸ்லாத்தின் அடிப்படைகளும் ஒழுக்கப்பண்பாடுகளும் தெரியவில்லையோ அதேபோல அவரது விசிறிகளுக்கும் தெரியவில்லை. இவர் எழுதிய பல நூல்களில், கட்டுரைகளில் யூத, கிறஸ்தவர்களுக்கு கூஜா தூக்கும் நிலை தாராளமாக காணக்கூடியதாக உள்ளது. உலகத்தில் ஒழுக்கக்கேட்டையும் பண்பாட்டு சீரழிவையும் பரப்புபவர்களில் யூத, கிறிஸ்தவர்கள் முன்னிலை வகிக்கின்றனர். இவர்களுடைய பிரதான தொழிலான இசையும் சினிமாவும் யூசுஃப் அல் கர்ளாவிக்கு ஹலாலாக தெரிகிறது.
இசையும் சினிமாவும் ஹலால் என்று தனது ஃபத்வா முஆஸிராவில் குறிப்பிடுகின்றார் இவர்.
இசை ஹலால் என்று ‘அல் ஹலால் வல் ஹராம்‘ என்ற புத்தகத்தில் பக்கம் 391-ல் குறிப்பிடுகின்றார்.
முஸ்லிம் பெண்கள் நாடகங்கள் மற்றும் சினிமாவில் பங்கேற்பது தடையில்லை என்று குறிப்பிடுகிறார். (ஜரீததுல் அக்பார் எண் 401)
ஒழுக்கத்தையும் பண்பாட்டையும் குழிதோண்டி புதைக்கும் வெறித்தனமான ஆடலுடன் கூடிய பாடல் காட்சிகளுடன் வெளிவரும் இன்றைய சினிமாவின் நிலையை கொஞ்சம் மனக்கண்முன் நிறுத்தி பாருங்கள்.
தொப்புளில் ஆம்லெட் போடுவதும், பம்பரம் விடுவதும், டூ பீஸ் நீச்சல் உடையுடன் பெண்களை அலையவிட்டு காமவெறியாட்டம் புரிவதும் படுக்கை அறை காட்சிகளை அப்பட்டமாக காண்பிக்கும் சினிமா, இவருக்கு ஹலாலாம். பணத்திற்காக முக்கால் நிர்வாணமாக நடிக்கும் இந்த சினிமாவில் முஸ்லிம் பெண்களும் பங்குபெறலாமாம். கிழவனைக்கூட பாலியல் துஷ்பிரயோகம் செய்யத்தூண்டும் இசையையும் சினிமாவையும் ஹலால் என்பவன் உண்மையில் இஸ்லாத்தை நேசிப்பவனாக இருக்கவே முடியாது.
நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து ‘எனக்கு விபச்சாரம் செய்ய அனுமதி தாருங்கள்‘என்று கேட்டார். அதற்கு நபியவர்கள் அவரை அழைத்து, ‘உன்னுடைய தாயுடனோ அல்லது சகோதரியுடனோ யாரும் விபச்சாரம் செய்வதை நீர் விரும்புவீரா?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர், ‘நான் விரும்பமாட்டேன்‘ என்று கூறினார்.அப்போது நபியவர்கள் ‘நீர் யாருடன் விபச்சாரம் செய்ய விரும்புவீரோ,அவளுடைய சகோதரனும் உறவினரும் இதை விரும்பமாட்டார்கள்‘ என்று கூறினார்கள்.
சினிமாவையும் பாடலையும் ஹலால் என்று கூறும் யூசுஃப் அல் கர்ளாவி, தனது மகளை, மனைவியை சினிமாவில் நடிக்க அனுமதிப்பாரா? தினம் ஒரு அந்நியனோடு படுக்கையறை காட்சிகளில் முக்கால் நிர்வாணமாய் நடிக்க சம்மதிப்பாரா? அல்லது இவரை பின்பற்றும் நவீன கிலாஃபத் கோஷதாரிகளே! இஸ்லாமிய ஆட்சியை உலகம் முழுவதும் கொண்டுவர துடிக்கும் இரகசிய காவலர்களே! உங்கள் குடும்பத்தினரை இதுபோல் சினமாவில் நடிக்க அனுமதிப்பீர்களா?
அவர்கள் உமக்குப் பதிலளிக்கா விட்டால் அவர்கள் தமது மனோ இச்சைகளையேபின்பற்றுகின்றனர் என்பதை அறிந்து கொள்வீராக! அல்லாஹ்விடமிருந்து கிடைத்தநேர் வழியின்றி தனது மனோ இச்சையைப் பின்பற்றியவனை விட வழி கெட்டவன் யார்? அல்லாஹ் அநீதி இழைக்கும் கூட்டத்திற்கு நேர் வழி காட்ட மாட்டான்.
(திருக்குர்ஆன் 28:50)
0 கருத்துரைகள்:
Post a Comment