தென்மாகானத்தில் வெகு விமரிசியாக புகழப்படும் அவுலியா(?)
இலங்கையில் ஒவ்வொரு பகுதிக்கும் புகழ் பெற்ற அவுலியாக்கள்(?) இருப்பர்கள். அவர்கள் பல கராமத்துகளை நிகழ்த்தியதாகவும் கதைகளை கட்டி வைத்திருப்பார்கள். அது போன்ற ஒரு கஃபஸா தான் இந்த ஷாக் மதாரின் கதையும்.
இவர் இந்தியாவில் உல்ல “மகன்பூர்“ என்ற ஊரில் பிரந்ததாகவும் ஹலபில் இருவிதமான செய்திகளை கூறுவார்கள். எப்படி இருந்தாலும் இவரின் பிரப்பில் உள்ள அதிசயங்களைப் பார்த்தால் அது நம்மை வியக்க வைத்து விடும். உலகில் பிறந்தவர்ளில் மிகவும் அதிசயமும் சிறப்பும் வாய்ந்தவர் தான் ஈஸா(அலை) அவர்கள். அவர்கள் தந்தையின்றி பிறந்தார்கள். பிறந்ததும் பேசி தான் இறைவனின் துதர் என்பதை உறுதிப்படுத்தினார்கள்.
மதாரின் பிறப்பில் உள்ள அதிசயங்கள்
1.பிறக்கும் போதே ஆடையோடு பிறந்தார்.
நமது விளக்கம்
பெண்ணின் கருவரையில் விந்தாக ஆரம்பித்து அது சினை முட்டையாக பிரகு சதை கட்டியக பிரகு எழும்பாக மாரி அதற்கு இறைச்சியை அணிவித்தோம் என்று இறைவன் தனது திருமறையில் மனித பிறப்பை பற்றி சொல்கிறான். (அல்குர்ஆன் 23 14)
நான்கு மாதங்களில் முழு மனிதனாக உருவாக்கம் பெற்றதும் ஆடை அணிவிக்கப்பட்டதா? அல்லது வயிற்றிலிருந்து குழந்தையாய் வெளிவரும் போது அணிவிக்கப்பட்டதா? என்று தெரியவில்லை. அவரின் தாயுடைய வயிற்றுக்குள் எப்படி அந்த ஆடை போயிருக்கும்(?) உள்ளே நெசவுத் தொழிலும் நடந்திருக்கிறது போல.!
இன்றைக்கு குழந்தையைப் பெற்றெடுப்பதற்காக தாய்மார்கள் எவ்வளவு வேதனைப் படுகிறார்கள். அத்துனைக்கும் உடம்பில் எவ்வித ஆடையுமில்லாமல். அந்தக் குழந்தைகள் பிறக்கின்றனர்.
2.அந்த ஆடையோடே மரணித்தார்
நமது விளக்கம்
மதார் அவர்கள் பிறந்த நாளில் இருந்து மரணிக்கும் வரை குழந்தையாக இருந்திருக்க வேண்டும். அல்லது அவர் வளர வளர ஆடையும் வளர்ந்திருக்க வேண்டும்.
இதை பார்க்கின்ற பொழுது அவர் மரணிக்கும் வரை குளித்திருக்க மாட்டார்கள் என்ற அதிர்ச்சியும் எற்படுகிறது.
3.அவர் மண்டையோட்டை போச வைத்தார்.
நமது விளக்கம்
மனிதனுக்கு உயிர் கொடுத்து அவனை வாழ வைப்பதும் அவனை மரணிக்கச் செய்வதும் அல்லாஹ்வின் அதிகாரத்தில் உள்ள காரியம்.(அல்குர்ஆன் 2: 259, 3: 157, 7: 157, 9: 116, 10: 57, 22: 6, 44: 8, 42: 9, 40:67, ) நபி (ஸல்) அவர்களின் மரணத்தின் பின் உலகத்தில் வாழும் மனிதர்களோடு உள்ள தொடர்பை (பேச்சை) அல்லாஹ் நிருத்திவிட்ட பின்னால் இந்த ஷாக் மதாருக்கு அந்த அதிகாரம் எங்கிருந்து பெறப்பட்டது? மனிதர்களில் சிறந்தவர் வர்னிக்கப் படும் நபி (ஸல்) அவரகளுக்கே இறந்தோரை செவியேற்கச் செய்ய முடியாதென்று இறைவன் கூறுகிறான். (அல்குர்ஆன் 27 80)
4.இவர் 300 க்கும் மேற்பட்ட வருடங்கள் உலகத்தில் வாழ்ந்தார்.
நமது விளக்கம்
நபி (ஸல்) அவர்களின் சந்ததியில் இவர் பிறந்திருக்க முடியாது.
இது போன்று கேளியும் கிண்டலும் நிரைந்தது தான் இவரது வரலாறு (கஃப்ஸா). மக்களை மடையர்களாக சித்தரிக்கும் விதமாகத் தான் இவரது வரலாறு.(கஃப்ஸா) அமைந்திருக்கிறது. 21ம் நுற்றாண்டில் வாழும் பகுத்தறிவுள்ள ஒரு முஸ்லிம் இவற்றை நம்ப முடியுமா?
”கேற்கிறவன் கேனப் பயலா இருந்தால் கிணற்றுக்குள் திமிங்கிலம்” என்பார்களாம். இது போன்று தான் இந்த கதையும் இருக்கிறது.
வருடா வருடம் ஸின்தா ஷாக் மதாருக்கு விழாக் கொண்டாடும் தொன்மாகாண மக்களே!
இனியாவது சிந்தித்து செயல்படுங்கள். உங்கள் மூலையை பிரரிடம் அடகு வைக்காதீர்கள். கட்டுக் கதைகளை நம்பி உங்கள் ஈமானை பரிகொடுக்காதீர்கள்.
(இது காலி வாழ் முஸ்லிம்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களை மையமாக வைத்து தொகுக்கப் பட்டது. இவர் பற்றி மேலும் தகவல்கள் தெரிந்தால் அவற்றை எமக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்) sltjgalle@gmail.com