E MAIL: sltjgalle@gmail.com
தூய மார்க்கம் இஸ்லாத்தை அல்-குர்'ஆன் ஹதீஸ் அடிப்படையில் தெளிவாக எத்திவைக்கும் ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத்தின் அங்கீகாரம் பெற்ற காலி மாவட்டத்தில் செயல்படும் கிளை சகோதரர்களின் முயற்சிகள்.
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் (SLTJ) தின் அழைப்பை ஏற்று இலங்கை வந்த தென்னிந்திய மார்க்க அறிஞரும், தீண்குலப் பெண்மணி மாத இதழின் ஆசிரியரும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் மாநிலப் பேச்சாளருமான சகோதரர் எம்.ஐ சுலைமான் அவர்கள் சர்வதேச தமிழ் தொலைக்காட்சி சேவையான டான் தமிழ் ஒளி க்கு வழங்கிய பேட்டி.
சர்வதேசமெங்குமுள்ள தமிழ் பேசும் மக்களை மையமாக வைத்து இயங்கும் தமிழ் மொழி ஊடகமான டான் தமிழ் ஒளியின் அழைப்பை ஏற்று கலையகத்திற்கு சென்ற எம்.ஐ. சுலைமான் அவர்களிடம் இஸ்லாத்தைப் பற்றிய பல முக்கியமான கேள்விகள் முன்வைக்கப்பட்டது.
நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சகோதரி கவிதா ராம்குமார் அவர்கள் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை என்ன? இஸ்லாமியர்கள் பல பிரிவுகளாக பிரிந்திருப்பது ஏன்? இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்துகிறதா? இலங்கையில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் நடத்தும் கொள்கை எழுச்சி மாநாடு பற்றிய விளக்கம் என்ன என்பது போன்ற பல முக்கியமான கேள்விகளை முன்வைத்தார்.
கேட்கப்பட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் மிக அழகாகவும், தெளிவாகவும் பதில்களை தெரிவித்தார் அறிஞர் எம்.ஐ சுலைமான் அவர்கள் .
0 கருத்துரைகள்:
Post a Comment