ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக இலங்கை அழைத்துவரப்பட்ட தென்னிந்திய அறிஞர் அல்தாஃபி அவர்கள் இலங்கையில் ஆற்றிய உரைகளின் CD மற்றும் DVDக்களை பெற்றுக்கொள்ள 0771-299562 என்ற தொலை பேசி இலக்கத்தை தொடர்பு கொள்ளவும்.
Showing posts with label பெண்கள். Show all posts
Showing posts with label பெண்கள். Show all posts

காது மூக்கு குத்தி நகை அணியலாமா?

Tuesday, December 13, 2011

காது மூக்கு குத்தி நகை அணியலாமா? 
இது தான் இஸ்லாம்.காம் இற்கு சகோதரர் ரஸ்மியின் பதில்.
 
இதுதான் இஸ்லாம்.காம் இல் ஒரு நேயரின் கேள்வி கீழே உள்ளது.175 கேள்வி - பெண்கள் காதணி, மூக்குத்தி அணியலாமா...? இந்த கேள்விக்கு பதில் அளித்தது சரியா தவறா என்று என்னால் விளங்க முடியவில்லை. முன்பு நான் ஒரு புரோகிராமில் பி.ஜே அவர்கள் பெண்கள் காது மூக்கு குத்த கூடாது என்று கூறி, அல்லாஹ் உடைய வசனத்தையும் குறிப்பிட்டர்கள். நானும் என் மகளுக்கு அதிக நாள் காது குத்தாமல் தான் இருந்தேன் தாங்கள் கம்மல் முக்குத்தி அணியலாம் என்று கூறியதும் எனக்கு வியப்பாக உள்ளது தாங்கள் இதற்கு விளக்கம் தருமாரு கேட்டுக்கொள்கிறேன். ( பி.ஜே அவர்கள் குறிப்பிட்ட வசனத்தையும் கீழே குறிப்பிட்டு உள்ளேன்) 4:119 ''இன்னும் நிச்சயமாக நான் அவர்களை வழி கெடுப்பேன்; அவர்களிடம் வீணான எண்ணங்களையும் உண்டாக்குவேன்; (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால்நடைகளின் காதுகளை அறுத்து விடும்படியும் அவர்களை ஏவுவேன். இன்னும் அல்லாஹ்வின் படைப்புகளையுடைய கோலங்களை மாற்றும்படியும் ஏவுவேன்'' என்றும் ஷைத்தான் கூறினான்; எனவே எவன் அல்லாஹ்வை விட்டு ஷைத்தானை உற்ற நண்பனாக ஆக்கிக் கொள்கிறானோ, அவன் நிச்சயமாக பகிரங்கமான பெரு நஷ்டத்தை அடைந்தவன் ஆவான். ஷரீப் - யாஹூ மெயில் வழியாக. 
மேலே உள்ள கேள்விக்கான உங்களது பதிலில் காது மூக்கு குத்துவது கூடும் என்று உங்கள் இணையத்தளத்தில் நீங்கள் எழுதியிருந்ததை நான் கண்டேன். நீங்கள் ஆய்வு செய்த விதம் குர்ஆன் ஹதீஸ் ஒளியில் இருப்பது கண்டு எனக்கு சந்தோஷம். ஆனால் உங்கள் ஆய்வில் ஏராளமான தவறுகள் இருப்பதால் அதை இங்கு சுட்டிக்காட்டுகிறேன்.
உங்கள் முதல் பந்தி இதுதான்
//'ஷைத்தானின் முக்கிய பணியே நம்மை வழி கெடுத்து நரகத்திற்கு அனுப்புவதுதான் என்பதை நீங்கள் முதலில் புரிந்துக் கொள்ள வேண்டும். எந்த விதத்தில் மனிதனிடம் அணுகினால் அவனை வழிக்கேட்டை நோக்கி திருப்ப முடியும் என்பதில் தான் அவனது முழு கவனமும் - செயல்பாடும் இருக்குமே தவிர மனிதர்களுடன் செல்ல விளையாட்டு அவன் விளையாடிக் கொண்டிருக்க மாட்டான். காது மூக்கு குத்தி நகை அணிவதால் அவ்வாறு அணிந்தவர்களை நரகத்தை நோக்கி திருப்பி விட முடியுமா என்றும், இன்றைக்கு காது மூக்கு குத்தியவர்கள் அனைவரும் ஷைத்தனுக்கு கட்டுப்பட்டுதான் அந்த காரியத்தை செய்துள்ளார்கள் என்றும் உங்களால் ஒப்புக் கொள்ள முடியுமா..?'//
எனது மறுப்பு.
அல்லாஹ் ஒரு விடயத்தைக் கூறி இது ஷைத்தானின் செயல் என்று கூறிவிட்டால், அது செல்ல விளையாட்டாக தோன்றினாலும் அல்லாஹ் அதைத் தடை செய்திருப்பதால் அது கூடாது என்று முடிவெடுப்பதே அறிவுடமை. செல்ல விளையாட்டாக மக்களிடம் ஷைத்தான் விளையாடும் சிலவற்றை நான் இங்கு குறிப்பிடுகிறேன். வெள்ளை முடிக்கு கருப்பு நிறம் இடுவது சிலருக்கு செல்ல விளையாட்டு. பொய் சடை(முடி) போடுவது சிலருக்கு செல்ல விளையாட்டு. தாடியை மழிப்பது ஆண்களில் சிலருக்கு செல்ல விளையாட்டு. முடியின் பாதியை மழித்து மீதியை விடுவது சிலருக்கு செல்ல விளையாட்டு. Plastic Surgery செய்து தனது கோலத்தை மாற்றுவது சிலருக்கு செல்ல விளையாட்டு. புருவத்தை மழிப்பது பெண்களில் சிலருக்குச் செல்ல விளையாட்டு. இப்போது உங்கள் வாதப்படிஉங்களின் அதே வார்த்தைப்படியே இதை நியாயப்படுத்திப் பார்ப்போம். இவ்வாறு முடிக்கு கருப்பு நிறம் இடுவதால், பொய் சடை(முடி) போடுவதால், தாடியை மழிப்பதால், முடியின் பாதியை மழித்து மீதியை விடுவதால் Plastic Surgery செய்வதால், பெண்கள் புருவத்தை மழிப்பதால், அவர்களை நரகத்தை நோக்கி திருப்பி விட முடியுமா என்றும், இவ்வாறு செய்பவர்கள் அனைவரும் ஷைத்தனுக்கு கட்டுப்பட்டுதான் அந்த காரியத்தை செய்துள்ளார்கள் என்றும் உங்களால் ஒப்புக் கொள்ள முடியுமா..? இவ்வாறு நீங்கள் கேட்டது போன்ற அதே அறிவுபூர்வமான(?) கேள்விகளை நானும் கேட்டு மேலே கூறிய செல்ல விளையாட்டுக்களை என்னாலும் நியாயப்படுத்த முடியும் என்றால் நீங்கள் காது, மூக்குக் குத்துவதை நியாயப்படுத்தியது சரிதான்.
மேலும் நாம் நினைக்கும் சில செல்ல விளையாட்டுகள் தான் எம்மை நரகத்துக்கு இட்டுச்செல்கின்றது.
உலக வாழ்க்கை வீணும் விளையாட்டுமேயன்றி வேறில்லை. பயபக்தியுடையவர்களுக்கு நிச்சயமாக மறுமை வீடே மிகவும் மேலானதாகும். நீங்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டாமா?” 6:32

உங்கள் அடுத்த பந்தி
//'எந்த காரியத்தை செய்வதால் அவனுக்கு பலனில்லையோ அந்த காரியத்தை ஷைத்தான் ஒரு போதும் செய்ய மாட்டான்.'//
எனது மறுப்புகாது மூக்கு குத்துவது அல்லாஹ் படைத்த கோலத்தை மாற்றுவது ஆகும். இதனால் ஷைத்தானுக்குப் பலன் உண்டு என்று அல்லாஹ்தான் சொல்கிறான். அல்லாஹ்வே ஷைத்தானுக்கு பலன் உண்டு என்று சொன்ன பிறகு அக்காரியத்தைச் ஷைத்தான் ஒரு போதும் செய்யாமல் இருக்க மாட்டான்.
அடுத்ததாக நீங்கள் கூறியது.
'//அப்படியானால் நீங்கள் சுட்டி காட்டியுள்ள வசனத்திற்கு என்ன பொருள்.
அந்த வசனமே விடையை சொல்லி விடுகிறது.நான் அவர்களை வழி கெடுப்பேன் ''அவர்களின் உள்ளங்களில் வீணாண எண்ணங்களை உண்டாக்குவேன்''
மனதில் வீணாண எண்ணங்களை உண்டாக்குவதின் வழியாகத்தான் நான் அவர்களை வழி கெடுப்பேன் என்று ஷைத்தான் தெளிவாகவே அறிவித்துள்ளான். மனதில் வீணாண எண்ணங்களை போட்டு அதன்படி வழி நடக்க வைப்பதன் மூலமே ஷைத்தானின் திட்டங்கள் நிறைவேறும். இப்படித்தான் அவன் ஆதம் - ஹவ்வா (அலை - ம்) இருவரையும் அணுகினான்.
''...அவர்களின் மானத்தை அவர்களுக்கு வெளிபடுத்தும் பொருட்டு அவர்களின் உள்ளங்களில் (தவறானவற்றை) ஊசலாட செய்தான், (அல் குர்ஆன் 7:20)
''அவன் மனிதர்களின் உள்ளங்களில் வீண் சந்தேகங்களை உண்டாக்குகிறான்'' (அல் குர்ஆன் 114:5)
ஷைத்தானின் செயல்பாடுகள் இப்படித்தான் இருக்கும். நிங்கள் எடுத்துக் காட்டிய வசனத்திற்கு அடுத்த வசனத்தை கவனியுங்கள் 'ஷைத்தான் அவர்களுக்கு வீணாண ஆசைகளை ஊட்டுகிறான்' என்ற இறைக்கூற்றும் வருகிறது.'//

எனது மறுப்பு
நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மைதான். காது மூக்கு குத்தி அல்லாஹ் படைத்த கோலத்தை நாம் மாற்றுவது ஏன் தெரியுமா? அல்லாஹ் தடுத்திருந்தும், அழகுக்காக செய்கிறோம்... இதனால் என்ன வந்துவிடப் போகிறது... இந்த செல்ல விளையாட்டால் எல்லாம் ஷைத்தான் வழிகெடுப்பானா?... என்று எமது உள்ளங்களில் ஷைத்தான் போட்ட வீணாண எண்ணங்களாலே அன்றி வேறெதனாலும் அல்ல. இதை வேறு எங்கும் போகாமல் இந்த வசனத்தில் இருந்தே தெரிந்து கொள்ளலாம்(நீங்கள் கூறியது போன்று 'அந்த வசனமே விடையை சொல்லி விடுகிறது' என்றுதான் நானும் சொல்கிறேன்) . 'கால்நடைகளின் காதுகளை அறுத்து விடும்படியும் அவர்களை ஏவுவேன்' என்ற வசனம் எதைச் சொல்கிறது? அல்லாஹ் படைத்த கால்நடைகளின் கோலத்தை மாற்றுவது எனும் அர்த்தமும் இவ்வசனத்துக்கு உண்டா இல்லையா? இது கால்நடைகளுக்கு மட்டும் உரிய சட்டம் என்று புரியக்கூடாது என்பதற்காகவோ என்னவோ இவ்வசனத்தைத் தொடர்ந்து 'இன்னும் அல்லாஹ்வின் படைப்புகளையுடைய கோலங்களை மாற்றும்படியும் ஏவுவேன்' என்று பொத்தாம் பொதுவாக அல்லாஹ் கூறியுள்ளான். கால்நடைகளிகளின் காதுகளை அறுக்கக் கூடாது என்று மட்டும் இவ்வசனம் கூறவில்லை. மனிதக் காதுகளையும் அறுக்கக் கூடாது என்றும்தான் இவ்வசனம் கூறகிறது. ஒரு வாதத்திற்காக கூறுகிறேன், விலங்கு வேளாண்மையில்கூட பல்வேறு தேவைகளுக்காகத்தான் விலங்குகளின் காதுகள் அறுக்கப்படுகின்றன. ஆனால் மனிதக் காதுகள் அழகு என்ற நொண்டிச் சாட்டுக்காக அறுக்கப்படுகின்றது. ஷைத்தான் மனித உள்ளங்களில் போட்ட வீணாண எண்ணங்களின் விளைவு விளங்குகிறதா? இங்கு வேறு உறுப்புகளைக் கூறாமல் காது என்றே அல்லாஹ் கூறியிருப்பதைப் பார்க்கும் போது ஆச்சரியமாக உள்ளது.
நீங்கள் வைக்கும் அடுத்த வாதம்
//'அடுத்து, அதே வசனத்தில் அல்லாஹ்வின் படைப்புகளின் கோலங்களை மாற்றுவேன் என்பதின் பொருள் என்ன என்ற சந்தேகம் வரும். அரபு மூலத்தில் 'கல்கல்லாஹ்' என்ற பதம் வருகிறது. இதற்கு அல்லாஹ்வின் படைப்பு என்று பொருள். இதை அல்லாஹ் படைத்த கோலத்தை மாற்றுவதாக விளங்குவதா... அல்லாஹ் படைத்த நோக்கத்தை மாற்றுவதாக விளங்குவதா...
அல்லாஹ் படைத்த நோக்கத்தை மாற்றுவதாக விளங்குவதுதான் சரியாகும். அதாவது எந்த நோக்கத்திற்காக மனிதனை இறைவன் படைத்தானோ அந்த நோக்கத்தை மாற்றுவதுதான் ஷைத்தான் மேற்கொண்ட சபதம் என்பதால் நோக்கத்தை மாற்றுவது என்றுதான் பொருள் கொள்ள வேண்டும். இறைவனை வணங்குவதற்காகவே மனிதன் படைக்கப்பட்டான். எந்த நோக்கத்திற்காக மனிதன் படைக்கப்பட்டானோ அந்த படைப்பின் நோக்கத்தை ஷைத்தான் மாற்றுகிறான். எனவே அந்த வசனத்தில் கோலத்தை மாற்றுவது என்று பொருள் எடுக்க முடியாது.
நம் கண்முன்னே எவ்வளவோ பேர்கள் காபிராகவே வாழ்ந்து காபிராகவே இறந்துப் போகிறார்;கள். இவர்களெல்லாம் கோலம் மாற்றப்பட்டு இறந்தவர்களா.. நோக்கம் மாற்றப்பட்டு இறந்தவர்களா... என்று நீங்களாகவே சிந்தித்தால் அந்த வசனத்தின் பொருள் என்ன என்பது உங்களுக்கு புரிந்து விடும். '

//எனது மறுப்பு 
மருந்துக்குக் கூட அரபிமொழி தெரியாதவர்களாகத்தான் நீங்கள் இருக்கிறீர்கள் என்பதற்கு இதைவிட என்ன சான்று வேண்டும்?. 'ஃபலயுஅஃய்யிருன்ன (k)கல்கல்லாஹி' என்பதன் பொருள் 'அல்லாஹ் படைத்த நோக்கத்தை மாற்றுவது' என்று எந்த அகராதியில் இருந்து எடுத்தீர்கள்?
இது தவிர அல்குர்ஆனில் '(k)கல்கல்லாஹி' என்று வந்துள்ள இடங்கள் அனைத்திலும் அல்லாஹ்வின் படைப்பு என்ற அர்த்தத்திலேயே வந்துள்ளது.
உதாரணமாக
'தம் கர்ப்பக் கோளறைகளில், அல்லாஹ் படைத்திருப்பதை மறைத்தல் கூடாது.' பகரா 228
'வானங்கள், பூமி, இவற்றின் ஆட்சியையும் அல்லாஹ் படைத்திருக்கும் மற்றப் பொருள்களையும் அவர்கள் நோட்டமிடவில்லையா?' அல் அஃராப் 185 மேலும் பார்க்க அல்குர்ஆன் 10:5, 10:6, 16:48, 24:45, 29:44, 30:8, 30:30, 31:11, 45:22, 71:15
இவ்வனைத்து வசனங்களிலும் '(k)கல்கல்லாஹி' என்ற சொல்லே வந்துள்ளது. இங்கு நீங்கள் சொல்வது போன்று நோக்கம் என்ற பொருளில் வரவே இல்லை. அல்லாஹ் படைத்த நோக்கம் என்றுதான் விளங்கவேண்டும் என இவர்கள் வாதிடுவது எந்த அடிப்படையும் இல்லாதது.
ஒரு வாதத்திற்காக இவர்கள் செய்த அர்த்தத்தையே செய்து பார்ப்போம். அதாவது 'அல்லாஹ்வின் படைப்புகளுக்குரிய நோக்கத்தை மாற்றுவார்கள்'.இதுதான் இவர்கள் செய்யும் அர்த்தம். இவர்களின் இந்த கற்பனை அர்த்தப்படி அந்த வசனம் அவர்களுக்கு எதிரான வாதத்தையே கொடுக்கிறது. மனிதன் படைக்கப்பட்ட நோக்கத்தை மாற்றுவது எவ்வாறு தவறோ அவ்வாறுதான் மனிதனின் ஒவ்வொரு அங்கமும் படைக்கப்பட்ட நோக்கத்தை மாற்றுவதும். காதை அல்லாஹ் படைத்திருப்பதன் அடிப்படை நோக்கம் செவியேற்பதற்கே தவிர ஓட்டை போட்டு தொங்கவிடுவதற்கல்ல. எனவே ஓட்டை போட்டு காதில் எதையேனும் தொங்கவிடுவது அல்லாஹ் காதைப்படைத்த நோக்கத்தையே மாற்றுகிறது. இதே போல்தான் மூக்கு, நாக்கு, தொப்புள், கண் புருவம் இன்னும் Fashion என்று ஓட்டை போடும் எல்லா இடமும்.
துளையிட்டு காதணி அணிவது சுகாதாரத்தக்குக் கேடு என்று மருத்துவம் சொல்கிறது. பல்வேறு நோய்த் தொற்றுக்கும் சொறி சிறங்குகளக்கும்( Rash) அது காரணமாக அமைகிறது.
http://www.sciencedaily.com/releases/2004/02/040226072625.htm
http://www.wisegeek.com/what-can-i-do-if-my-earrings-cause-a-rash.htm
மேலும் HIV தொற்றுக்கும் இது ஏதுவாக அமைவதாக கருத்துகள் நிலவுகின்றன
http://www.cdc.gov/hiv/resources/factsheets/transmission.htm
இன்னும் இதில் வேடிக்கை என்னவென்றால் மனிதன் படைக்கப்பட்ட நோக்கத்தை மாற்றக்கூடாதாம். தர்க்கரீதியாக சிந்தித்துப் பாருங்கள். யாராவது ஒருவன் ஒரு பொருளை குறித்த ஒரு நோக்கத்துக்காக உருவாக்குகிறான் என்று வைத்தக்கொள்ளுங்கள். அப் பொருள் உருவாக்கப்பட்ட நோக்கத்தை மற்றவர்கள் எவ்வாறு மாற்றுவது? என்ற அடிப்படை அறிவுகூட உங்களுக்கு இல்லை. மற்றவர்கள் அதை வேறு விதமாக வேறு தேவைகளுக்குப் பயன்படுத்தலாம். அதனால் அவன் குறித்த அப்பொருளின் நோக்கத்தை செயல்படுத்தவில்லை என்றாகுமே தவிர குறித்த அப்பொருள் உருவாக்கப்பட்ட நோக்கம் மாறாது. நோக்கம் நோக்கமாகத்தான் இருக்கும். அல்லாஹ் மனிதனைப் படைத்த நோக்கம் அவனை வணங்கவே. மனிதன் அல்லாஹ்வை வணங்காது போனால் அல்லாஹ் மனிதனைப் படைத்த நோக்கம் மாறிவிடுமா என்ன? படைத்த இறைவன்தான் அவன் படைத்த நோக்கத்தை மாற்ற முடியுமே தவிர வேறு யாராலும் ஏன் ஷைத்தானாலும் அதை மாற்ற முடியாது. உங்கள் வசன நடையும் மொழிபெயர்ப்பும் அதைத்தான் கூறுகிறது. இறைவன் மனிதனைப் படைத்த நோக்கத்துக்கு எதிராக செயல்படுவது என்பது வேறு, இறைவன் மனிதனைப் படைத்த நோக்கத்தை மாற்றுவது என்பது வேறு. உங்கள் மொழிபெயர்ப்புப் பிரகாரம் இறைவன் மனிதனைப் படைத்த நோக்கத்தை மாற்றுவது என்பது சாத்தியமில்லாதது. இறைவன் மனிதனைப் படைத்த கோலத்தை மாற்றுவது என்று மொழிபெயர்த்துப் பாருங்கள். இதுவே சாத்தியமானதும் சத்தியமானதும் சரியான Logic உம் ஆகும்.
நம் கண்முன்னே எவ்வளவோ பேர்கள் காபிராகவே வாழ்ந்து காபிராகவே இறந்துப் போகிறார்கள் என்றால் அவர்கள் தாம் படைக்கப்பட்ட நோக்கத்துக்கு மாற்றமாக நடந்தார்களா? அல்லது இறைவன் மனிதனைப் படைத்த நோக்கத்தை மாற்றினார்களா? இணைவைத்து காபிராக இறந்தவன் வேறு, அல்லாஹ் படைத்த கோலத்தை மாற்றி பாவியாக இறந்தவன் வேறு. இருவருக்கும் உள்ள ஒரே ஒற்றுமை, அல்லாஹ் அவர்களைப் படைத்த நோக்கத்தை மறந்தது. (மாற்றியது அல்ல)

அடுத்த உங்கள் வாதம்
//காது மூக்கு குத்தி நகை அணிவது பெண்கள் தங்களை அழகுபடுத்திக் கொள்ளத்தானே தவிர இங்கு வேறு எந்த நோக்கமும் இல்லை. பெண்கள் நகை அணிவதையோ தங்களை அழகு படுத்திக் கொள்வதையோ இஸ்லாம் தடுக்கவில்லை. இதே அடிப்படையில் தான் நபித்தோழியர்கள் காதுகளில் கைகளில் கால்களில் நகை அணிந்திருந்தனர். தேவையின் நிமித்தம் அல்லாஹ்வின் பாதையில் தர்மம் செய்தனர். எனவே காது - மூக்கு குத்தக்கூடாது என்று தடுக்கும் எந்த ஆதாரத்தையும் நம்மால் காண முடியவில்லை.'// 

எனது மறுப்பு
வேறு எந்த நோக்கமும் இல்லாமல் தங்களை அழகுபடுத்திக் கொள்ளும் நோக்கம் மட்டும் இருந்தால் எந்தத்தடையையும் மீறலாமோ? நான் மேலே சொன்ன ஷைத்தானின் செல்ல விளையாட்டுக்களான வெள்ளை முடிக்கு கருப்பு நிறம் இடுவது, பொய் சடை(முடி) போடுவது, முடியின் பாதியை மழித்து மீதியை விடுவது, Plastic Surgery செய்து தனது கோலத்தை மாற்றுவது, புருவத்தை பெண்கள் மழிப்பது, போன்றவற்றை வேறு எந்த நோக்கமும் இல்லாமல் பெண்கள் தங்களை அழகுபடுத்திக் கொள்ளும் நோக்குடன் மட்டும் செய்தால் அது கூடுமா?

Read more...

பார்வையைப் பாதுகாப்போம்!

Thursday, March 3, 2011

கே.எம். அப்துந் நாஸீர் எம்.ஐ.சி

உண்மையான இறைநம்பிக்கையாளர்களிடம் இருக்க வேண்டிய பல்வேறு பண்புகளை அல்லாஹ் திருமறைக் குர்ஆனில் விவரித்துள்ளான். அவற்றில் மிக முக்கியமான ஒன்றுதான் நம்முடைய பார்வையைப் பாதுகாப்பதாகும். இந்த மனித சமுதாயம் ஒழுக்க வீழ்ச்சியடைவதற்கு மிக முக்கியமான ஒரு காரணி பார்வையை தவறான முறையில் பயன்படுத்துவதாகும். இதன் காரணமாகத்தான் இறைநம்பிக்கையாளர்களான ஆண்களும் பெண்களும் தங்களின் பார்வையைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும் என இறைவன் தன் திருமறையில் கட்டளையிடுகின்றான்.


(முஹம்மதே!) தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்பைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்குக் கூறுவீராக! இது அவர்களுக்குப் பரிசுத்தமானது. அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.



தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! (அல் குர்ஆன் 24 : 30, 31)


தங்களின் பார்வையைப் பாதுகாத்துக் கொள்வதுதான் இறைநம்பிக்கையாளர்களுக்கு பரிசுத்தமானது என மேற்கண்ட வசனம் தெளிவுபடுத்துகிறது. ஏனென்றால் இன்றைக்கு விபச்சாரம், கற்பழிப்பு போன்ற பல்வேறு பெரும்பாவங்களுக்கு அடிப்படையாகத் திகழ்வது பார்வைதான்.

இன்றைய உலகில் பத்ரிகைகள் வாயிலாகவும், ஆபாசப் புத்தகங்கள் வாயிலாகவும், தொலைக்காட்சிப் பெட்டிகளின் வாயிலாகவும், இணையதளங்களின் மூலமாகவும் பல்வேறு விதமான ஆபாசக் காட்சிகள் வெளியிடப்படுகின்றன. அழகிய பெண்களின் அறைகுறை ஆடையுடன் கூடிய காட்சிகள் காட்டப்படுகின்றன.



சாதாரண செய்திப் பத்ரிகைகள் முதல் வார இதழ், மாத இதழ் போன்ற எந்த ஒரு பத்ரிகையும் இதற்கு விதிவிலக்கல்ல, அனைத்து இதழ்களிலும் இது போன்ற ஆபாசப் படங்கள் வெளியிடப்படுகின்றன. ஆபாசப் படங்களை வெளியிடாத பத்திரிகைகளின் விற்பனை கூட குறைந்து விடுவதால் விற்பனைக்காகவே இது போன்ற காட்சிகளை அதிகம் வெளியிடுகின்றனர்.



கிரிக்கெட் என்ற விளையாட்டை சாதரணமாகப் பார்ப்பதில் தவறில்லை என்ற நமக்கு நாமே ஒரு காரணத்தைக் கூறிக் கொண்டு அதனை பார்த்து வருகின்றோம். ஆனால் அந்த விளையாட்டின் மத்தியில் அரை குறை மங்கைகளை ஆடவிட்டு காட்டுகின்ற காட்சிகளும் அதிகம் இடம்பெறுகின்றன. இடைஇடையே காட்டப்படும் விளம்பரங்களில் கூட ஏராளமான அரைகுறை காட்சிகள் காட்டப்படுகின்றன. இவற்றைப் பற்றி நாம் யாரும் சிந்திப்பதில்லை.



இளைஞர்கள் பலர் இது போன்ற தவறான காட்சிகளின் காரணமாக தங்களுடைய மனதை அலைபாய விடுகின்றனர். இதனால் அவர்களுடைய கல்வித் தரம் குறைகிறது. வாழ்க்கையில் எந்த ஒரு துறையிலும் ஈடுபாடில்லாமல் தவறான பாதையில் சென்று தங்களுடைய எதிர்கால வாழ்வையே சீரழித்து விடுகின்றனர். இன்றைய உலகில் மிக வேகமாகப் பரவி வரும் எய்ட்ஸ் போன்ற கொடிய நோய்களுக்கு அடிப்படைக் காரணம் தவறான உடலுறவுதான் என்றாலும் அத்தகைய தவறான உறவைத் தூண்டக்கூடிய மிக முக்கிய காரணி ஆபாசக் காட்சிகளைப் பார்ப்பதுதான்.



இதனால்தான் நம்முடைய இஸ்லாமிய மார்க்கம் தவறான காட்சிகளை பார்ப்பதைக் கூட விபச்சாரம் என்கிறது.



நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் விபச்சாரத்தில் மனிதனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை மனிதன் அடைந்தே தீருவான். (மர்ம உறுப்பின் விபச்சாரம் மட்டுமல்ல கண்ணும் நாவும் கூட விபச்சாரம் செய்கின்றன.) கண் செய்யும் விபச்சாரம் (தவறான) பார்வையாகும். நாவு செய்யும் விபச்சாரம் (பாலுணர்வைத் தூண்டும் பேச்சாகும்). மனம் ஏங்குகிறது இச்சை கொள்கிறது. மர்ம உறுப்பு இவையனைத்தையும் உண்மையாக்குகிறது அல்லது பொய்யாக்குகிறது. அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி­) நூல் : புகாரி (6243)



மனதைக் கெடுக்கக்கூடியது தவறான பார்வைதான் என்பதை நபி (ஸல்) அவர்கள் மேற்கண்ட ஹதீஸில் மிக அற்புதமாக விளக்கியுள்ளார்கள். தவறான பார்வைதான் அதிகமான பாவங்களுக்கு அடிப்படையாகத் திகழ்வதால் நபி (ஸல்) அவர்கள் அதற்குரிய அனைத்து வாசல்களையும் அடைப்பதற்கு நமக்கு வழிகாட்டியுள்ளார்கள். அவற்றில் சிலவற்றை நாம் காண்போம்.




உரிய வயதில் திருமணம் செய்தல்
ஆண்களோ பெண்களோ அவர்கள் பருவ வயதை அடைந்து பா­யல் ரீதியான நாட்டங்கள் அவர்களுக்கு ஏற்பட்டுவிட்டால் அவர்களுக்கு திருமணம் செய்து வைப்பது பெற்றோர்கள் மீது கடமையாகும். இன்றைக்கு நம்முடைய சமுதாயத்தில் திருமணம் என்பது ஒரு பாரதூரமான காரியமாக ஆக்கப்பட்டுவிட்டது. வரதட்சணை போன்ற கொடுமைகளின் காரணமாக பெண்களுக்குரிய திருமண காலம் தாமதமாகின்றது. அது போன்று பல ஊர்களில் ஆண்களுக்கு வேண்டு மென்றே திருமணகாலம் தாமதிக்கப்படுகிறது. அண்ணன் திருமணத்தில் நாட்டமில்லாதவறாக இருந்தால் அவருக்கு திருமணமாகின்ற வரை அவருடன் பிறந்த சகோதரர்களுக்கும் திருமண காலங்கள் பிற்படுத்தப்படுகின்றன. இதனால் பலர் மன நோய்களுக்கு ஆளாகின்றனர். தவறான பல காரியங்களைச் செய்வதற்குத் துணிகின்றனர்.



இது போன்ற நிலை ஏற்பட்டு விடக்கூடக்கூடாது என்பதற்காகத்தான் நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கட்டளையிடுகின்றார்கள்.



நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் இளைஞர்களே உங்களில் யார் திருமணத்திற்கான செலவினங்களுக்கு சக்தி பெற்றிருக்கிறாரோ அவர் திருமணம் செய்யட்டும். ஏனெனில் திருமணம் (அந்நியப் பெண்களைப் பார்ப்பதை விட்டும்) பார்வையைக் கட்டுப்படுத்தும். கற்பைக் காக்கும். யார் அதற்குச் சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு நோற்கட்டும். அது அவரது இச்சையைக் கட்டுப்படுத்தும். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் (ரலி­) நூல் : புகாரி (1905)



மேற்கண்ட செய்தியில் உரிய வயதில் தகுதியுடையவர்கள் திருமணம் செய்வதும், அதற்கு இயலவில்லையென்றால் இறையச்சத்தை வளர்க்கும் நோன்பை நோற்பதும் நம்முடைய தவறான பார்வைக்குத் திரையாக அமையும் என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்.




வீதியில் செல்லும் போது பார்வையைத் தாழ்த்துதல்
இக்கட்டுரையின் ஆரம்பத்தில் நாம் குறிப்பிட்ட வசனங்களில் இறைநம்பிக்கை கொண்ட ஆண்களும் பெண்களும் வீதிகளில் தங்களுடைய பார்வைகளைத் தாழ்த்தியவர்களாத்தான் செல்ல வேண்டும் என்ற இறைக்கட்டளையை நாம் பார்த்தோம். பார்வையைத் தாழ்த்தி வீதிகளில் நடந்து செல்வது வீதிக்கும் செய்ய வேண்டிய கடமை என நபி (ஸல்) அவர்கள் வ­யுறுத்திக் கூறியுள்ளார்கள்.



இன்றைய காலங்களில் நம்முடைய இஸ்லாமிய சமுதாயத்தைச் சார்ந்த பெண்களில் ஒரு பகுதியினரும் மிக அதிகமாக மாற்று சமுதாயப் பெண்களும் தங்களுடைய அலங்காரங்களையும், அங்கங்களையும் வெளிப்படுத்திக் கொண்டுதான் வீதியில் நடமாடுகின்றனர். பல இஸ்லாமிய நாடுகளிலும் இது போன்ற அவல நிலைதான் நீக்கமற நிறைந்து காணப்படுகிறது.



இந்நிலையில் உண்மையான முஃமின்கள் தங்களுடைய பார்வைகளைத் தாழ்த்திக் கொண்டால் தான் தங்கள் மனதை அசுத்தத்தி­ருந்து பரிசுத்தப்படுத்த முடியும். தங்களுடைய பார்வைகளை உலாவ விடுபவர்கள் நிச்சயம் பல விதமான மனோ இச்சைகளுக்கு அடிமையாவதி­ருந்தும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியாது. பின்வரக்கூடிய நபி (ஸல்) அவர்களின் உபதேசத்தை நாம் பின்பற்றி நடந்தால் நம்முடைய மனதை வழிகெடுவதி­ருந்து நாம் பாதுகாத்துக் கொள்ள முடியும்.



''நீங்கள் சாலைகளில் அமர்வதைத் தவிருங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். '' மக்கள் ''எங்களுக்கு அங்கு அமர்வதைத் தவிர வேறுவழியில்லை. அவைதாம் நாங்கள் பேசிக்கொள்கின்ற எங்கள் சபைகள்'' என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் '' அப்படியென்றால் நீங்கள் அந்த சபைகளுக்கு வந்துதான் ஆகவேண்டுமென்றால் பாதைக்கு அதன் உரிமையைக் கொடுத்து விடுங்கள்'' என்று கூறினார்கள். மக்கள் '' பாதையின் உரிமை என்ன?'' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் '' பார்வையைத் தாழ்த்திக் கொள்வதும், (பாதையில் செல்வோருக்கு சொல்லாலோஇ செயலாலோ) துன்பம் தராமல் இருப்பதும். ஸலாமுக்கு பதிலுரைப்பதும், நன்மை புரியும்படி கட்டளையிடுவதும் இ தீமையி­ருந்து தடுப்பதும் அதன் உரிமைகள் ஆகும்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ ஸயீத் (ரலி­) நூல் : புகாரி ( 2466)



மற்றொரு அறிவிப்பில் ''அழகிய பேச்சைப் பேசுதலும்'' பாதைக்குச் செய்ய வேண்டிய கடமையாகக் கூறப்பட்டுள்ளது. அறிவிப்பவர் : அபூ தல்ஹா (ரலி­) நூல் முஸ்லி­ம் ( 4020 )




அந்நியப் பெண்களை விட்டும் பார்வையைத் திருப்புதல்
இஸ்லாமிய எந்த முறையில் எதற்காக அந்நியப் பெண்களை பார்ப்பதற்கு அனுமதியளிக்கிறதோ அதுவல்லாத முறைகளில் அந்நியப் பெண்களை நாம் பார்ப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். பெண்கள் யார் யார் முன்னிலையில் பர்தா அணியாமல் இருக்க இஸ்லாம் அனுமதிக்கிறதோ அவர்களைத் தவிர மற்ற அனைத்து ஆண்கள் முன்னிலையிலும் தங்களை மறைத்துதான் இருக்க வேண்டும்.



அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள். (அல் குர்ஆன் 24 : 30, 31)



பர்தாவைப் பேணாத பெண்கள் முன்னிலையில் நாம் பேசுவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் அது போன்று தனிமையில் பேசுவதையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.



ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி­) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நான் நபி (ஸல்) அவர்களிடம் (அன்னியப் பெண் மீது) திடீரெனப் படும் பார்வையைப் பற்றிக் கேட்டேன். நான் என்னுடைய பார்வையைத் திருப்ப வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். நூல் : திர்மிதி (2700)



(இளைஞரான) ஃபழ்ல் (ரலி­) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்குப் பின் (ஒட்டகத்தில்) அமர்ந்து கொண்டிருந்த போது ''கஸ்அம்'' கோத்திரத்தைச் சார்ந்த ஒரு பெண் வந்தார். உடனே ஃபழ்ல் அப்பெண்ணைப் பார்க்க அப்பெண்ணும் இவரைப் பார்த்தார். (இதைக் கவனித்த நபி (ஸல்) அவர்கள்) ஃபழ்­ன் முகத்தை வேறு திசையில் திருப்பினார்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி­) நூல் : புகாரி (1513)
(இதைக் கண்ட) அப்பாஸ் (ர­லி) அவர்கள் '' அல்லாஹ்வின் தூதரே எதற்காக நீங்கள் உங்களுடைய சிறிய தந்தையின் மகனின் கழுத்தை திருப்பினீர்கள் என்று கேட்டேன். அதற்கு நபியவர்கள் '' ஒரு இளைஞனையும், இளம்பெண்ணையும் நான் பார்த்தேன். அவ்விருவருக்கு மத்தியில் ஷெய்தான் நுழைவதை நான் அஞ்சுகிறேன் என்று கூறினாரகள். நூல் : திர்மிதி




இறைவனை அஞ்சி வாழ்தல்
எல்லாவற்றுக்கும் மேலாக நாம் தனிமையில் இருக்கும் போதும் கூட்டாக இருக்கும் போதும் இறைவனை அஞ்சிக் கொள்ள வேண்டும். தவறான பத்ரிகைகள் தொலைக்காட்சி காட்சிகள் இணையதளங்கள் போன்றவற்றை பார்ப்பதை விட்டும் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். நம்முடைய பார்வைகளுக்காகவும் நாம் மறுமையில் விசாரிக்கப்படுவோம் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். நம்முடைய பார்வைகளும் நமக்கெதிராக மறுமையில் சாட்சி சொல்லும் என்பதில் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த பயம் இருந்தால்தான் நாம் நம்முடைய பார்வையைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.



உமக்கு அறிவு இல்லாததை நீ பின்பற்றாதே! செவி, பார்வை மற்றும் உள்ளம் ஆகிய அனைத்துமே விசாரிக்கப்படுபவை. (அல்குர்ஆன் 17 ; 36)



அல்லாஹ்வின் பகைவர்கள் நரகை நோக்கித் திரட்டப்படும் நாளில் அவர்கள் வகைப்படுத்தப்படுவார்கள். முடிவில் அவர்கள் அங்கே வந்த தும் அவர்களுக்கு எதிராக அவர்களின் செவியும், பார்வைகளும், தோல்களும் அவர்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி சாட்சி கூறும். ''எங்களுக்கு எதிராக ஏன் சாட்சி கூறினீர்கள்?'' என்று அவர்கள் தமது தோல் களிடம் கேட்பார்கள். ''ஒவ்வொரு பொருளையும் பேசச் செய்த அல்லாஹ்வே எங்களையும் பேசச் செய்தான். முதல் தடவை அவனே உங்களைப் படைத்தான். அவனிடமே திரும்பக் கொண்டு வரப்பட்டுள்ளீர்கள்!'' என்று அவை கூறும். (அல் குர்ஆன் 41 : 30)



கண்களின் (சாடைகள் மூலம் செய்யப்படும்) துரோகத்தையும், உள்ளங்கள் மறைத்திருப்பதையும் அவன் அறிவான். (அல் குர்ஆன் 40 : 19)



அவனைக் கண்கள் பார்க்காது. அவனோ கண்களைப் பார்க்கிறான். அவன் நுட்பமானவன்; நன்கறிந்தவன் (அல் குர்ஆன் 6 : 103)



இறைவன் எந்நேரமும் நம்முடைய கண்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்கின்ற இறையச்சம்தான் தவறான பார்வைகளை விட்டும் நம்மை பாதுகாக்கும் திரையாகும்.

Read more...

பெண்களுக்கான மார்க்க பிரச்சாரத்தின் போது திரை போடுவது மார்க்கத்தில் உள்ளதா?

Thursday, February 3, 2011


இன்றைய காலகட்டத்தில் நாம் இஸ்லாமியப் பிரச்சாரத்தை செய்கின்ற நேரங்களில் அதிகமான மக்களால் பரவலாக கேற்கப்படும் ஒரு கேள்விதான் பெண்களுக்கு பிரச்சாரம் செய்கின்ற நேரத்தில் ஏன் நீங்கள் திரை போடுவதில்லை?

இந்தக் கேள்வியைக் பொருத்த மாத்திரத்தில் திரையைப் பற்றிய சரியான இஸ்லாமியக் கண்ணோட்டத்தை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
திரை என்றால் என்ன?

ஆண் பிரச்சாரகா்கள் பெண்கள் பயான் நிகழ்ச்சிகள் அல்லது பெண்களுக்கான குா்ஆன் வகுப்புகள் நடத்தும் போது பிரச்சாரகா்களுக்கும் கேட்கும் பெண்களுக்கும் இடையில் ஒரு மறைப்பை ஏற்படுத்துவார்கள் இது திரை என்ற வாசகத்தினால் குறிப்பிடப் படுகிறது.

இப்படி திரை போட்டு இரண்டு தரப்பாரையும் பிரித்து வைப்பது மார்க்கத்தில் உள்ளது தான் என மக்கள் எண்ணுகிறார்கள்.

பிரச்சாரத்திற்கு மட்டும் தான் திரையா?

பெண்கள் பயான் நிகழ்சிகள் அல்லது குா்ஆன் விளக்க வகுப்புகள் நடத்துகின்ற நேரத்தில் பெரும்பாலான பள்ளிகளில் இந்தத் திரை போடும் முறையை கையால்கிறார்கள்.இப்படி திரை போடும் பள்ளி நிர்வாகத்திடம் கேட்டால் பெண்களை ஆண்கள் பார்த்துவிடக் கூடாது அதனால் தான் இப்படி நாங்கள் செய்கிறோம்.

அப்படி பார்க்கிற நேரங்களில் மார்க்கத்திற்கு முரனான காரியங்கள் நடப்பதற்கு வாய்பாக இருக்கிறது.என்று கூறிவிடுகிறார்கள்.

இப்படி மார்க்கப் பிரச்சாரத்திற்கு காரணம் சொல்லக் கூடியவர்கள் இதே காரணத்தை மற்ற இடங்களில் நடை முறைப்படுத்துவதில்லை.

கடைத்தெருவில் பெண்களுக்கு இந்தச் சட்டத்தை சொல்வதில்லை.

கல்லூரிகளில் படிக்கும் சகோதரிகளுக்கு இந்தச் சட்டத்தை சொல்வதில்லை.

பஸ்ஸில் பிரயாணிக்கும் பெண்களுக்கு இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த சொல்வதில்லை.

பகுதி நேர வகுப்புகளுக்கு செல்லும் பிள்ளைகள் விஷயத்தில் இந்த நடை முறையைக் கையால்வதில்லை.

பல்பொருள் அங்காடி (சூப்பர் மார்க்கட்) களில் பொருள் வாங்கச் செல்லும் பெண்கள் விஷயத்தில் இந்தச் சட்டத்தை இவா்கள் பங்கு வைப்பதில்லை.

இப்படி எந்த விஷயத்தை எடுத்துக் கொண்டாலும் எதற்கும் சொல்லாத இந்த சட்டத்தை மார்க்க விஷயத்தில் மாத்திரம் ஏன் கடைப்பிடிக்கிறார்கள்.

கடைத்தெருவில் திரை இல்லை. தவறு நடக்காதா?

கல்லூரிகளில் திரை இல்லை தவறு நடக்காதா?

பஸ்களில் திரை இல்லை தப்பு ஏற்படாதா?

பகுதி நேர வகுப்புகளில் குற்றம் நடக்காதா?

குற்றத்தைப் பொருத்தவரையில் இறையச்சம் இல்லாவிடில் எந்த இடத்திலும் தவறுகள் நடக்கலாம்.

அதற்காக மார்க்கத்தில் இல்லாத ஒரு விஷயத்தை பேணுதல் என்ற அடிப்படையில் நாம் நடைமுறைப் படுத்தக் கூடாது.

நபியவா்கள் திரையைப் பயன் படுத்தினார்களா?

நபியவா்களின் காலத்தில் நபி(ஸல்)அவா்கள் பெண்களுக்கு மத்தியில் மார்கப் பிரச்சாரத்தை செய்திருக்கிறார்கள்.அப்படி பிரச்சாரம் செய்கின்ற நேரங்களில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் மத்தியில் பிரித்து திரை ஏதும்  பயண்படுத்தவில்லை.

தற்காலத்தில் யார் அப்படி திரை போட்டு பிரச்சாரம் செய்ய வேண்டும் என கட்டாயப் படுத்துகிறார்களோ அவர்கள் இதற்குறிய ஆதாரத்தை முன்வைக்க வேண்டும்.

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் 'ஹஜ்ஜுப் பெருநாள்' அல்லது 'நோன்புப் பெருநாள்' தினத்தன்று முஸல்லா எனும் தொழுகைத்திடலுக்குப் புறப்பட்டு வந்தார்கள். (ஆண்களுக்கு உரை நிகழ்த்திய) பிறகு பெண்கள் பகுதிக்குச் சென்று ''பெண்கள் சமூகமே! தான தர்மங்கள் செய்யுங்கள். ஏனெனில் நரகவாசிகüல் நீங்களே அதிகமாக இருப்பதை எனக்குக் காட்டப்பட்டது'' என்று குறிப்பிட்டார்கள். ''அல்லாஹ்வின் தூதரே! ஏன் (எங்களுக்கு இந்த நிலை)?'' எனப் பெண்கள் கேட்டதும். ''நீங்கள் அதிகமாகச் சபிக்கிறீர்கள்  மனக் கட்டுப்பாடுமிக்க கூரிய அறிவுடைய ஆண்களின் புத்தியை அறிவிலும் மார்க்க(த் தின் கடமையி)லும் குறையுடையவர்களான நீங்கள் போக்கி விடுவதையே நான் காண்கின்றேன்'' என்று கூறினார்கள். அப்போதும் அப்பெண்கள் ''மார்க்த்திலும் அறிவிலும் எங்களுடைய குறைபாடு என்ன அல்லாஹ்வின் தூதரே?'' என்று கேட்டார்கள். ''பெண்களின் சாட்சியம் ஆண்களின் சாட்சியத்தில் பாதியளவு அல்லவா?'' என்று  நபி (ஸல்) அவர்கள் கேட்க அப்பெண்கள் ''ஆம் (பாதியளவுதான்)'' என்று பதிலளித்தார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ''அதுதான் அவளது அறிவின் குறைபாடாகும்:'' என்று கூறிவிட்டு ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் (தூய்மையாகும் வரை) அவள் தொழுவதில்லை  நோன்பு நோற்பதில்லை அல்லவா?'' என்று கேட்க மீண்டும் அப்பெண்கள் ''ஆம் (தொழுவதில்லை; நோன்பு நோற்பதில்லை)'' என்று பதிலளித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அதுதான் அவளது மார்க்கத்தி(ன் கடமையி)லுள்ள குறைபாடாகும்'' என்று கூறினார்கள்.(புகாரி 304)

மேற்கண்ட செய்தியில் நபியவர்கள் பெருநாள் தினத்தில் பெண்கள் பகுதிக்கு சென்று அங்குள்ள பெண்களுக்கு உரை நிகழ்த்தினார்கள்.ஆனால் அங்கு திரை போட்டு பேசவில்லை.

பொதுவாகவே பெண்களுக்கு மார்க்கப் பிரச்சாரம் செய்யும் போது இந்த நடை முறையைத் தான் நாம் கையால வேண்டும் பேணுதல் என்று கூறிக் கொண்டு நபியவர்கள் காட்டித் தராத காரியங்களை நாமாக மார்க்கம் என்று புகுத்துதல் கூடாது.

இதே நேரம் பள்ளியில் நுழையும் போது மற்றவர்களால் பெண்களுக்கு ஏதும் பிரச்சினை ஏற்படும் என்று நாம் கருதும் பட்சத்தில் ஓரங்களில் திரைகளை போட்டுக் கொள்வதில் எந்தத் தவரும் இல்லை.

ஆனால் உரை நிகழ்த்தும் இமாமுக்கும் அதனை கேற்பவர்களுக்கும் மத்தியில் திரை போட வேண்டும் என்று மார்க்கத்தில் இல்லாத ஒரு சட்டத்தை தினிப்பது குற்றமாகும்.
                                                                                       Thanks to: www.rasminmisc.tk


Read more...

பெண்கள் பள்ளியில் தொழுகைகளை நிறைவேற்றலாமா?


பெண்கள் கொடுமைப்படுத்தப்பட்டு, பெண் பிள்ளைகள் உயிருடன் குளிதோண்டிப் புதைக்கப்பட்ட காலத்தில் அல்லாஹ்வின் தூதராகஅனுப்பப்பட்ட நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் பெண்களுக்குரிய உரிமைகளை மிகத் தெளிவாக விளக்கினார்கள். அவற்றை முஸ்லிம்கள் காலம் காலமாகப் பேணி வந்தார்கள். அவற்றில் பெண்கள் பள்ளிக்குச் சென்று தொழுவதும் அடங்கும்.பிற்பட்ட காலங்களில் இஸ்லாத்தில் இணைந்தவர்களாலும், மாற்று மத கலாச்சாரத்தின் தாக்கம் பெற்ற முஸ்லிம்களாலும் இவ்வாறான உரிமைகள் பறிக்கப்பட்டன என்பதே உண்மை.

பெண்ணை மணமுடிக்கின்ற போது சீதனம், சீர்வரிசை என்ற பெயரில் பெண்ணின் பொறுப்பாளியிடம் பலவந்தமாகப் பறித்தல், உயர்கல்வியை தொடர்வதை, இஸ்லாமிய அடிப்படையில் தொழில் புரிவதை மறுத்தல், பெண் ஒப்பமிடத் தெரிந்தால் போதும் என்ற வரட்டுத் தத்துவம் பேசுதல், கட்டாயம் முகத்தை மூட வேண்டும் என்ற போக்கு, மார்க்கத்தின் பெயரால் நிகழும் இத்தாக்கால கொடுமைகள், மாமியார் மருகளை அடிமையாக வைத்தல், மாமனாரையும், மாமியாரையும் தலைகுனிந்து மரியாதை செய்யும்படி பணித்தல் போன்ற கொடுமைகளுடன் பெண்கள் பள்ளிக்குச் சென்று தொழுவதை ஹராமாக்கும் தீர்ப்பையும் இணைத்துக் கூற முடியும்.
ஒரு காலத்தில் பெண்களுக்கு உரிமைகள் மதங்களில் மறுக்கப்பட்டதன் விளைவுதான் இன்று பெண்கள் நிர்வாணிகளாக, போகப்பொருளாக திட்டமிட்டே மாற்றப்படுகின்றனர், மாத்திரமின்றி அது அவர்களின் உரிமை என்றும் சங்கநாதம் முழங்குவதையும், பெண்ணுரிமைக் கோஷமாகவும் எழுதப்படுகின்றது. இந்த நிலைக்கு மத குருமார்கள் வழி வகுத்தது போல பள்ளிக்குச் செல்வதை தடுக்கும் மெளலவிகளின் நடவடிக்கையும் அமைகின்றது என்பது கசப்பான உண்மை.
பெண்களும், தேவைக்காக வெளிச் செல்தலும்:
பெண்கள் தமது தேவவைகளை நிறைவேற்றிக் கொள்ள மஹ்ரமான ஆண்களுடன் வெளியில் செல்வதைக் கட்டாயப்படுத்தும் கலாச்சாரத்தை இஸ்லாம் உருவாக்கி இருப்பது போல மஹ்ரம் துணையின்றி செல்வதையும் சில சந்தர்ப்பங்களில் அனுமதித்தும் இருக்கின்றது.
ஆரம்ப காலப் பெண்கள் தமது மல சலத்தேவைக்காக இரவு வேளைகளில் திறந்த வெளிக்கு வெளியேறிச் செல்பவர்களாக இருந்தனர். அல்லாஹ்வின் தூதரிடம் உமர் (ரழி) அவர்கள் உங்கள் மனைவியருக்கு ஹிஜாபைக் கொண்டு வாருங்கள் எனக் கூறுபவர்களாக இருந்தார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்கள் அதைச் செய்யவில்லை. நபி (ஸல்) அவர்களின் மனைவியரில் ஒருவரான ஸவ்தா பின்த் ஸம்ஆ (ரழி) அவர்கள் ஒரு இரவு வெளியேறிச் சென்றதை அவதானித்த உமர் (ரழி) அவர்கள், அவர்கள் கொழுத்த பெண்ணாக இருந்ததால் சவ்தாவே! உங்களை நாம் அறிந்து கொண்டோம், ஹிஜாப் சட்டம் சீக்கரம் வந்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இவ்வாறு கூறுவார்கள். அதற்கமைவாக ஹிஜாபின் வசனத்தை அல்லாஹ் இறக்கிவைத்தான் என அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரி ஹதீஸ் எண்: 143. பாடம்: பெண்கள் மலசலத் தேவைக்காக வெளியில் செல்லுதல்), (முஸ்லிம் ஹதீஸ் எண்: 4030)
மற்றொரு அறிவிப்பில், ஹிஜாப் இறங்கிய பின்னர் ஸவ்தா (ரழி) அவர்கள் ஒரு தேவையின் நிமிர்த்தம் வெளியேறிச் செல்வதைக் கண்ட உமர் (ரழி) அவர்கள் ஸவ்தாவே உம்மை எமக்குத் தெரியாமல் இல்லை. நீங்கள் எப்படி வெளியேறலாம் என்று சிந்தியுங்கள் என்று சொன்னதைக் கேட்டு அல்லாஹ்வின் தூதரிடம், அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நான் எனது தேவைக்காக வெளியேறிச் சென்ற நேரத்தில் உமர் எனக்கு இவ்வாறு, இவ்வாறெல்லாம் சொன்னார் எனக் கூறினாரே எனக் கூறும் ஸவ்தா (ரழி) அவர்கள், உடன் அல்லாஹ்வின் தூதருக்கு வஹி அறிவிக்கப்பட்டது, (அதனால் ஏற்பட்ட) வியர்வையைத் துடைத்துக் கொண்டே
 ففَقَالَ إِنَّهُ قَدْ أُذِنَ لَكُنَّ أَنْ تَخْرُجْنَ لِحَاجَتِكُنَّ (البخاري )
‘நீங்கள் உங்கள் தேவைகளுக்காக வெளியேறிச் செல்வது நிச்சயம் அனுமதிக்கப்பட்டுள்ளது எனக் கூறினார்கள்’ என்ற ஸவ்தா (ரழி) அவர்கள் கூறும் செய்தி புகாரி, முஸ்லிமில் பதிவு செய்யப்பட்டுள்ளதைப் பார்க்கின்றோம்.
மேற்படி ஹதீஸுக்கு இமாம்கள் தரும் விளக்கம்.
قَالَ اِبْن بَطَّال : فِقْه هَذَا الْحَدِيث أَنَّهُ يَجُوز لِلنِّسَاءِ التَّصَرُّف فِيمَا لَهُنَّ الْحَاجَة إِلَيْهِ مِنْ مَصَالِحهنَّ  ، ………. وَفِيهِ جَوَاز كَلَام الرِّجَال مَعَ النِّسَاء فِي الطُّرُق لِلضَّرُورَةِ ، ………   وَفِيهِ أَنَّ النَّبِيّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَنْتَظِر الْوَحْي فِي الْأُمُور الشَّرْعِيَّة ؛ لِأَنَّهُ لَمْ يَأْمُرهُنَّ بِالْحِجَابِ مَعَ وُضُوح الْحَاجَة إِلَيْهِ حَتَّى نَزَلَتْ الْآيَة ، وَكَذَا فِي إِذْنه لَهُنَّ بِالْخُرُوجِ . وَاَللَّه أَعْلَم (فتح الباري لابن حجر – (1 / 238)

பெண்கள் தமது நலனுடன் தொடர்புடைய தமது தேவைகளை தாமே நிறைவு செய்து கொள்வதை அனுமதித்தல், அவசியத்தேவைகளின் போது பாதைகளில் பெண்களுடன் பேசுதல், பெண்கள் மறைந்தும், மறைத்தும் வாழ வேண்டும் என்ற நிலை இருந்தும் அவ்வாறு தன்னிச்சையான கட்டளைப்பிறப்பிக்காது மார்க்க விவகாரங்களில் நபி (ஸல்) அவர்கள் வஹியை எதிர்பார்ப்பவர்களாக இருந்தமை போன்ற விளக்கங்கள் இதில் பெறப்படுகின்றன என்ற கருத்தை இமாம் இப்னு பத்தால் (ரஹ்) அவர்கள் மூலம் இப்னு ஹஜர் (ரஹ்) வெளியிட்டுள்ளதைப் பார்க்கின்றோம். (பார்க்க: பத்ஹுல்பாரி).
شرح النووي على مسلم – (7 / 306)
….. فيه جَوَاز خُرُوج الْمَرْأَة مِنْ بَيْت زَوْجهَا لِقَضَاءِ حَاجَة الْإِنْسَان إِلَى الْمَوْضِع الْمُعْتَاد لِذَلِكَ بِغَيْرِ اِسْتِئْذَان الزَّوْج ، لِأَنَّهُ مِمَّا أَذِنَ فِيهِ الشَّرْع .
ஒரு பெண் தனது கணவனின் அனுமதியின்றி வழமையான இடத்திற்கு தேவையை நிறைவு செய்ய வெளியேறிச் செல்வது அனுமதி என்பதைக்காட்டுகின்றது. ஏனெனில் இது மார்க்கம் அனுமதித்த ஒன்றில் உள்ளதாகும் என இமாம் நவவி (ரஹ்) அவர்கள் விளக்கியுள்ளார்கள். (பார்க்க: ஷரஹ் முஸ்லிம்) இந்த கருத்தைத்தான் நாமும் முன்வைக்கின்றோம்.
பள்ளிவாசலுக்கு வருவதை அனுமதிக்கும் நபிமொழிகள்

பெண்கள் பள்ளிக்குச் சென்று தொழுவதை அனுமதிக்கின்ற ஆதாரபூர்வமான பல நபிமொழிகள் இருக்கின்றன. அவற்றில் சிலதை மாத்திரம் இங்கு தருகின்றோம்;.

1) உமர் (ரழி) அவர்களின் மனைவி ஒருவர் இஷா, மற்றும் சுபஹ் தொழுகைக்காக பள்ளியில் நடை பெறும் (ஜமாஅத்) கூட்டுத் தொழுகையில் கலந்து கொள்பவராக இருந்தார்கள். உமர் (ரழி) அவர்கள் இதை வெறுத்து, ரோஷப்படுகின்ற போதும் நீங்கள் ஏன் இவ்வாறு செல்கின்றீர்கள் என அவர்களிடம் கேட்கப்பட்டது. அப்போது, அவர்கள் என்னைத் தடுக்க தடையாய் இருப்பது என்ன தெரியுமா? எனக் கேட்டபின் ‘அல்லாஹ்வின் அடிமைகளை (பெண்களை) அல்லாஹ்வின் பள்ளிகளை விட்டும் தடுக்காதீர்கள் என்ற இறைத்தூதரின் வார்த்தைதான் அவரைத் தடுக்கின்றது எனக் கூறினார்கள். (புகாரி).
2) உங்கள் பெண்கள் பள்ளிக்குச் செல்ல அனுமதி கோரினால் அங்கு செல்லவிடாது அவர்களைத் தடுக்காதீர்கள் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன் என அப்துல்லாஹ் பின் உமர் (ரழி) அவர்கள் அவரது மகன் பிலால், அல்லாஹ்வின் மீது சத்தியமாக நிச்சயம் நாம் அவர்களைத் தடுப்போம் எனக் கூறினார், அதற்கு அவரைத் தாறுமாறாகத் திட்டிவிட்டு, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூலம் செய்தியை அறிவிக்கின்றேன், நீ சத்தியம் செய்து தடுப்பேன் என்கின்றாயா? எனக் கேட்டார்கள். (முஸ்லிம். 667).


நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பெண்கள் பள்ளியில் தொழுததற்கான சான்றுகள்.

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பெண்கள் அவர்களின் பள்ளியில் ஜமாத் தொழுகையில் கலந்திருக்கின்றார்கள் என்பதை பின்வரும் நபிமொழிகள் மூலம் உறுதி செய்யலாம்.

1) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் தொழும் ஆண்கள் தங்களது வேஷ்டிகள் சிறியவையாக இருந்தாதால் அவற்றை (கீழாடைகளை) தங்கள் பிடரியில் கட்டிக்கொண்டு தொழுபவர்களாக இருந்தார்கள்.
     …..   فَقِيلَ لِلنِّسَاءِ لَا تَرْفَعْنَ رُءُوسَكُنَّ حَتَّى يَسْتَوِيَ الرِّجَالُ جُلُوسًا(صحيح البخاري )
‘ஆண்கள் சம நிலைக்கு வரும்வரை நீங்கள் உங்கள் தலைகளை உயர்த்தாதீர்கள் என அவர்களுக்கு நபி (ஸல்) அவர்களால் (அறிவுரை) கூறப்பட்டது (புகாரி, முஸ்லிம், நஸயி). இது பெண்கள் ஆண்களுடன் பள்ளியில் கூட்டுத் தொழுகையில் கலந்து கொண்டதை நிரூபிக்கும் செய்தியாகும்.
2) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சுபஹ் தொழுகையை நேரகாலத்துடன் தொழுவார்கள். அதில் கலந்து கொள்ளும் முஃமினான பெண்கள் தங்கள் போர்வையால் போர்த்திக் கொண்டு திரும்பும் வேளை இருட்டின் கடுமையால் அவர்களை அடையாளம் கண்டு கொள்ள முடியாது போகும் என அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரி 825, முஸ்லிம் 1026, அபூதாவூத், நஸயி).
3) நான் தொழுகையில் நின்று அதில் நீடிக்க நினைத்துக் கொண்டிருப்பேன், அப்போது சிறுபிள்ளையின் அழுகுரலை செவிமடுப்பேன். அதன் தாய் அதன் மீது படும் கஷ்டத்தை அஞ்சி அதை நான் சுருக்கமாக்கிக் கொள்வேன். என நபி (ஸல்) அவர்கள் கூறுவார்கள். (புகாரி, முஸ்லிம், அபூதாவூத்).
4) ஆண்களில் தொழுகை வரிசையில் சிறந்தது முதலாவதும், பெண்களின் வரிசையில் சிறந்தது அதில் இறுதியானதுமாகும் என நபி (ஸர’) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம், அபூதாவூத்).
5) உம்மு சுலைம் (ரழி) அவர்களின் வீட்டில் நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள். நானும், ஒரு அநாதையும் அவர்களுக்குப் பின்னால் நின்றோம். உம்மு சலைம் அவர்கள் எமக்குப் பின்னால் நின்றார்கள். என அனஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரி).
6) நபி (ஸல்) அவர்கள் தொழுகை முடிந்து ஸலாம் சொன்னால் பெண்கள் எழுந்து செல்வார்கள். அதில் சற்று தாமதிப்பார்கள். (புகாரி). இது ஆண், பெண் கலப்பில்லாதிருக்கவே இவ்வாறு செய்திருக்கிறார்கள் என இது பற்றி விளக்குகின்ற அறிவிப்பாளர் (அல்லாஹ் மிக அறிந்தவன்) எனக் கூறியே கூறுகின்றார்.

பெருநாள் தொழுகை

முஸ்லிம் பெண்கள் ஆண்கள் பங்கு கொள்ளும் இவ்வாறான நிகழ்வில் கலந்து கொள்ள மார்க்கம் பின்வருமாறு அங்கீகாரம் தந்துள்ளது. பெருநாள் தினத்தில் குமரிப்பெண்கள், மாதவிடாய் பெண்கள் உட்பட அனைவரும் பெருநாள் தொழுகை நடைபெறும் திடலக்கு புறப்பட வேண்டும் என அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கட்டளையிட்டார்கள். அப்போது ஒரு பெண் ‘அல்லாஹ்வின் தூதரே! எம்மில் ஒருத்திக்கு தலையில் அணிய முந்தாணை இல்லாவிட்டால் (போகாமல் இருக்கலாமா)? என நபி (ஸல்) அவர்களிடம் வினவினார். அவளது தோழி அவளது (மேலதிக) முந்தாணையை தனது சகதோரிக்கு அணிவிக்கட்டும், நன்மையிலும், முஸ்லிம்களின் பிரார்த்தனையிலும் பங்குகொள்ளட்டும். என நபியவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
இந்த ஹதீஸைப் பதிவு செய்யும் இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் இதை உறுதி செய்யும் வண்ணம்;
 ;;  بَاب خُرُوجِ النِّسَاءِ وَالْحُيَّضِ إِلَى الْمُصَلَّى (البخاري)
‘சாதாரண நிலையில் உள்ள பெண்களும், மாதவிடாய்ப் பெண்களும் திடலுக்கு வெளியாகிச் செல்லுதல் ‘ என தலைப்பிட்டுள்ளதையும், முஸ்லிமின் கிரந்தத்திற்கு விளக்கம் தரும் இமாம் நவவி (ரஹ்) அவர்கள்,
بَاب ذِكْرِ إِبَاحَةِ خُرُوجِ النِّسَاءِ فِي الْعِيدَيْنِ إِلَى الْمُصَلَّى وَشُهُودِ الْخُطْبَةِ مُفَارِقَاتٌ لِلرِّجَالِ (صحيح مسلم   (4 / 404)
பெண்கள் ஆண்களைப் பிரிந்தவர்களாக இரு பெருநாளில் திடலுக்;குச் செல்வதும், குத்பாவிற்குச் சமூகம் தருவதும் ஆகுனுமானது என்பதை விளக்கும் பாடம்’ என தலைப்பிட்டுள்ளதையும் பார்க்கின்றோம்.

சிறந்தது எது பள்ளியா ? வீடா?

இப்படி தெளிவான அனுமதி இருப்பதை யாரும் மறுப்பது போன்று பேசினால் அவர்கள் இந்தச் செய்தி பற்றிய தெளிவற்றவர்கள் என்றே கருத வேண்டி ஏற்படும் என்பதை சாதாரண அறிவு படைத்தவருக்கும் தெரிந்ததே! இருப்பினும் சிறப்பு எதில் இருக்கின்றது என்பதை பற்றிப் பேசினால் வீடுதான் என்பதை பின்வரும் நபி மொழியின் மூலம் உறுதி செய்ய முடியும்.
عنْ ابْنِ عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَمْنَعُوا نِسَاءَكُمْ الْمَسَاجِدَ وَبُيُوتُهُنَّ خَيْرٌ لَهُنَّ (سنن أبي داود)
உங்கள் பெண்களை பள்ளிவாயில்களை விட்டும் தடை செய்யாதீர்கள். அவர்களின் வீடுகள் அவர்களுக்குச் சிறந்ததாகும். (அபூதாவூத்) பெண்கள் பள்ளிக்கு வருவதைத் தடை செய்ய கணவன் மாருக்கு அனுமதி இல்லை என்பதை உமர் (ரழி) அவர்களின் மனைவியரில் ஒருவர் கூறிய செய்தியை முன்னர் குறிப்பிட்டிருந்தோம் அதையும் இணைத்தே படிக்கவும்.
பெண்கள் பள்ளிக்கு வரும்போது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகள்.

பெண்கள் பள்ளிக்கு வருகின்ற போது பின்வரும் ஒழுங்குகள் பேணப்படுவது அவசியமாகும்.

1) மணம் பூசி வருவதைத் தவிர்த்தல்.
عَنْ زَيْنَبَ امْرَأَةِ عَبْدِ اللَّهِ قَالَتْ قَالَ لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا شَهِدَتْ إِحْدَاكُنَّ الْمَسْجِدَ فَلَا تَمَسَّ طِيبًا (صحيح مسلم)
(பெண்களே!) உங்களில் யாராவது பள்ளிக்கு வந்தால் அவர் வாசைன பூச வேண்டாம் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கூறினார்கள் என அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரழி) அவர்களின் மனைவி ஸைனப் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (முஸ்லிம்). அவர்களின் மற்றொரு அறிவிப்பில், ‘ உங்களில் ஒருவர் இஷாவுக்கு பள்ளிக்கு வருகின்ற போது அவ்விரவு நறுமணம் பூசி வரவேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம் பெற்றுள்ளதைப் பார்க்கின்றோம். (முஸ்லிம்).
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّمَا امْرَأَةٍ أَصَابَتْ بَخُورًا فَلَا تَشْهَدْ مَعَنَا الْعِشَاءَ الْآخِرَةَ  (صحيح مسلم)
எந்தப் பெண் நறுமணத்தைப் பூசிக் கொண்டாளோ அவள் இஷாத் தொழுகைக்கு நம்முடன் சமூகம் தரவேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் கூறியு;ளளார்கள். (முஸ்லிம்).
இவ்வாறான செய்திகள் மூலம் பெண்கள் நறுமணம் பூசியவர்களாக தொழுகைக்கு வருவது தடை செய்யப்பட்டுள்ளதைப் பார்க்கின்றோம்.
2) இஸ்லாமிய ஆடையுடன் செல்லுதல்.
முஃமினான பெண்கள் தமது போர்வைகளால் போர்த்தியவர்களாக நபி (ஸல்) அவர்களுடன் ஃபஜ்ர் தொழுகையில் கலந்து கொள்வார்கள், தொழுகை முடிந்து கலைந்து செல்வார்கள். இருளின் கடுமையால் அவர்களை யாரும் அறிந்து கொள்ளமாட்டார்கள் என அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்;. (புகாரி).
நரகவாதிகளான இரு பிரிவினர் உள்ளர். அவர்கள் போன்றோரை நான் என்றும் கண்டதில்லை எனக் கூறிய நபி (ஸல்) அவர்கள் ‘ ஆடை அணிந்தும் நிர்வரிணிகளான பெண்கள், வளைத்தும், வழைந்தும் நடப்பவர்கள், அவர்களின் தலைகள் சாய்ந்து செல்லும் ஒட்டகத்தின் திழ்கள் போன்றிருக்கும், அவர்கள் சுவர்க்கத்தில் நுழையவோ, அதன் வாடையை நுகரவோமாட்டார்கள் எனக் கூறினார்கள். (முஸ்லிம்).
3) பார்வைகளைத் தாழ்த்தி, அலங்காரங்களை வெளிப்படுத்தாது செல்லுதல்.
பெண்கள் பள்ளிக்கு மாத்திரமல்ல, வெளியில் செல்லுகின்ற போதும் கூட பொதுவாக கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகளில் இதுவும் ஒன்றாகும்.
தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்புகளைக் காத்துக் கொள்ளுமாறும், (முகம், கை போன்ற) தானாக வெளிப்படும் உறுப்புக்கள் நீங்கலாக ஏனைய எல்லாப்பகுதிகளையும் மறைக்கும்படியும், தங்களது முந்தாணைகளால் (முழுமையாக) போர்த்திக் கொள்ளும்படியும், தங்களது அலங்காரங்களை வெளிப்படுத்த வேண்டாம் என்றும் முஃமினான பெண்களுக்கு நபியே நீர் கூறுவீராக! (அந்நூர்: வச: 31).
இந்த வசனத்தைக் கவனத்தில் கொண்டு பெண்கள் தாம் வெளியில் செல்லுகின்ற போதுள்ள ஒழுங்குகளைப் பேண வேண்டும்.
4) வீதி ஓரங்களால் செல்லுவதும், திரும்புவதும்.
வீதியில் பெண்கள் ஆண்களுடன் கலக்கின்ற நிலை தவிர்க்கப்பட வேண்டும். பள்ளிக்குச் செல்லும் போதும், வீடு திரும்பும் போதும் இந்த ஒழுங்கை கட்டாயம் பேணியாக வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் பள்ளியில் இருந்து வெளியேறி போது ஆண்கள், பெண்கள் அனைவரும் கலந்து நிற்பதைக் கண்டார்கள். பெண்களைப் பார்த்து கொஞ்சம் தாமதியுங்கள், பாதையில் முட்டிக் கொண்டு செல்வது உங்களுக்குரியதல்ல, நீங்கள் பாதை ஓரத்தைப் பிடித்துச் செல்லுங்கள் எனக் கூறினார்கள். அதனால் பெண் செல்லுகின்ற போது தனது ஆடை சுவரில் உரசியபடி செல்பவளாக இருந்தாள். (அபூதாவூத்)

பெண்கள் பள்ளிக்கு வருவதைத் தடுப்பதாக நம்பப்படும் செய்தியும், அதற்கான மறுப்பும்

பெண்கள் பள்ளிக்கு வருவதையும், அவர்கள் அனுமதி கோரும் பட்சத்தில் அனுமதி வழங்கப்படல் வேண்டும் என்பதையும் வலியுறுத்தும் பல நபி மொழிகளைக் கண்டு கொள்ளாத மெளலவிகள் பலர் ஆயிஷா (ரழி) அவர்களின் கருத்துடன் அமைந்த பின்வரும் கூற்றை நபி மொழிகளை விட முன்னிலைப்படுத்தி அனைத்து ஹதீஸ்களையும் செயலிழக்கச் செய்யும் ஒரு தலைப்பட்சமான நடவடிக்கையை அவதானிக்கின்றோம். இது சான்றுகளை அணுகத் தெரியாதவர்களின் செயல்முறையாகும்.
عَنْ عَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ أَنَّهَا سَمِعَتْ عَائِشَةَ زَوْجَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَقُولُ لَوْ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى مَا أَحْدَثَ النِّسَاءُ لَمَنَعَهُنَّ الْمَسْجِدَ كَمَا مُنِعَتْ نِسَاءُ بَنِي إِسْرَائِيلَ قَالَ فَقُلْتُ لِعَمْرَةَ أَنِسَاءُ بَنِي إِسْرَائِيلَ مُنِعْنَ الْمَسْجِدَ قَالَتْ نَعَمْ  (صحيح مسلم )
பெண்கள் உருவாக்கிக் கொண்ட(புதிய)வைகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவதானித்திருந்தால் பனூ இஸ்ரவேலரின் பெண்கள் தடுக்கப்பட்டது போல நமது பெண்களையும் பள்ளிக்கு வராது நிச்சயம் தடுத்திருப்பார்கள்; என அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் குறிப்பிடுவதை அவர்களின் கருத்தாகக் கொள்ளாமல் நபி மொழியாகக் கொண்டு பள்ளிக்குச் செல்வதை அனுமதிக்கும் பல நபி மொழிகள் இதன் மூலம் உதாசீனம் செய்யப்படும் நிலையைப் பரவலாக அவதானிக்கின்றோம்.
இது அன்னை அவர்களின் கூற்று என்பதே உண்மை. பள்ளிக்குச் செல்வது அல்லாஹ்வின் தூதர் தனது மரணத்துக் முன்னால் அனுமதித்த ஒன்றாகும். அவர்களின் காலத்தில் பெண்கள் பள்ளிக்கு வந்து சென்றார்கள். அவ்வாறு அவர்களை தடை செய்வதாக இருந்தால் நிச்சயமாக அவர்கள் உயிருடன் இருக்கின்ற போதே தடை செய்திருப்பார்கள்.
அல்லாஹ் அனைவருக்கும் மார்க்கத்தில் விளக்கத்தை தருவானாக!

Read more...

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

  © SLTJ Head Office Web site

Site Designed and Developed by
MSM SAFWAN 2009

Back to TOP