ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக இலங்கை அழைத்துவரப்பட்ட தென்னிந்திய அறிஞர் அல்தாஃபி அவர்கள் இலங்கையில் ஆற்றிய உரைகளின் CD மற்றும் DVDக்களை பெற்றுக்கொள்ள 0771-299562 என்ற தொலை பேசி இலக்கத்தை தொடர்பு கொள்ளவும்.
Showing posts with label கட்டுரைகள். Show all posts
Showing posts with label கட்டுரைகள். Show all posts

பெருநாள் தொழுகை.

Monday, August 29, 2011


நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு பெருநாள்களிலும் சிறப்புத் தொழுகை இரண்டு ரக்அத்கள் திடலில் தொழுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள்.

இரு பெருநாள் தொழுகையையும் திடலில் தான் தொழ வேண்டும். “மற்ற பள்ளிகளில் தொழுவதை விட மஸ்ஜிதுன் நபவியில் தொழுவது 1000 மடங்கு நன்மை அதிகம்” (புகாரீ 1190) என்று சொன்ன நபி (ஸல்) அவர்கள்,

பெருநாள் தொழுகையை மஸ்ஜிதுந் நபவீயில் தொழாமல் திடலில் தொழுததன் மூலம் திடலில் தொழுவதன் முக்கியதுவத்தைத் தெளிவு படுத்தியுள்ளார்கள். எனவே இரு பெருநாள் தொழுகைகளையும் திடலில் தான் தொழ வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும், ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளிக்குச் செல்லாமல்) முஸல்லா என்ற திடலுக்குச் செல்பவர்களாக இருந்தனர்.அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி), நூல்கள்: புகாரீ 956, முஸ்லிம் 1612பெருநாள் தொழுகையில் பெண்கள் 

பெருநாள் தொழுகையில் பெண்கள் கண்டிப்பாகக் கலந்து கொள்ள வேண்டும். மேலும் மாதவிடாய் ஏற்பட்ட பெண்களும் திடலுக்கு வர வேண்டும். அவர்கள் தொழுகையைத் தவிர மற்ற நல்ல காரியங்களில் கலந்து கொள்ள வேண்டும்.

இரு பெருநாட்களிலும் மாதவிடாய்ப் பெண்களையும் வீட்டில் இருக்கின்ற கன்னிப் பெண்களையும் (தொழும் திடலுக்கு) அனுப்புமாறும், அப்பெண்கள் வீட்டிலிருந்து வெளியாகி முஸ்லிம்கள் தொழுகின்ற இடத்திற்குச் சென்று அவர்களுடைய துஆவில் கலந்து கொள்ளுமாறும், தொழுமிடத்தை விட்டு மாதவிடாய்ப் பெண்கள் ஒதுங்கியிருக்குமாறும் நாங்கள் கட்டளையிடப்பட்டோம்.

பெண்களில் ஒருவர், “அல்லாஹ்வின் தூதரே! எங்களில் எவருக்கேனும் அணிந்து கொள்வதற்கு மேலாடை இல்லை எனில் என்ன செய்வது?” என்றார். அதற்கு, “அவளுடைய தோழி தனது (உபரியான) மேலாடையை இவளுக்கு அணியக் கொடுக்கட்டும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: உம்மு அத்திய்யா (ரலி), நூல்கள்: புகாரீ 351, முஸ்லிம் 1616ஒரு வழியில் சென்று மறு வழியில் திரும்புதல்

பெருநாள் தொழுகைக்காகத் திடலுக்குச் செல்லும் போது ஒரு வழியில் சென்று வேறு வழியாகத் திரும்புவது நபி வழியாகும்.பெருநாள் வந்து விட்டால் நபி (ஸல்) அவர்கள் (போவதற்கும் வருவதற்கும்) பாதையை மாற்றிக் கொள்வார்கள்.அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: புகாரீ 986

தொழுகைக்கு முன் சாப்பிடுதல்
நோன்புப் பெருநாள் தொழுகைக்கு முன்னர் நபி (ஸல்) அவர்கள் சாப்பிட்டு விட்டு தொழச் செல்வார்கள்.சில பேரீச்சம் பழங்களை உண்ணாமல் நோன்புப் பெருநாளில் (தொழுகைக்கு) நபி (ஸல்) அவர்கள் புறப்பட மாட்டார்கள்.அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புகாரீ 953

நோன்புப் பெருநாள் தினத்தில் நபி (ஸல்) அவர்கள் உண்ணாமல் (தொழுகைக்கு) புறப்பட மாட்டார்கள். ஹஜ்ஜுப் பெருநாளில் (குர்பானி பிராணியை) அறுக்கும் வரை சாப்பிட மாட்டார்கள்.அறிவிப்பவர்: புரைதா (ரலி), நூல்: இப்னுகுஸைமா 1426

முன் பின் சுன்னத்துகள் இல்லைஇரு பெருநாள் தொழுகைகளுக்கு முன் பின் சுன்னத்துகள் கிடையாது. நபி (ஸல்) அவர்கள் இரு பெருநாள் தொழுகைக்கு முன்னரும், பின்னரும் எந்தத் தொழுகையையும் தொழுததில்லை.நபி (ஸல்) அவர்கள் பெருநாளன்று (திடலுக்குச்) சென்று இரண்டு ரக்அத்கள் தொழுதனர். அதற்கு முன்னும், பின்னும் எதையும் தொழவில்லை.அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்கள்: புகாரீ 1431, முஸ்லிம் 1616

பாங்கு இகாமத் இல்லை
இரு பெருநாள் தொழுகைக்கும் பாங்கு, இகாமத் கிடையாது.இரு பெருநாள் தொழுகையை பாங்கும் இகாமத்தும் இல்லாமல் ஒரு தடவை அல்ல; இரு தடவை அல்ல; பல தடவை நபி (ஸல்) அவர்களுடன் தொழுதுள்ளேன்.அறிவிப்பவர்: ஜாபிர் பின் ஸமுரா (ரலி), நூல்: முஸ்லிம் 1610

மிம்பர் இல்லை
வெள்ளிக்கிழமை ஜுமுஆவில் இமாம் மிம்பரில் நின்று உரை நிகழ்த்துவது போல் பெருநாள் தொழுகைக்கு மிம்பரில் நின்று உரையாற்றக் கூடாது. தரையில் நின்று தான் உரை நிகழ்த்த வேண்டும். இவ்வாறு தான் நபி (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளார்கள்.

மதீனாவின் ஆளுநராக இருந்த மர்வான் பெருநாள் அன்று மிம்பரில் ஏறி பயன் செய்தபோது.“மர்வானே! நீர் சுன்னத்திற்கு மாற்றம் செய்து விட்டீர்! பெருநாள் தினத்தில் மிம்பரைக் கொண்டு வந்துள்ளீர். இதற்கு முன்னர் இவ்வாறு கொண்டு வரப்படவில்லை…” என்று இடம் பெற்றுள்ளது.ஆதாரம் : அபூதாவூத் 963, இப்னுமாஜா 1265, அஹ்மத் 10651நபி (ஸல்) அவர்கள் பெருநாளன்று ஒரேயொரு உரையை நிகழ்த்தினார்கள் என்பதற்கே ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் உள்ளன. இரண்டு குத்பாக்கள் நிகழ்த்துவதற்கோ, குத்பாக்களுக்கு இடையில் அமர்வதற்கோ எந்த ஆதாரமும் இல்லை.

நபி (ஸல்) அவர்கள் பெருநாள் அன்று (திடலுக்குச் செல்வதற்காக) வெளியேறினார்கள். மக்களுக்கு இரண்டு ரக்அத்கள் தொழுவித்து ஸலாம் கூறினார்கள். தரையில் நின்று மக்களை நோக்கி (உரை நிகழ்த்தி)னார்கள். மக்கள் அமர்ந்திருந்தார்கள்.அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி), நூல்: இப்னுமாஜா 1278

தக்பீரும் பிரார்த்தனையும்
இரு பெருநாள்களிலும் அல்லாஹ்வைப் பெருமைப்படுத்தும் வண்ணம் அதிகமதிகம் தக்பீர்கள் கூற வேண்டும். மேலும் திடலில் இருக்கும் போது, தமது தேவைகளை வல்ல இறைவனிடம் முறையிட்டுக் கேட்க வேண்டும். திடலில் கேட்கும் துஆவிற்கு முக்கியத்துவமும் மகத்துவமும் உள்ளது.

பெருநாளில் நாங்கள் (தொழும் திடலுக்கு) புறப்பட வேண்டுமெனவும், கூடாரத்திலுள்ள கன்னிப் பெண்களையும் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களையும் புறப்படச் செய்ய வேண்டும் எனவும் கட்டளையிடப்பட்டிருந்தோம். பெண்கள், ஆண்களுக்குப் பின்னால் இருப்பார்கள். ஆண்களின் தக்பீருடன் அவர்களும் தக்பீர் கூறுவார்கள். ஆண்களின் துஆவுடன் அவர்களும் துஆச் செய்வார்கள். அந்த நாளின் பரக்கத்தையும், புனிதத்தையும் அவர்கள் எதிர்பார்ப்பார்கள்.அறிவிப்பவர்: உம்மு அத்திய்யா (ரலி), நூல்கள்: புகாரீ 971, முஸ்லிம் 1615அல்லாஹு அக்பர் என்று கூறுவது தான் தக்பீர் ஆகும். பெருநாளைக்கு என நபி (ஸல்) அவர்கள் தனியான எந்தத் தக்பீரையும் கற்றுத் தரவில்லை. அதற்கு ஆதாரப்பூர்வமான எந்தச் செய்தியும் இல்லை. 

மேலும் பெருநாளில் கடமையான தொழுகைகளுக்கு முன்னால் அல்லது பின்னால் சிறப்பு தக்பீர் சொல்ல வேண்டும் என்பதற்கும் ஆதாரப்பூர்வமான செய்திகள் இல்லை. மேலும் பெருநாளில் தக்பீர்களைச் சப்தமிட்டு கூறக் கூடாது.

உமது இறைவனைக் காலையிலும், மாலையிலும் மனதிற்குள் பணிவாகவும், அச்சத்துடனும், சொல்லில் உரத்த சப்தமில்லாமலும் நினைப்பீராக! கவனமற்றவராக ஆகி விடாதீர்! (அல்குர்ஆன் 7:205)

Read more...

பெயர் குறிப்பிட்டு விமர்சிப்பது தவறா?

Saturday, June 4, 2011


(ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் மாத இதழான அழைப்பு பத்திரிக்கையில் பெயர் கூறி விமர்சனம் செய்வது தொடர்பாக ஒரு வாசகர் கேட்ட கேள்விக்குபத்திரிக்கையின் ஆசிரியர் பர்சான் அவா்கள் கொடுத்த பதில்.)
உங்கள் சஞ்சிகையில் இடம் பெறும் அதிகமான ஆக்கங்கள் இன்னொருவரை அல்லது இயக்கத்தை குத்திக்காட்டும் விதமாகவும், காயப்படுத்தும் விதமாகவும் எழுதப்பட்டுள்ளது. பல பிரபலமான தாஈக்களை தரம் குறைத்து மதிப்பிட்டு எழுதப்பட்டுள்ளது. அவர்களால் செய்யப்படும் சேவைகளை மறைத்து சில கருத்து முரண்பாடுகளுக்காய் அவர்களை மிக மோசமாக வர்ணித்து எழுதப்பட்டுள்ளது. அதிலும் பெயர் குறிப்பிட்டு விமர்சனங்களை எழுதியிருப்பது ஒரு தரக்குறைவான செயலல்லவா? கருத்து முரண்பாடுகள் இருக்கிறது என்பதற்காக யாரையும் காரசாரமாக விமர்சித்து எழுதுவதோ,வழிகேடர்கள் போல் சித்தரிப்பதோ நல்லதோர் விடயமல்லவே?
பின்த் அப்தில் காதர் – மள்வானை
பதில்
தர்கா வழிபாடு என்றும், சந்தனக்கூடு என்றும், கொடி மரம் என்றும், தட்டு – தகடு என்றும் ஷிர்க்கில் மூழ்கிப்போயுள்ளவர்களையும், பாங்குக்கு முன் ஸலவாத்து, மிஃராஜ் – பராஅத் நோன்பு, தஸ்பீஹ் தொழுகை என்று பித்அத்தில் சங்கமித்தவர்களையும், வரதட்சணை, வட்டி, மது என்று பகிரங்கமாக பெரும் பாவங்களில் ஈடுபடுவோரையும், ஜின் வசிய்யத்து, மந்திரம், தந்திரம் என்ற போர்வையில் சமூகத்தை ஏய்த்துப் பிழைப்போரையும், மத்ஹபு மாயையில் சிக்குண்டு சமூகத்தையும், சன்மார்க்கத்தையும் துண்டாடும் போலி உலமாக்களையும், ஆட்சி – அதிகாரம்,சமூக ஒற்றுமை என்ற கோஷங்களுக்குப் பின் மறைந்து கொண்டு குர்ஆன் – ஸ_ன்னாவுக்கு எதிரானக் கருத்துக்களை விதைத்து, குராபிகளுக்கு கூஜா தூக்கும் ஜமாஅத்துக்களையும் நாம் விமர்சிக்கும் போது, இப்படியெல்லாம் பண்பாடற்று விமர்சிப்பது தவறு: இது கேட்போர் மனதை புண்படுத்துவதோடு, தொடர்ந்தும் சத்தியத்தை கேட்காமல் இருப்பதற்கே வழிவகுக்கும் என்று கூறி, மேற்சொன்ன குற்றங்களை நியாயப்படுத்தும் இயக்கங்களையும், அதன் தாஈக்களையும்,அக்கருத்தால் கவரப்பட்டவர்களையும் தஃவாக்களத்தில் பரவலாகக் காண முடிகிறது.
இதன் ஓர் வெளிப்பாடாகவே மேற்குறித்த விமர்சனமும் அமைந்துள்ளது.இங்கு யாரெல்லாம் பெயர் குறிப்பிட்டு விமர்சிப்பது கூடாது என்ற நிலைப்பாட்டில் உள்ளார்களோ அவர்களே தம் பேச்சுக்களிலும், எழுத்துக்களிலும் பலரின் பெயர்களை பச்சையாய் குறிப்பிட்டு விமர்சிக்கத் தான் செய்கிறார்கள். ஸல்மான் ருஷ்தி, தஸ்லீமா நஸ்ரின், ஜோர்ஜ் புஸ், டோனி பிளேயர், ஹ_ஸ்னி முபாரக், முஅம்மர் கடாபி, அப்துல்லாஹ்… இன்னும் இது போன்ற பலரை விமர்சிக்கக் கூடாது என்பவர்கள் கடுமையாகவும், காரமாகவும் விமர்சிப்பதை அன்றாடம் பார்க்க முடிகிறது.
இன்னும் சொல்லப் போனால், யாரை இவர்கள் இலக்கு வைத்து இவ்விமர்சனத்தை புரிகிறார்களோ அந்தப் Pது யின் பெயரை குறிப்பிட்டே தமது பத்திரிகைகளில் இவர்கள் விமர்சித்தும் வருகிறார்கள். இவர்களின் இவ்விமர்சனம் நியாயபூர்வமானது கிடையாது என்பதற்கு இவர்களே தக்க சான்றாகவும் உள்ளனர்.
விமர்சனம் என்று வருகின்ற போது நாம் கருத்தில் கொள்ள வேண்டிய சில முக்கியமான விடயங்கள் உள்ளன. முதலில் விமர்சனத்தில் எது அனுமதிக்கப் பட்டது? எது தடை செய்யப்பட்டது? என்பதனை ஒவ்வொருவரும் சரியாகப் புரிந்துகொள்ளுதல் வேண்டும்.
விமர்சனம் இருவகைப்படும்:
1. தனி மனிதன் சமூகத்தை பாதிக்காத விதத்தில் புரியும் தனிப்பட்ட தவறுகள் சம்பந்தப்பட்டவை.
2. தனி மனிதன் சமூகத்தை பாதிக்கும் விதத்தில் புரியும் தவறுகள் சம்பந்தப்பட்டவை.இதில் சமூகத்தை எவ்விதத்திலும் பாதிக்காத, தவறிழைக்கும் மனிதனும் அல்லாஹ்வும் மாத்திரம் சம்பந்தப்பட்ட தவறுகள், பாவங்களைப் பொறுத்த மட்டில் அவற்றை பெயர் குறிப்பிட்டு, எழுத்து மூலமோ, பேச்சு மூலமோ விமர்சிப்பது கூடாது. கூடாது என்பதை விட அவற்றை நாளு பேருக்கு தெரியாதவாறு மறைக்க வேண்டும் என்று மார்க்கம் சொல்கிறது.
ஆனால், ஒரு தனிமனிதன் விடக்கூடிய தவறு அதிலும் குறிப்பாக மார்க்கம் சம்பந்தப்பட்ட விடயத்தில் ஒருவர் விடும் தவறு ஒரு சமூகத்தை பாதிக்கும் விதமாய் அமையுமாயின், அத்தவறை தயங்காது தட்டிக் கேட்பதும், சுட்டிக் காட்டுவதும் அது குறித்து மக்களை விழிப்புறச் செய்யும் விதமாய் விமர்சிப்பதும் ஒரு முஸ்லிமின் கடமை.
கடமை என்பதை விட அது தான் மார்க்கம்.சகோதரி ஆதங்கப் படும் அளவுக்கு நாம் எதை விமர்சித்தோம்? எதற்காக விமர்சித்தோம்? உங்கள் பார்வையில் அற்பமாகக் கருதப்படும் கருத்து முரண்பாடுகளுக்காகவா? அல்லது அகீதாவுக்கே ஆப்பு வைக்கும் அபத்தங்களுக்காகவா?ஹதீஸை புரியும் இஜ்திஹாதில் ஏற்பட்ட தவறுக்காகவா? ஹதீஸையே மறுதலிக்கும் மடைமைக்காகவா?
நமது இதழில் யூஸ_புல் கர்ளாவி, அஷ்ஷெய்க் அகார் முஹம்மது(நளீமி), அஷ்ஷெய்க் றவூப் ஸெய்ன்(நளீமி), மவ்லானா மவ்தூதி, மவ்லானா ஜகரிய்யா ஸாஹிப்… இவர்கள் போன்ற பலரை நாம் பெயர் குறிப்பிட்டுத் தான் விமர்சித்துள்ளோம். இன்ஷா அல்லாஹ், இனிமேலும் விமர்சிப்போம். இவர்கள் குறித்த எமது விமர்சனம் எந்த அடிப்படையில் அமைந்திருந்தது?உதாரணத்திற்கு, யூஸ_ப் அல் கர்ளாவி கஞ்சா அடித்தார்;, வட்டி வாங்கினார், தனிமையில் சினிமா பார்த்தார் என்று அவர்களின் தனிப்பட்ட வாழ்வோடு சம்பந்தப்பட்ட தனிப்பட்ட விடயங்களை விமர்சித்தோமா? அல்லது ‘அல்கஹோலை குறைந்தளவில் பருகினால் அது குற்றமல்ல’, ‘சிறிய வட்டி ஹலால்’, ‘பெண்கள் சினிமாவில் நடிப்பது கூடும்’, ‘மீலாது விழா கொண்டாடலாம்’ போன்ற அல்குர்ஆனுக்கும் ஸ_ன்னாவுக்கும் முரணாக இவரால் வழங்கப்பட்ட மார்க்கத் தீர்ப்புகளை அல்குர்ஆன் ஸ_ன்னா அடிப்படையில் தவறு என்று விமர்சித்தோமா?
ஒருவர் முன்வைக்கும் கருத்து அல்லது கொள்கை தவறானது என்று உறுதியாகத் தெரிந்தால்,அதை மக்கள் சரிகண்டு அதன் வழியில் சென்று வழிகேட்டில் வீழ்ந்து விடாமல் அவர்களை தடுப்பதாக இருந்தால், அக்கொள்கையின் விபரீதத்தை மக்களுக்கு விளங்கப் படுத்தும் விதமாய் விமர்சிப்பதைத் தவிர வேறு என்ன வழி தான் இருக்க முடியும்?
இதைக்கூட நாமாகக் கற்பனை செய்து கூற வில்லை. திருக்குர்ஆனும் நபி மொழிகளும் மக்களை ஏமாற்ற முனையும் பேர்வழிகளை விமர்சிப்பதன் மூலம் அவர்களின் முகத்திரையை கிழிக்குமாறு எம்மை பணிக்கின்றது. இதற்கான சான்றுகள் இதோ: நபி (ஸல்) அவர்கள் காலத்தில் யூதர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, தங்களைச் சேர்ந்த ஓர் ஆணும் பெண்ணும் விபச்சாரம் செய்து விட்டதாகக் கூறினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘கல்லெறிந்து கொல்லுதல் பற்றி தவ்ராதில் கூறப்பட்டுள்ளது என்ன?’ என்று திருப்பிக் கேட்டார்கள். அதற்கு யூதர்கள் ‘அவர்களுக்கு கசையடி கொடுத்து இழிவு படுத்துவோம்’ என்று விடையளித்தனர். அப்போது, அப்துல்லாஹ் பின் ஸலாம் (ரலி) அவர்கள் யூதர்களை நோக்கி ‘நீங்கள் பொய்யுரைக்கின்றீர்கள். தவ்ராதில் கல்லெறிந்து கொல்லுதல் பற்றிக் கூறப்பட்டுள்ளது’ என்றார். உடனே அவர்கள் தவ்ராதை எடுத்து வந்தனர். அவர்களில் ஒருவர் கல்லெறிந்து கொல்வது சம்பந்தமான வசனத்தைக் கையால் மறைத்துக் கொண்டு, அதற்கு முன் பின் வசனங்களை படித்தார். ‘கையை எடுப்பீராக!’ என்று அப்துல்லாஹ் பின் ஸலாம் (ரலி) அவர்கள் கூறியதும் அங்கே அந்த வசனம் காணப்பட்டது என்ற செய்தி புகாரி முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது.
அவர்கள் புண்படுவார்களே என்று எண்ணி அவர்களின் தவறை சுட்டிக்காட்ட நபித்தோழர் தயங்க வில்லை. நபியவர்களும் அதை அங்கீகரித்தார்கள்.‘தங்கள் கைகளால் புத்தகத்தை எழுதிக் கொண்டு, இது அல்லாஹ்விடமிருந்து வந்தது எனக் கூறியோருக்குக் கேடு உண்டாகட்டும்’ (2:79) என்று இறைவன் கூறுகிறான். அவர்கள் வேதத்தில் சுயமாகச் சேர்த்துக் கொண்டவைகளை இங்கே இறைவன் விமர்சனம் செய்கிறான்.இன்ஜீல் என்பது ஈஸா (அலை) அவர்களுக்கு அருளப்பட்டு,அவர்கள் மக்களுக்குப் போதித்த தாகும் (5:110). ஈஸா (அலை) அவர்களுக்குப் பின்னர் வந்தவர்களால் எழுதப்பட்டவற்றை இன்ஜீல் என்று கூறி, மக்களை ஏமாற்றும் போக்கை விமர்சனம் செய்வது தவறா?
ஒட்டகம் உண்பதைத் தங்களுக்கு இறைவன் ஹராமாக்கியதாக யூதர்கள் பொய் கூறிய போது,தவ்ராத்தைக் கொண்டு வந்து, அதை நிரூபியுங்கள் (3:93) என்று நபியவர்களை சவால் விடச் செய்தது பிழையா?வேதத்திற்கு தவறான விளக்கம் கூறி ஏமாற்றி வந்ததையும் இறைவன் கண்டிக்கத்தவற வில்லை (3:78). நபியவர்கள் பற்றிய முன்னறிவிப்பைத் திட்டமிட்டு அவர்கள் மறைத்து வந்ததையும் இறைவன் அடையாளம் காட்டாமல் விடவில்லை (2:146). வேதத்தில் நீங்கள் மறைத்து வைத்த அனேக வசனங்களை அம்பலப்படுத்தவே நமது தூதர் உங்களிடம் வந்துள்ளார் (5:15) என்று கூறி, அவர்களை விமர்சனம் செய்யும் நோக்கத்திற்காகவே நபி (ஸல்) அவர்கள் அனுப்பப் பட்டதாக இறைவன் பிரகடனம் செய்கின்றான். இப்றாஹீம் (அலை) அவர்கள், யூத மார்க்கத்தவராக இருந்தார்கள் என்று மக்களை ஏமாற்றிக் கொண்டிருந்த போது, இப்றாஹீம் காலத்தில் தவ்றாத் அருளப்பட வில்லையே! அவருக்குப் பின்னர் தானே தவ்ராத் அருளப்பட்டது (3:67) என்று மறுப்புக் கூறி, அவர்களை இறைவன் வாயடைக்கச் செய்தான்.
மேற்குறிப்பிட்ட ஆதாரங்கள் அனைத்தும் ஒருவர் தவறு விடும் போது அல்லது சத்தியத்தை மறைக்கும் போது அதனை வன்மையாக விமர்சிக்க வேண்டும் என்பதற்கான சான்றுகளாகும்.பெயர் குறிப்பிட்டு விமர்சிப்பது தவறா? ஒரு தவறை சுட்டிக் காட்டும் போது,தவறிழைத்தவனுக்கு தான் செய்வது தவறு தான் என்று விளங்கும் விதத்திலும், இது எனக்குத் தான் சொல்லப்படுகிறது என்பதை புரிந்து கொள்ளும் வகையிலும், உள்ளத்தை உசுப்பும் விதத்திலும் மழுப்பலோ, மறைத்தலோ, சுற்றி வளைப்போ இன்றி சொல்வதைத் தெளிவாகச் சொல்ல வேண்டும். இது எப்போது சாத்தியம்? பெயர் குறிப்பிட்டு விமர்சிக்கும் போதே. இதையும் கூட நாமாகக் கூற வில்லை. யூத கிறிஸ்தவர்கள் (2:120), இஸ்ரவேலர்கள் (2:79), மஜூஸிகள் (22:17),முனாபிக்குகள் (2:8, 4:108), ஏன் ரஸ_லுல்லாஹ் (80:1-10, 3:128, 66:1), கூட தவறிழைக்கும் ஒவ்வொரு கணமும் அல்லாஹ்வால் சுட்டிக்காட்டப் பட்டு விமர்சிக்கப்பட்டது இவர்களுக்கு தெரியாதா?தவறுகளை விமர்சிக்கும் போது அதைச் சொன்னவரையும் அதைப்பின்பற்றும் ஒட்டு மொத்த சமுதாயத்தையும் பெயர் குறிப்பிட்டுத் தான் விமர்சிக்க வேண்டும். இதுவும் அல் குர்ஆனின் வழி முறை தான். ஆது கூட்டம் (7:71), ஸமூது கூட்டம் (27:47), யானைப்படை (105:1), யஃஜூஜ் மஃஜூஜ் (18:94), அபூ லஹப் (111:1-3), இரம் (89:7), காரூன் (28:76), ஆஸர் (6:74), ஃபிர்அவ்ன் (2:49), சாமிரி (20:85),ஜாலூத் (2:249) ஆகியோர் அல்லாஹ்வால் விமர்சிக்கப்பட்டதும் இந்த அடிப்படையில் தான்.
இது போல், இன்னும் அனேக இடங்களில் வேதமுடையவர்களையும் பல தெய்வக் கொள்கையுடையோரையும் விமர்சனம் செய்துள்ளான். ‘வேத முடையோரே!’ என்று பல இடங்களில் அவர்களை அழைத்து, அவர்களின் தவறுகளைச் சுட்டிக் காட்டியும் உள்ளான். பெயர் குறிப்பிட்டு விமர்சிப்பது தவறுதான் என்றால் ஹதீஸ் கலையில் அறிவிப்பாளர்களின் குறைகளை அக்குவேர் ஆணிவேராக விமர்சிக்கும் ‘இல்முல் ஜரஹ் வத்தஃதீல்’ எனும் கலையை இவர்கள் பண்பாடற்ற கலை என்று கூறத்துணிவார்களா? ஸகாத் வசூலிப்பதற்காக அனுப்பப்பட்ட நபித்தோழர் ஸகாத் பணத்துடன் இணைத்து வழங்கப்பட்ட அன்பளிப்பை ‘இது எனக்கு அன்பளிப்பாகத் தரப்பட்டது’ என்று கூறியதைக் கேட்ட நபிகளார், முகம் சிவந்தவராய் மிம்பரில் ஏறி, அனைத்து தோழர்களையும் ஒன்று கூட்டி ‘இவர் தனது தாயின் வீட்டில் இருந்திருந்தால் இது இவருக்குக் கிடைத்திருக்குமா?’ என்று கடிந்து கொண்டு அனைவர் முன்னிலையிலும் ஒரு நபித்தோழரை நபிகளார் விமர்சித்ததையும் பண்பாடற்ற விமர்சனம் என்று குறை காணப்போகிறார்களா?காரமாகவும் கடுமையாகவும் விமர்சிப்பது அல் குர்ஆனுக்கு முரணா? நாம் எமது பேச்சுகளிலும், எழுத்துகளிலும் தவறிழைப்பவரை விமர்சிப்பதில் உள்ள கடுமையை விட,காரத்தை விட அல்லாஹ் தவறிழைப்பவர்களை விமர்சிப்பதற்காக பிரயோகிக்கும் வார்த்தைப் பிரயோகம் மிகுந்த கடுமையும் காரமும் மிக்கதாக உள்ளது.
அல் குர்ஆனின் வசனங்களை ஏற்க மறுப்பவனை, அதன் போதனைகளை மறுப்பவனை விமர்சிக்கும் போது “அவனுக்குறிய உதாரணம் நாய். அதை நீ தாக்கினாலும் நாக்கைத் தொங்க விட்டுக் கொள்கிறது. அதை விட்டு விட்டாலும் நாக்கைத் தொங்க விட்டுக் கொள்கிறது.” (7:176) ‘நாய்’ என்று விமர்சிக்கிறான்.
இஸ்லாத்தை கற்பதற்கு முன்வராத அறிவிலிகளை விமர்சிக்கும் போது “அவர்களுக்கு உள்ளங்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அவர்களுக்குக் கண்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் பார்ப்பதில்லை. அவர்களுக்குக் காதுகள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் கேட்பதில்லை. அவர்கள் கால் நடைகளைப் போன்றோர். இல்லை! அதை விடவும் வழி கெட்டவர்கள்.” (7:179)
‘கால் நடைகள்’ என்கிறான்.வேதத்தைக் கற்று அதன் படி ஒழுகாதவர்களை விமர்சிக்கும் போது“தவ்ராத் சுமத்தப்பட்டு பின்னர் அதைச் சுமக்காமல் (அதன் படி நடக்காமல்) இருந்தார்களே அவர்களது உதாரணம் ஏடுகளைச் சுமக்கும் கழுதையைப் போன்றது.” (62:5) ‘கழுதை’ என்று பொறிந்து தள்ளுகிறான்
.அல் குர்ஆன், அஸ் ஸ_ன்னா ஒன்றை சொல்லும் போது அதனை புறக்கணித்து, அதற்கு மாற்றமாக நடப்பவர்களை விமர்சிக்கும் போது “அவர்கள் சிங்கத்தைக் கண்டு மிரண்டு வெருண்டோடும் கழுதைகளைப் போல் உள்ளனர்.” (74:50-51) ‘கழுதை’ என்று காட்டமாக விமர்சிப்பதைப் பார்க்கிறோம்.நாங்கள் விமர்சித்தது தவறு என்றால், எங்கள் வார்த்தை கடுமையானது என்றால், இவ்வாறு விமர்சிப்பது பண்பாடற்ற வழிமுறை என்றால், இவர்கள் முதலில் இவ்விமர்சனத்தைச் செய்த அல்லாஹ்வையும், அதனை அப்படியே ஏற்று, அவ்விமர்சன வார்த்தைகளை அந்தத் தவறுகளை செய்த மக்களின் முகத்துக்கு முன் அப்படியே ஓதிக்காட்டிய நபிகள் நாயகத்தையும் நோக்கித் தான் தங்கள் சுட்டு விரலை முதலில் நீட்ட வேண்டும்.
உங்கள் வாதப்படி அல்லாஹ் ‘நாய்’ என்றும், ‘கழுதை’ என்றும்,‘மிருகம்’ என்றும் நாகரீகம் இல்லாமல்: பண்பாடு தெரியாமல்: நளினம் தெரியாமல் விமர்சித்திருக்கிறான் என்று கூறவேண்டி வரும். ஒருவர் குர்ஆன் ஹதீஸ_க்கு எதிராக நடக்கும் போது அவரை நாம் விமர்சித்தால், அதனால் அவர்;கள் ‘புண்படுவார்கள்’ என்பதெல்லாம் அறிவுடையோர் கூறும் பதிலாக முடியாது.
எதைப் பிரச்சாரம் செய்தாலும் பாதிக்கப்படுவோர் புண்படவே செய்வார்கள். இவர்கள் சொல்வதை ஏற்றால் மத்ஹபுகளை, கல்லறை வணக்கத்தை, தரீக்காக்களை, பித்அத்துவாதிகளை மற்றும் எதையுமே விமர்சிக்க முடியாமல் போய்விடும். அத்தோடு, அல்லாஹ்வும் ரஸ_லும் நளினம் தெரியாமல், மென்மை புரியாமல் அநாகரிகமாக விமர்சித்து விட்டார்கள் என்ற தப்பான கருத்தும் வந்து விடும். நஊது பில்லாஹ்.

Read more...

வெளிவந்தது கொகா கோலா ரகசியம் முஸ்லீம்களே உஷார்!

Monday, March 21, 2011


Read more...

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

  © SLTJ Head Office Web site

Site Designed and Developed by
MSM SAFWAN 2009

Back to TOP