வெளிவந்தது கொகா கோலா ரகசியம் முஸ்லீம்களே உஷார்!
Monday, March 21, 2011
RASMIN M.I.Sc
உலக குளிர்பான வரலாற்றில் ஒரு மைல்கல் என்று வர்ணிக்கப்படும் கொகா கோலா குளிர்பானத்தின் ரகசிய பார்முலா வெளியாகியுள்ளது.
கடந்த 125 வருடங்களாக குளிர்பான தயாரிப்பில் ஈடுபடும் கொகா கோலா நிறுவனம் தனது குளிர்பான தயாரிப்பில் ஒரு கலக்கப்படும் கலவைகளில் ஒரு சில பொருட்களை மாத்திரமே தனது தயாரிப்பில் வெளியிட்டு வந்துள்ளது.
இது வரைக்கும் கொகா கோலாவின் உண்மையான கலவை பற்றிய பார்முலா ரகசியம் யாருக்கும் தெரியாமல் பாதுகாக்கப்பட்டு வந்தது. அந்த ரகசியத்தில் தான் கோலாவின் ருசியின் பார்முலாவே அடங்கியிருந்திருக்கிறது. தற்போது அந்த பார்முலா வெளியாகிவிட்டதினால் கோலா பற்றிய பல தகவல்கள் உலகுக்கு கிடைத்துள்ளது.
கோலாவின் பார்முலாவுக்குறியவர் யார்?
கொகா கோலாவின் மறைக்கப்பட்டிருந்த பார்முலாவை கண்டு பிடித்தவர் ஜான் பெம்பர்டன் என்ற மருந்தாளுனர் ஆவார். அவா் கண்டுபிடித்ததிலிருந்து 125 வருடங்களாக அந்த பார்முலா ரகசியமாக பாதுகாக்கப்பட்டே வந்தது.
1886-ம் ஆண்டு முதன் முதலில் இது தயாரிக்கப்பட்டு விற்பனையானது. அட்லாண்டாவில் மட்டும் விற்கப்பட்ட இந்த குளிர்பானம் தற்போது உலகம் முழுவதும் உள்ள 200 நாடுகளில் வினியோகிக்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 160 கோடி பாட்டில் கொகா கோலா பானம் சப்ளை செய்யப்படுகிறது.
கொகா கோலா எனதால் உருவாகிறது ?
கொகா கோலா அடைக்கப்பட்டு வரும்பாட்டில்களில் கொகா கோலாவின் தயாரிப்புக் கலவைகள் பற்றிய ஒருகுறிப்பும் இருக்கும். அந்தக் குறிப்பில் சக்கரை, தண்ணீர், மற்றும் நிறமிகள் (கலர்)கள் கலக்கப்படுவதாகவும், அத்துடன் காபைன் கலந்த இயற்கை சுவை கூட்டல் பொருட்கள் என்ற ஒரு வாசகமும் இருக்கும்.
ஆனால் இந்த காபன் கலந்த இயற்கை சுவை கூட்டல் பொருட்கள் பற்றிய உண்மையான பார்முலா யாருக்குமே தெரியாது. அது ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வந்தது.
கசிந்தது பார்முலா ரகசியம்.
இந்த நிலையில் அதில் என்னென்ன பொருட்கள் கலக்கப்படுகிறது என்ற தகவல் 125 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது வெளியாகியுள்ளது. இந்த பார்முலா ரகசியத்தை அமெரிக்காவில் இருந்து ஒளிபரப்பாகும் ஒரு ரேடியோ தெரிவித்துள்ளது. அதன் நிகழ்ச்சி இணையதளத்திலும் வெளியாகி உள்ளது.
அந்தத் தகவலை பிரபல செய்தி ஊடகமான அல்ஜஸீராவும் வெளியிட்டுள்ளது.
இது வரைக்கும் இந்த பார்முலா அடங்கிய ரகசிய காகிதம் கொகா கோலா நிறுவனத்தின் மூலம் அமெரிக்க வங்கி லாக்கரில் பாதுகாக்கப்படுகிறது.
ஏற்கனவே 1979 ல் ஜார்ஜியா மாநில உள்ளூர் நாளிதழ் ஒன்றில் இது வெளியானதாக தெரிகிறது. ஆனால் இப்போது இருப்பது போல கோகா கோலாவின் புகழ் அப்போது பெரிதாக இல்லை என்பதால் அந்த செய்திக்கு முக்கியத்துவம் இல்லாமல் போனது.
கொகா கோலாவின் ரகசிய பார்முலா எது?
கொகா கோலா என்ற குளிர்பானத்தை தயாரிப்பதற்கு பயண்படுத்தப் படும் பொருட்களுன் சேர்த்து காபன் கலந்த இயற்கை சுவை கூட்டல் பொருட்களையும் சேர்ப்பதாக கொகா கோலா நிறுவனம் தனது தயாரி்ப்புகளில் வெளியிட்டாலும் அந்த இயற்கை சுவை கூட்டல் பொருட்கள் என்ன என்ற ரகசிய பார்முலா இப்போது தான் வெளியாகியுள்ளது.
இதுதான் அந்த ரகசிய பார்முலா.
Fluid extract of Coca 3 drams USP.
Citric acid 3 oz .
Caffeine 1oz .
Sugar 30 (it is unclear from the markings what quantity is required).Water 2.5 gal.Lime juice 2 pints 1 qrt.Vanilla 1oz .
Caramel 1.5oz or more to colour.7X flavour (use 2oz of flavour to 5 gals syrup).Alcohol 8oz .
Caramel 1.5oz or more to colour.
Orange oil 20 drops.Lemon oil 30 drops.Nutmeg oil 10 drops.Coriander 5 drops.Neroli 10 drops.Cinnamon 10 drops.
பார்முலா வெளிவந்த விதம்.கொகா கோலாவின் இந்த ரகசிய பார்முலா கலந்த ரகசியம் அந்த நிறுவனத்தின் மிக முக்கிய இரண்டு பேரைக் கொண்டுதான் தயாரிக்ப்படுகிறதாம்.
அவர்கள் மூலம் இந்த ரகசியம் வெளியாகி இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. அமெரிக்க வங்கி லாக்கரில் இருக்கும் இந்த ரகசிய பார்முலாவின் எழுத்து வடிவ காகிதத்தின் போட்டோ பிரதியை This American Life’s என்ற சஞ்சிகை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பார்முலா வெளிவந்த விதம்.
கொகா கோலாவின் இந்த ரகசிய பார்முலா கலந்த ரகசியம் அந்த நிறுவனத்தின் மிக முக்கிய இரண்டு பேரைக் கொண்டுதான் தயாரிக்ப்படுகிறதாம்.அவர்கள் மூலம் இந்த ரகசியம் வெளியாகி இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. அமெரிக்க வங்கி லாக்கரில் இருக்கும் இந்த ரகசிய பார்முலாவின் எழுத்து வடிவ காகிதத்தின் போட்டோ பிரதியை This American Life’s என்ற சஞ்சிகை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
0 கருத்துரைகள்:
Post a Comment