ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக இலங்கை அழைத்துவரப்பட்ட தென்னிந்திய அறிஞர் அல்தாஃபி அவர்கள் இலங்கையில் ஆற்றிய உரைகளின் CD மற்றும் DVDக்களை பெற்றுக்கொள்ள 0771-299562 என்ற தொலை பேசி இலக்கத்தை தொடர்பு கொள்ளவும்.
Showing posts with label தப்லிக் ஜமாஅத். Show all posts
Showing posts with label தப்லிக் ஜமாஅத். Show all posts

இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றலாமா?

Monday, October 17, 2011

(இணைவைக்கும் இமாம் குறித்த  
விரிவான விளக்கம்)
இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றுதல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் சந்தித்திராத சந்திக்க முடியாத பிரச்சனையாகும். ஏனெனில் இணை கற்பித்துக் கொண்டிருந்தவர்கள் தான் அதிலிருந்து விடுபட்டு முஸ்லிம்களானார்கள். இதனால் முஸ்லிம் சமுதாயத்துக்குள் இணை வைப்போர் என்று ஒரு சாரார் இருக்கவில்லை. இணை வைக்கும் செயலும் இருக்கவில்லை. அதாவது இணை வைக்காமல் இருந்தால் தான் முஸ்லிம் என்பது நபிகள் நாயகம் (ஸல்) காலத்து நிலைமை.
நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் சில கிராமவாசிகள் நம்ப வேண்டியவைகளை நம்பாமல் முஸ்லிம்கள் பட்டியலில் இருந்தாலும் அவர்கள் தொழுகைக்குத் தலைமை தாங்கும் பிரச்சனை எழவில்லை.எனவே நபிகள் நாயகம்காலத்தில் இந்தக் கேள்வியே எழவில்லை.

ஆனால் இஸ்லாத்தை விளங்கிப் பின்பற்றாமல் பரம்பரை அடிப்படையில் முஸ்லிம்கள் உருவான பிறகு அடிப்படைக் கொள்கை தெரியாத ஒரு சமுதாயம் பிற்காலத்தில் முஸ்லிம்களுக்குள் கலந்தது. அவர்களிடம் இணை வைப்பும் நுழைந்தது.
எனவே இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றலாம் என்றோ பின்பற்றக் கூடாது என்றோ நேரடியாக ஆதாரம் இருக்க முடியாது.

நபிகள் நாயகம் காலத்தில் இல்லாத விஷயங்கள் பிற்காலத்தில் தோன்றினால் அதற்கு நேரடி ஆதாரம் இருக்காதே தவிர எவ்வாறு முடிவு செய்வது என்ற அடிப்படை நிச்சயமாக இருக்கும். ஏனெனில் இது போன்ற நிலை ஏற்படும் என்று இறைவனுக்குத் தெரியும். எனவே பிற்காலத்தவர்கள் அந்தப் பிரச்சனையைச் சந்திக்கும் போது எவ்வாறு முடிவு செய்வது என்பதற்கு அடிப்படை உள்ளதா என்ற வகையில் தான் இதை அணுக வேண்டும்.
இதைக் கவனத்தில் வைத்துக் கொண்டு இந்தப் பிரச்சனையை நாம் ஆராய வேண்டும்.
ما كان للمشركين أن يعمروا مساجد الله شاهدين على أنفسهم بالكفر أولئك حبطت أعمالهم وفي النار هم خالدون(17)9
இணை கற்பிப்போர் தமது (இறை) மறுப்புக்கு,தாமே சாட்சி கூறிக் கொண்டிருக்கும் நிலையில் அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிப்பது தகாது. அவர்கள் செய்தவை அழிந்து விட்டன. அவர்கள் நரகில் நிரந்தரமாக இருப்பார்கள்.
திருக்குர்ஆன்9:17

இணை வைக்கும் இமாமைப் பின்பற்றுவது குறித்து நாம் என்ன நிலை எடுக்க வேண்டும் என்பதற்கு இவ்வசனம் வழிகாட்டுகிறது.
அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போர் பள்ளிவாசலை நிர்வகிக்கக் கூடாது என்று இவ்வசனம் கூறுகிறது.
அன்றைய காலத்தில் பள்ளிவாசல்கள் என்பது கீற்றுக் கூறைகள் தான். அதில் நிர்வாகம் என்று சொல்வதற்கு ஒன்றும் இல்லை. வணக்க வழிபாடுகளுக்குத் தலைமை ஏற்பது மட்டுமே அன்று இருந்த ஒரே நிர்வாகம். இணை கற்பிப்போர் பள்ளியை நிர்வகிக்கக் கூடாது என்றால் அதன் தலைமைப் பொறுப்பு அவர்களிடம் இருக்கக் கூடாது என்பது தான் கருத்தாக இருக்க முடியும். தொழுகையைத் தலைமை தாங்கும் பொறுப்பைத் தான் இது முதன்மையாக எடுத்துக் கொள்ளும்.
எனவே அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் இமாமாக இருக்கக் கூடாது என்பது தெளிவாகத் தெரிகின்றது.அவர்களின் அமல்கள் அழிந்து விட்டன என்று அதைத் தொடர்ந்து கூறப்படுவதில் இருந்து அமல்களில் தலைமை தாங்குவதைத் தான் இது குறிக்கிறது என்பது உறுதியாகும்.

இன்னும் சொல்லப் போனால் வெள்ளை அடித்தல், கட்டுமானப் பணி மேற்கொள்ளுதல், மின் இணைப்பு பணி செய்தல், பராமரித்தல் போன்றவை இரண்டாம் பட்சமானது தான். அதற்கான வசதிகள் இல்லாவிட்டால் அதை விட்டுவிடலாம்ஆனால் வணக்க வழிபாடுகளை பள்ளிவாசல்களில் நிறுத்த் முடியாது. எனவே தொழுகை நடத்துவது தான் முதன்மையான முக்கியமான நிர்வாகப் பணியாகும்.

இன்றைய காலத்தில் தான் ஜமாஅத் தொழுகையின் நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் இமாம் எப்போது வருகிறாரோ அப்போது தான் ஜமாஅத் நடக்கும். தொழுகையின் நேரம் முடிந்து விடும் என்ற நிலையில் மட்டுமே மற்றவர்கள் தொழுகைக்குத் தலைமை தாங்குவார்கள். அதாவது தொழுகையை நடத்தும் இமாமிடம் தான் அதிகாரம் இருந்துள்ளது என்பது இதில் இருந்து தெளிவாகும்.
எனவே தொழுகைக்குத் தலைமை தாங்கும் உரிமை, தகுதி இணை வைப்பவருக்குக் கிடையாது என்பதற்கு இதை விட வேறு ஆதாரம் தேவை இல்லை. அவர்கள் தலைமை தாங்கக் கூடாது என்றால் அந்தத் தலைமையை நாம் ஏற்கக் கூடாது என்பதைப் புரிந்து கொள்வது எளிதானதே.
لا يتخذ المؤمنون الكافرين أولياء من دون المؤمنين ومن يفعل ذلك فليس من الله في شيء إلا أن تتقوا منهم تقاة ويحذركم الله نفسه وإلى الله المصير(28)3
நம்பிக்கை கொண்டோர்,நம்பிக்கை கொண்டோரை விட்டு விட்டு (ஏக இறைவனை) மறுப்போரைப் பொறுப்பாளர் களாக ஆக்கக் கூடாது. அவர்களிடமிருந்து தற்காத்துக் கொள்வதற்காக தவிர. இவ்வாறு செய்பவருக்கு அல்லாஹ்விடமிருந்து (பாதுகாப்பு) எதுவுமில்லை. அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களுக்கு எச்சரிக்கிறான். திரும்புதல் அல்லாஹ்விடமே உள்ளது.
திருக்குர்ஆன்3:28
மூஃமின்களைத்தான் (அதாவது இணைகற்பிக்காதவர்களைத் தான்) தலைவர்களாக ஏற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறு ஏற்றுக் கொள்ளாமல் தவிர்க்க முடியாத என்ற அச்சுறுத்தல் இருந்தால் அவர்களைத் தலைவர்களாக ஏற்றுக் கொள்ளலாம் என்று இவ்வசனம் கூறுகிறது. அது ஆட்சித் தலைமைக்கு உரியது என்றாலும் அதை விட மேலான வணக்க வழிபாடுகளுக்கு இன்னும் சிறப்பாகப் பொருந்தும்.
பின்வரும் வசனங்களும் இதே கருத்தைக் கூறுகின்றன.
ياأيها الذين آمنوا لا تتخذوا آباءكم وإخوانكم أولياء إن استحبوا الكفر على الإيمان ومن يتولهم منكم فأولئك هم الظالمون(23)9
நம்பிக்கை கொண்டோரே! உங்கள் பெற்றோரும்,உங்கள் சகோதரர்களும் நம்பிக்கையை விட (இறை) மறுப்பை விரும்புவார்களானால் அவர்களை உற்ற நண்பர்களாக்காதீர்கள்!89உங்களில் அவர்களை உற்ற நண்பர்களாக்குவோரே அநீதி இழைத்தவர்கள்.
திருக்குர்ஆன்9:23
الذين يتخذون الكافرين أولياء من دون المؤمنين أيبتغون عندهم العزة فإن العزة لله جميعا(139)4
நம்பிக்கை கொண்டோரை விடுத்து (ஏக இறைவனை) மறுப்போரை அவர்கள் உற்ற நண்பர்களாக்கிக் கொண்டனர்.89கண்ணியத்தை அவர்களிடம் தேடுகிறார்களா?கண்ணியம் யாவும் அல்லாஹ்வுக்கே உரியது.
திருக்குர்ஆன்4:139
ياأيها الذين آمنوا لا تتخذوا الكافرين أولياء من دون المؤمنين أتريدون أن تجعلوا لله عليكم سلطانا مبينا(144)4
நம்பிக்கை கொண்டோரே! நம்பிக்கை கொண்டோரை விடுத்து (ஏக இறைவனை) மறுப்போரை உற்ற நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள்! உங்களுக்கு எதிராக தெளிவான சான்றை அல்லாஹ்வுக்கு ஏற்படுத்திக் கொடுக்க விரும்புகிறீர்களா?
திருக்குர்ஆன் 4:144
தொழுகையில் நமக்காகவும் அனைவருக்காகவும் பாவ மன்னிப்புக் கோரும் துஆக்கள் உள்ளன. அந்த துஆவில் இமாமும் அடங்குவார். ஆனால் பின்வரும் வசனம் இதைத் தடை செய்யும் வகையில் உள்ளது.
ما كان للنبي والذين آمنوا أن يستغفروا للمشركين ولو كانوا أولي قربى من بعد ما تبين لهم أنهم أصحاب الجحيم(113)9
இணை கற்பிப்போர் நரகவாசிகள் என்பது தெரிந்த பின்னர்,அவர்கள் நெருங்கிய உறவினரேயானாலும் அவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவது நம்பிக்கை கொண்டோருக்கும்,இந்த நபிக்கும் (முஹம்மதுக்கும்) தகாது.
திருக்குர்ஆன் 9:113
இணை கற்பிப்பவரை இமாமாக ஏற்றுப் பின்பற்றுவதன் மூலம் அல்லாஹ்வின் இந்தக் கட்டளை - நபிகள் நாயகத்துக்கும் இப்ராஹீம் நபிக்கும் கூட தளர்த்தப்படாத இந்தக் கட்டளை- மீறப்படும் நிலை ஏற்படும்.
எனவே இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்ற அறவே அனுமதி இல்லை என்பதில் சந்தேகம் இல்லை.
இந்த இடத்தில் ஒரு சந்தேகத்தைச் சிலர் எழுப்புவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகிகள் அனைத்து முஸ்லிம்களுக்கான பல போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். அவர்களில் இணை கற்பிப்பவர்களும் உள்ளனர். அவர்களையும் ஒரு பக்கம் முஸ்லிம்கள் என்று ஒப்புக் கொண்டு இன்னொரு பக்கம் இணை கற்பிப்பவர்கள் என்று முத்திரை குத்துவது ஏன்? அவர்கள் பின்னே தொழக் கூடாது என்று கூறுவது ஏன்?
இது தான் அந்தக் கேள்வி. தவ்ஹீத் ஜமாஅத் அனைத்து முஸ்லிம்களுக்காகவும் போராடக் கூடாது என்பதற்காக இப்படி கேட்கிறார்களா? அல்லது அவர்கள் பின்னால் தொழலாம் என்று ஃபத்வாவை மாற்ற வேண்டும் என்பதற்காக இவ்வாறு கூறுகிறார்களா? என்பது நமக்குப் புரியவில்லை.
ஆனாலும் இதற்குப் பதில் சொல்லும் கடமை நமக்கு உண்டு.
இணை வைக்கும் இமாமைப் பின்பற்றி தொழக் கூடாது என்று நாம் ஆதாரத்தின் அடிப்படையில் கூறுவது போலவே அவர்களை முஸ்லிம்கள் பட்டியலில் சேர்ப்பதும் ஆதாரத்தின் அடிப்படையில் தான்.
ஒருவர் அல்லாஹ்வின் பதிவேட்டில் முஸ்லிமாக இருப்பது வேறு. உலகக் கணக்கில் முஸ்லிம்கள் பட்டியலில் சேர்க்கப்படுவது வேறு. ஒருவர் உலகில் முஸ்லிம்கள் கணக்கில் சேர்க்கப்பட்டால் முஸ்லிம் என்ற உலக நன்மையை அவரும் பெற்றுக் கொள்வார் என்பதும் இஸ்லாத்தின் நிலைபாடு தான்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் கிராமவாசிகள் இஸ்லாத்தின் கொள்கையை நம்பாமல் தங்களை மூமின்கள் நம்பிக்கையாளர்கள் என்ற பட்டியலில் சேர்த்துக் கொண்டனர். இதை அல்லாஹ் கண்டித்து அவ்வாறு கூறக் கூடாது ஆனால் முஸ்லிம்கள் என்று கூறிக் கொள்ளலாம் என்று அனுமதிக்கிறான்.
''நம்பிக்கை கொண்டோம்''என்று கிராமவாசிகள் கூறுகின்றனர்.''நீங்கள் நம்பிக்கை கொள்ளவில்லை. நம்பிக்கை உங்கள் உள்ளங்களில் நுழையவில்லை. மாறாக'கட்டுப்பட்டோம்'என்று கூறுங்கள்''என (முஹம்மதே!) கூறுவீராக! அல்லாஹ்வுக்கும்,அவனது தூதருக்கும் நீங்கள் கட்டுப்பட்டால் உங்கள் செயல்களில் எதையும் அவன் குறைத்து விட மாட்டான். அல்லாஹ் மன்னிப்பவன்;நிகரற்ற அன்புடையோன்.
திருக்குர்ஆன் 49:14
தமிழாக்கத்தை மட்டும் பார்த்தால் நாம் கூறுவதைப் புரிந்து கொள்ள முடியாது. இதில் பயன்படுத்தப்பட்டுள்ள அரபு மூலத்தையும் கவனித்தால் தான் முழுமையாகப் புரியும்.

கிராமவாசிகள்ஆமன்னாஎனக் கூறினார்கள். இதுஈமான்என்ற சொல்லில் இருந்து பிறந்தது. அதாவது தம்மைமூமின்கள்என்று அவர்கள் வாதிட்டனர்.நம்பிக்கை உங்கள் உள்ளங்களில் நுழையவில்லைஎன்று கூறிஅவர்களிடம் ஈமான் இல்லை என்று அல்லாஹ் தெளிவுபடுத்தி விட்டுஅஸ்லம்னாஎன்று கூற அனுமதிக்கிறான்.அஸ்லம்னாஎன்பதுஇஸ்லாம்என்ற சொல்லில் இருந்து பிறந்ததாகும். அதாவது வெளிப்படையான செயல்களில் கட்டுப்பட்டோம் என்ற பொருள் தரும் வகையில்அஸ்லம்னா (முஸ்லிம்களாக இருக்கிறோம்)என்று அல்லாஹ் கூறச் சொல்கிறான்.

அவர்களிடம் ஈமான் இல்லாவிட்டாலும் வெளிப்படையாக முஸ்லிம்கள் என்று சொல்லலாம் என்று அல்லாஹ் அனுமதிப்பதை இதிலிருந்து அறியலாம்.
இதே கருத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் தெளிவுபடுத்துகிறார்கள்.
சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நான் அமர்ந்திருந்த போது,அவர்கள் மக்களில் ஒரு குழுவினருக்கு மட்டும் (தர்மப் பொருட்களை) கொடுத்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு வேண்டிய ஒருவரை (அவருக்கு கொடுக்காமல்) விட்டுவிட்டார்கள். ஆகவே நான்,அல்லாஹ்வின் தூதரே! (அவரை ஏன் விட்டுவிட்டீர்கள்?)அவர் மீது உங்களுக்கு என்ன அதிருப்தி?அல்லாஹ்வின் மீதாணையாக! அவரை நான் நம்பிக்கையாளர் (மூமின்) என்றே கருதுகின்றேன்என்றேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,அவரை முஸ்லிம் (இறைநெறியில் நடப்பவர்) என்று சொல்என்றார்கள். சிறிது நேரம் நான் அமைதியாக இருந்தேன். தொடர்ந்து நான் அவரைப் பற்றி அறிந்திருந்த விஷயங்கள் என்னையும் அறியாமல் (என் நாவில்) வந்த போது முன்பு சொன்னதையே திரும்பவும் சொன்னேன். அவர் மீது உங்களுக்கு என்ன அதிருப்தி?அல்லாஹ்வின் மீதாணையாக! நிச்சயமாக நான் அவரை ஒரு நம்பிக்கையாளர் (மூமின்) என்றே கருதுகிறேன்என்றேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரை முஸ்லிம் என்று சொல்என்றார்கள். அவரைப் பற்றி நான் அறிந்திருந்த விஷயத்தை என்னையும் மீறி மீண்டும் மீண்டும் கூறினேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பழைய பதிலையே கூறிவிட்டு,சஅத்! (அன்பளிப்புகள் எதுவாகட்டும்) நான் ஒருவருக்குக் கொடுக்கிறேன்;ஆனால் நான் யாருக்குக் கொடுக்கவில்லையோ அவர் என் அன்புக்குப் பாத்திரமானவராய் இருக்கிறார். (அவருக்கு நான் கொடுக்காதிருந்தால் இல்லாமையால் அவர் குற்றங்கள் எதும் இழைத்து அதனால்) அவரை இறைவன் நரகில் முகம் குப்புறத் தள்ளிவிடுவானோ எனும் அச்சம்தான்என்றார்கள்.
புஹாரி 27

உலகில் முஸ்லிமாகக் கருதப்படுவது வேறு அல்லாஹ்விடம் முஸ்லிமாகக் கருதப்படுவது வேறு என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மேலும் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் நாம் தொழுவது போன்று தொழுது,நமது (தொழும் திசையான) கிப்லாவை முன்னோக்கி,நம்மால் அறுக்கப்பட்டதைப் புசிக்கின்றாரோ அவர்தாம் முஸ்லிம். அத்தகையவருக்கு அல்லாஹ்வின் பொறுப்பும் (காப்புறுதியும்) அவனுடைய தூதரின் பொறுப்பும் (காப்புறுதியும்) உண்டு. எனவே (இப்படிப்பட்டவர் மீது) அல்லாஹ் ஏற்றுக்கெண்டிருக்கும் பொறுப்பி(னைப் பாழாக்கும் விஷயத்தி)ல் அல்லாஹ்வுக்கு(ம் அவனுடைய தூதருக்கும்) வஞ்சனை செய்து விடாதீர்கள்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
புஹாரி 391
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என இம்மக்கள் (உறுதி) கூறும் வரை அவர்களோடு போரிடவேண்டுமென நான் பணிக்கப்பட்டுள்ளேன். எனவே இதை அவர்கள் கூறி,நாம் தொழுவது போன்று தொழுது,நமது (தொழும் திசையான) கிப்லாவை முன்னோக்கி,நம்மால் அறுக்கப்பட்டதை அவர்கள் புசிப்பார்களேயானால் தக்க காரணமின்றி அவர்களுடைய உயிர் உடைமைகள் (மீது கை வைப்பது) நம்மீது விலக்கப்பட்டதாக ஆகிவிடும்;மேலும் (இரகசியமாக குற்றமிழைத்தால்) அவர்களின் விசாரணை அல்லாஹ்வின் பொறுப்பிலுள்ளது.
இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
புஹாரி 392
மைமூன் பின் சியாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம்,அபூஹம்ஸா! ஓர் அடியாரின் உயிரையும் பொருளையும் தடைசெய்வது எது?என்று கேட்டேன். அதற்கு அவர்கள்,யார் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என உறுதி மொழிந்து,நமது (தொழும் திசையான) கிப்லாவை முன்னோக்கி நாம் தொழுவது போன்றே தொழுது,நம்மால் அறுக்கப்பட்டதைப் புசிக்கின்றாரோ அவர்தாம் முஸ்லிம். மற்ற முஸ்லிம்களுக்கு கிட்டும் லாபமும் அவருக்கு உண்டு;மற்ற முஸ்லிம்களுக்கு ஏற்படும் நட்டமும் அவருக்கு உண்டு.என்று கூறினார்கள்.
புஹாரி 393
ஒருவர் வெளிப்படையான காரியங்களைச் செய்தால் இஸ்லாமிய அரசில் அவர் முஸ்லிமாகக் கருதப்பட்டுவார். அனைத்து முஸ்லிம்களுக்கு உள்ள உரிமையைப் பெறுவார் ஆனால் அவர் உண்மையில் மூமினாக இல்லாவிட்டால் அவரைப் பற்றிய விசாரனை அல்லாஹ்விடம் உள்ளது என்று தெளிவுபடுத்துகிறார்கள். இஸ்லாமிய அரசாங்கம் இருந்த நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் ஈமான் இல்லாத கிராமவாசிகள் முஸ்லிம்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதை அடிப்படையாக வைத்து தன்னை முஸ்லிம் என்று சொல்பவரை உலகக் கணக்கில் முஸ்லிம்கள் பட்டியலில் நாமும் சேர்க்க வேண்டும்.

நபிகள் நாயகத்துக்குப் பின் இன்னொருவரை நபி என்று ஏற்றுக் கொண்டவர்கள் இதில் அடங்க மாட்டார்கள். அவர்கள் தனி மதத்தவர்களாவர். காதியானி 19 கூட்டத்தினர் இதில் அடங்க மாட்டார்கள்.

அதே சமயம் இணை கற்பிப்பவர்களை இமாமாக ஏற்கக் கூடாது; இணை கற்பிப்பவர்களைத் திருமணம் செய்யக் கூடாது; இணை கற்பிப்பவருக்கு பாவ மன்னிப்பு கேட்கக் கூடாது போன்ற கட்டளைகளையும் பேணிக் கொள்ள வேண்டும். உலக விஷயங்களில் உலக உரிமைகளில் முஸ்லிம் என்று ஒருவர் சொல்லிக் கொண்டால் அவரை முஸ்லிம்கள் பட்டியலில் சேர்க்கவும் வேண்டும். இரண்டுமே ஆதாரங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு தான்.

மாற்றுக் கருத்துக்கு மறுப்பு
இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றலாம் என்று வாதிட்டு ஒரு இணைய தளம் சில வாதங்களை எடுத்து வைத்தது. அதை மேலும் சில இணைய தளங்கள் கண்மூடித் தனமாக வெளியிட்டு வருகின்றன.
அவர்கள் இது குறித்து எடுத்து வைக்கும் வாதங்கள் சரிதானா?

முதல் வாதம்
இணை வைக்கும் (ஷிர்க்) இமாமைப் பின்பற்றலாமா?
(
நபியே!) எவன் நிராகரிப்பானோ அவனுடைய குஃப்ரு - நிராகரிப்பு உம்மைவிசனப்படுத்த வேண்டாம். அவர்களின் மீளுதல் நம்மிடத்தில்தான் இருக்கிறது.அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பதை அப்போது நாம் அவர்களுக்குஅறிவிப்போம். நிச்சயமாக அல்லாஹ்வே இருதயங்களில் உள்ளவற்றை அறிபவன்.(31:23)
தோழ்வியுற்று ஓடும் எதிரிப்படையில் ஒருவனை நபித்தோழர் ஒருவர்பாய்ந்து அவரைத் தாக்க முற்பட்டபோது அவர்'லா இலாஹ இல்லல்லாஹு'என்றுகூறினார். அப்போது நபித்தோழர் அதைப் பொருட்படுத்தாமல் அவரை வெட்டிவீழ்த்திவிட்டார். பிறகு அவரை வெட்டியது பற்றி வருந்தி நபி(ஸல்)அவர்களிடம் இது விஷயத்தை எடுத்து கூறினார். அப்போது அவன் தன்னைக்காப்பாற்றிக் கொள்வதற்காகவே கலிமாவைக் கூறினான் என்றார். அதற்கு நபி(ஸல்)அவர்கள்'நீர் அவனது உள்ளத்தைப் பிளந்து பார்த்தீரோ?உள்ளக்கிடக்கியைநாவின் மூலமே வெளியிட முடியும் என்றார்கள். (அறிவிப்பாளர்: கபீஸாபின்துவைபு(ரழி),நூல்: முஸ்னத் அப்திர் ரஜ்ஜாக்,இப்னு அஸாக்கீர்)
இந்த குர்ஆன் ஹதீஸ் இரண்டிலுமிருந்து ஒருவனுடைய உள்ளத்தின் நிலைபற்றிய திட்டமான அறிவு அல்லாஹ்விடம் மட்டுமே இருக்கிறது. அது விஷயத்தில்நாம் தலையிடுதல் கூடாது என்பதை சுட்டிக் காட்டுகின்றன.
ஒருவனுடைய உள்ளத்தில் உள்ளதை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய முடியாது என்பது யாராலும் மறுக்கமுடியாத இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை. அதே சமயம் வெளிப்படையாகத் தெரிவதை வைத்து முடிவு எடுக்க வேண்டும் என்பதும் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை. ஒரு கொள்கயைப் பேசும் இவர்களுக்கு இன்னொரு பக்கம் தொடர்பான மார்க்க அறிவு இல்லாததே இந்த வாதத்தின் அடிப்படை
இணை கற்பிக்கும் இமாம் என்று நாம் எப்படி முடிவு செய்கிறோம்? அவரது உள்ளத்தில் ஊடுறுவிப் பார்த்துத் தான் முடிவு செய்கிறோமா? நிச்சயமாக இல்லை. வெளிப்படையான அவரது செயலைப் பார்க்கிறோம். அது அப்பட்டமான இணைவைப்பாக இருக்கிறது. இதை வைத்து அவர் இணை கற்பிக்கிறார் என்று நாம் முடிவு செய்கிறோம்.
இவர்கள் எடுத்துக் காட்டும் ஹதீஸும் அதைத் தான் சொல்கிறது. ஒருவர் லாயிலாஹ இல்லல்லாஹ் என்று கூறி விட்டார். இது வெளிப்படையாகத் தெரிகிறது. இதை வைத்து முடிவு செய் என்று நபிகள் நாயகம் (ஸல்) வழிகாட்டுகிறார்கள். அது போல் லாயிலாஹ இல்லல்லாஹ் என்று கூறியவர் ஒரு கல்லை வணங்குகிறார். இதுவும் வெளிப்படையானது தான். லாயிலாஹ இல்லல்லாஹ் என்பதை இவர் நம்பவில்லை என்பதை இவரே வெளிப்படுத்தி விட்டார். இப்போது வெளிப்படையானதை வைத்து முடிவு செய்யக் கூடாது என்பது இவர்களின் ஆராய்ச்சி.
உள்ளத்தைப் பிளந்து பார்த்து முடிவு எடுக்க முடியாது என்பதை வெளிப்படையாகத் தெரிந்தாலும் முடிவு எடுக்கக் கூடாது என்று விளங்கும் இவர்கள் எவ்வளவு அறிவாளிகள் என்று தெரிகிறது.
இவர்கள் முதன் முதலில் எடுத்துக் காட்டிய குர் ஆன் வசனத்தை இவர்கள் புரிந்து கொண்டது போல் புரிந்து கொண்டால் ராமகோபாலனையும் இமாமாக ஏற்று பின்பற்றலாம் என்று கூற வேண்டும். (நம்மை எதிர்ப்பதற்காக அவ்வாறு கூறினாலும் ஆச்சர்யம் இல்லை.)
ஏனெனில் கஃபிர்களைப் பற்றித் தான் அவ்வசனம் கூறுகிறது. அவர்களின் உள்ளங்களில் உள்ளதையும் அறிய முடியாது என்பதால் அத்வானி இமாமத் செய்தாலும் அவரைப் பின்பற்றலாம் என்பது தான் இவர்களது ஆய்வின் முடிவு.
திருக்குர்ஆனிலும் நபிமொழிகளிலும் இணை கற்பிப்பவர்களுடன் எப்படி நடக்க வேண்டும்; கெட்டவர்களுடன் எப்படி நடக்க வேண்டும் என்றெல்லாம் வழி காட்டப்பட்டுள்ளது. இவர்களின் வாதப்படி அவை யாவும் வீணானவையாகி விடும். ஒருவன் இணை கற்பிப்பவன் என்பதும் ஒருவன் கெட்டவன் என்பதும் அல்லாஹ்வுக்குத் தெரிந்த விஷயம் நாங்கள் யாரையும் அப்படி நினைக்க மாட்டோம் என்றால் இவர்கள் அல்லாஹ்வின் வசனங்களைக் கேலி செய்கிறார்கள் என்பது தெரிகிறது.
உங்கள் புதல்விகளை நல்ல ஒழுக்கமானவனுக்கு திருமணம் செய்து கொடுங்கள் கெட்டவனுக்கு திருமணம் செய்து கொடுக்காதீர்கள் என்று கூறுவதாக வெளிப்படையான செயல்களை வைத்து முடிவு எடுக்க முடியும் என்றால் தான் அவ்வாறு கூற முடியும்.
எனவே இவர்கள் வாதத்துக்கும் இணைகற்பிக்கும் இமாமைப் பின்பற்றுவதற்கும் எந்தச் சம்மந்தமுமில்லை. இணை கற்பிப்பவர் என்ற முடிவு வெளிப்படையான செயல்களை வைத்துத்தான் முடிவு செய்யப்படுகிறது.

இரண்டாவது ஆதாரம்
மறுமை நாளின்போது முறையே புனிதப் போரில் ஷஹீதானவரில் ஒருவரையும்,தானும் கற்று பிறருக்குத் கற்பித்துக் கொடுத்த ஆலிம் - அறிஞரில்ஒருவரையும்,நிறைய செல்வங்கள் அளிக்கப்பட்ட செல்வந்தரில் ஒருவரையும்கொண்டு வரப்பட்டு முதன் முதலாக இவர்களுக்கு தீர்ப்பளிக்கப்படும்.இவர்களில் ஒவ்வொருவருக்கும் தான் செய்துள்ள அருட் கொடைகளை அல்லாஹ்அவர்களுக்கு எடுத்து உணர்த்துவான். அப்போது அவர்களும் அதை உணர்ந்துகொள்வார்கள். அப்போது அவர்களை நோக்கி நீங்கள் இவற்றிற்காக என்ன கைமாறுசெய்தீர்கள் என்று கேட்பான். அதற்கு ஒருவர் (யா அல்லாஹ்) நான் உனக்காககுர்ஆனை ஓதினேன். இல்மை நானும் கற்று பிறருக்கு கற்பித்தும் கொடுத்தேன்என்பார். மூன்றாம் நபர் நீ விரும்பும் அத்துனை விஷயங்களுக்கும் நான்உனக்காக அனைத்துப் பொருள்களையும் செலவு செய்தேன் என்பார்.
அப்போது அல்லாஹ் முதலாம் நபரை நோக்கி நீர் பொய் சொல்கிறீர்.உண்மையில் நீ ஒரு மாவீரன் என்று அழைக்கப்படுவதற்காக வெட்டப்பட்டுஷஹீதாகியுள்ளீர். அவ்வாறு சொல்லப்பட்டு விட்டது என்று கூறி முகம் கவிழஇழுக்கப்பட்டு நரகத்தில் தள்ளப்படுவார். மற்றொருவரை நோக்கி நீர் பொய்சொல்கிறீர் உண்மையில் நீ ஓர் ஆலிம் - அறிஞர் அழகாக ஓதுபவர் என்றுஅழைக்கப்படுவதற்காக செயல்பட்டுள்ளீர். அவ்வாறு கூறப்பட்டு விட்டது என்றுகூறி இவரும் முகம் கவிழ இழுக்கப்பட்டு நரகத்தில் தள்ளப்படுவார்.மூன்றாமவரை நோக்கி,நீரும் பொய் சொல்கிறீர். உண்மையில் நீர் ஒரு கொடைவள்ளல் என்று அழைக்கப்படுவதற்காகவே செலவு செய்துள்ளீர். அவ்வாறுஅழைக்கப்பட்டு விட்டது என்று கூறி முகம் கவிழ இவரும் இழுக்கப்பட்டு நரகில்தள்ளப்படுவார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஹதீஸ் சுருக்கம்:அபூஹுரைரா (ரழி) முஸ்லிம்)
சத்தியத்தை நிலை நாட்டுவதற்காக ஒருவர் அந்த சத்தியத்தை எதிர்த்துபோராடுபவர்களை எதிர்த்து சண்டையிட்டு மரணிக்கிறார். அதனை நாம் கண்ணால்காணுகிறோம். அந்த சண்டையில் வெட்டுப்பட்டு மரணிப்பதும் நமக்கு தெரிகிறது.நம் காணும் அறிவின் படி அவர் வெட்டுப்பட்டு ஷஹீதாகியுள்ளார். ஆனால்அப்படிப்பட்ட ஷஹீதை முதன் முதலில் அல்லாஹ் நரகில் எறிகிறான் என்பதை இந்தஹதீஸ் கூறுகிறது.
அடுத்து ஆலிம் ஒருவர் தனது அறிவைக்கொண்டு மக்களை அல்லாஹ்வின்பால்அழைக்கிறார். அவரது உபதேசங்களைக் கேட்டு ஆயிரக்கணக்கானோர் உண்மையைஉணர்ந்து தங்களின் தவறுகளை விட்டு தெளபா செய்து நேர்வழிக்கு வந்துவிடுகின்றனர். அவரைப் பெரும் சீர்த்திருத்தவாதி என உலகமே போற்றுகிறது.அப்படிப்பட்ட ஒரு ஆலிமையும் அல்லாஹ் நரகில் எறிவதாகவும் இந்த ஹதீஸ்கூறுகிறது.
அதே போல் மிகப் பெரிய செல்வந்தர் தமது செல்வங்களில் பெரும் பகுதியைஅல்லாஹ்வுடைய பாதையில் அள்ளித் தருவதை நமது கண்களாலேயே பார்க்கிறோம்.அவர் பெரும் கொடை வள்ளல் என்று அனைவரும் கூறுகின்றனர். ஆனால் அல்லாஹ்அவரையும் நரகில் எறிவதாக இந்த ஹதீஸ் கூறுகிறது.
இதிலிருந்து நமக்கு என்ன தெரிகிறது?நாம் நமது கண்களால் திட்டமாகப்பார்ப்பதை வைத்தோ,அல்லது நமது அறிவு ஆராய்ச்சியால் திட்டமாக விளங்கியோஒருவனுடைய உள்ளத்தில் இருப்பது ஈமானா - இறை விசுவாசமா,குஃப்ரா - இறைநிராகரிப்பா என்று முடிவு கட்டிவிட முடியாது. அந்த இரகசியம் அல்லாஹ்வுக்கேவெளிச்சம். கண்ணால் பார்ப்பதும் பொய்,காதால் பார்ப்பதும் பொய் தீரவிசாரிப்பதே மெய் என்று நம் நாட்டு பழமொழி. ஆயினும் இங்கு ஒருவனுடையஉள்ளத்திலிருப்பதை தீர விசாரித்தும் நம்மால் அறிந்து கொள்ள முடியாது.இந்த நிலையில் தொழ வைக்கும் ஒரு இமாமின் குப்ரை பற்றித் திட்டமாகததெரிந்து கொள்வது எப்படி சாத்தியம்?
மீண்டும் அதே அறியாமை தான் இங்கும் வெளிப்படுகிறது. இவ்வுலகில் நாம் நல்லவன் என்று நினைத்தவன் மறுமையில் கெட்டவனாக இருக்கலாம். நாம் கெட்டவன் என்று நினைத்தவன் மறுமையில் நல்லவனாக இருக்கலாம் என்பது வேறு. இவ்வுலகில் வெளிப்படியானதை வைத்து நல்லவன் கெட்டவன் என்று முடிவு எடுக்கலாமா என்பது வேறு. இந்த அடிப்படையும் இவர்களுக்குத் தெரியவில்லை.
நபிகள் நாயகம் ஸல் அவர்களே சிலரை நல்லவர்கள் என்று முடிவு செய்திருப்பார்கள்; ஆனால் அவர்கள் மறுமை நாளில் ஹவ்லுல் கவ்ஸருக்கு செல்ல முடியாமல் தடுக்கப்படுவார்கள் என்று உள்ளது. நாம் வெளிப்படையானதை வைத்து முடிவு எடுக்க வேண்டும்; ஆனால் அல்லாஹ்வின் முடிவும் இப்படித்தான் இருக்கும் என்று கூற முடியாது.
இவர்கள் எடுத்த்துக் காட்டும் ஹதீஸின் படி மூன்று பேர் தண்டிக்கப்பட்டனர். ஆனால் அந்த மூன்று பேரையும் வெளிப்படையான செயல்களை வைத்து நல்லவர்கள் என்று கூரியவர்கள் கண்டிக்கவோ தண்டிக்கவோ படவில்லையே?
சரி இவர்கள் உலக வாழ்க்கையில் அப்படித்தான் நடக்கிறார்களா? வெளிப்படையாக இவர்களுக்கு எதிராக நடப்பவர்களை இவர்கள் ஏன் எதிரிகளாக நினைக்கின்றனர்? அவர்களின் உள்ளத்தில் உள்ளது எங்களுக்க்த் தெரியாது என்று கூறக் காணோமே?
மார்க்கத்தை வளைப்பதற்கு மட்டும் இந்த தவறான வாதத்தை எடுத்து வைப்பவர்கள் சொந்த விஷயம் என்று வரும் போது ஒருவனை கெட்டவன் என்று முடிவு செய்வது ஏன்?
இதிலிருந்து இவர்கள் செய்வது சந்தர்ப்பவாதம் என்பது தெரிகிறது.
எந்த மனிதனையும் நாங்கள் வெளிப்படையான செயல்களை வைத்து கண்டிக்க மாட்டோம் என்று அறிவித்து அதன் படி நடக்கத் தயாரா? இல்லை என்றால் அவர்கள் ஏதோ புதிதாக எதையாவது உளறி பேர் எடுக்க வேண்டும் என்பதற்காக உளறுகிறார்கள் என்பது உறுதியாகிறது.
மனிதர்கள் இவ்வுலகில் வாழும் போது வெளிப்படையான செயல்கள் அடிப்படையில் முடிவு செய்யும் நிலையில் தான் படைக்கப்பட்டுள்ளனர். அதன் அடிப்படையில் ஒருவரைப் பற்றி முடிவு செய்தால் அதன் பொருள் என்ன? எங்களுடைய சக்திக்கு உட்பட்டு வெளிப்படையானதைத் தான் பார்க்க முடியும். அதன் படி தான் முடிவு செய்ய முடியும். அவ்வாறு முடிவு செய்வதை அல்லாஹ் அனுமதித்துள்ளான். ஆனால் நாங்கள் செய்த முடிவுக்கு மாற்றமாக அல்லாஹ்வின் முடிவு இருக்கலாம் இவ்வளவு அர்த்தத்தையும் உள்ளடக்கியே ஒருவனை நல்லவன் என்றோ கெட்டவன் என்றோ ஒரு முஸ்லிம் கூறுகிறான். இதைக் கூட விளங்காதவர்கள் ஆய்வு செய்யக் கிளம்பிவிட்டனர்.
என்னிடம் வழக்கு கொண்டு வருவார்கள். வெளிப்படையான வாதத்தை வைத்து நான் ஒருவருக்கு சார்பாக தீர்ப்பளித்து விடுவேன். ஆனால் மறுமையில் வேறுவிதமாக தீர்ப்பு இருக்கலாம் என்று நபிகள் நாயகம் ஸல் கூறியதைக் கவனித்தால் இன்னும் இது தெளிவாகும்.
மேற்படி கருத்துடையவர்கள் நீதிபதி இருக்கையில் இருப்பதாக வைத்துக் கொள்வோம். ஒரு பொருள் யாருக்குச் சொந்தம் என்று இரண்டு பேர் வழக்கு கொண்டு வருகின்றனர். இந்த நீதிபதி இது யாருக்கு உரியது என்று அல்லாஹ்வுக்குத் தான் தெரியும். நான் தீர்ப்பளிக்க மாட்டேன் என்று தீர்ப்பளிப்பார்.
ஒருவர் விபச்சாரம் செய்ததாக வழக்கு வருகிறது. தக்க சாட்சிகள் உள்ளனர். இருந்தாலும் இவர் விபச்சாரம் செய்தாரா இல்லையா என்று அல்லாஹ்வுக்குத் தான் தெரியும். நான் தீர்ப்பு அளிக்க மாட்டேன் என்று இந்த நீதிபதி கூறுவார்.
இஸ்லாத்தக் கேலிக் கூத்தாக்கும் எவ்வளவு ஆபத்தான வாதத்தை எடுத்து வைக்கின்றனர் என்பதை விளக்குவதற்காகவே இவ்வாறு தெளிவு படுத்துகிறோம்.
இணைகற்பிப்பவரை இமாமாக ஏற்கலாம் என்ற கருத்தை நேரடியாகவோ மறைமுகமாகவோ சொல்லாத ஆதாரங்களை பொருத்தமில்லாத இடத்தில் பொருத்தமில்லாத வகையில் பயன்படுத்தியுள்ளனர்.

மூன்றாவது வாதம்
மக்கத்து காபிர்களின் அதே கொள்கையைத் தங்களின் கொள்கையாககொண்டிருப்பதை இணைவைத்தலை ஆதரிப்பதை நம்மால் திட்டவட்டமாக உர்ஜிதம் செய்யமுடியாது. இந்த நிலையில் தன்னை முஸ்லிம் என்று சொல்வதோடு இந்தஉம்மத்தில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டுள்ள ஒருவர் அல்லாஹ்வின்கட்டளையின்படியும் நபி(ஸல்) அவர்களின் நடைமுறைப்படியும் ஒருவர்தொழும் போது அதனைப் பின்பற்றித் தொழமாட்டேன் என்று எவ்வாறு ஒரு முஸ்லிம்சொல்ல முடியும்?அப்படிச் செய்தால் அல்லாஹ்வின் கட்டளையையே நிராகரித்தகுற்றத்திற்கல்லவா ஆளாக நேரிடும். மேலும் அப்படிப்பட்ட ஒருவரைப்பின்பற்றித் தொழுவதால் அவரின் தவறான கொள்கைகளுக்கும் நாம் துணை போவதாகபொருளாகாது.

அவர்களைப் பின்பற்றித் தொழுதால் தான் அல்லாஹ்வின் கட்டளையை நிராகரித்ததாக ஆகுமென்பதை அல்லாஹ்வின் வசனங்களை எடுத்துக் காட்டி நமது கட்டுரையில் முன்னரே விளக்கி விட்டோம்.

நான்காவது ஆதாரம்
ஒரு முறை ஹஸன் பஸரீ(ரஹ்) அவர்களிடம் பித்அத்தையுடைய இமாமுக்குப்பின்னால் நின்று தொழுவது பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள்அத்தகையவருக்குப் பின்னால் அவருடைய'பித்அத்'அவரிடமே இருக்கும் நிலையில்தொழுவீராக! என்றார்கள் (ஹிஷாமும் பின் ஹஸ்ஸான் (ரஹ்),முஸ்னத் ஸயீது பின்மன்சூர்)
அதிய்யு பின் கியார் என்பவர் உஸ்மான்(ரழி) அவர்களிடம் வந்து,நீங்கள்அனைவருக்கும் பொது இமாமாக இருந்து கொண்டிருந்தீர்கள். இப்போது நாங்கள்காணும் நிலையில் உங்களுக்குத் துன்பம் வந்து சம்பவித்துள்ளது. (இப்போது)எங்களுக்குக் குழப்பவாதியான இமாம் தொழுகை நடத்துகிறார். அவரைப் பின்பற்றிதொழுதால் நாமும் பாவிகளாகி விடுவோமோ என்று கருதி சங்கடப்பட்டுக்கொண்டிருக்கிறோம் என்றார்கள். அதற்கு அவர்கள்'தொழுகைதான் மக்களுடையஅமல்களில் மிக்க அழகானதாகும். மக்கள் அதை அழகுறச் செய்யும்போது,அவர்களுடன் சேர்ந்து நீரும் அதை அழகுறச் செய்து கொள்வீராக! அவர்கள் தீமைவிளைவிப்பவர்களாய் இருப்பின் அவர்களின் அத்தீமையை நீர் செய்யாமல் உம்மைதற்காத்துக் கொள்வீராக'என்றார்கள். (அதிய்யு பின் கியார்(ரஹ்) புகாரி)
மேற்காணும் உஸ்மான்(ரழி) அவர்களின் கூற்றிலிருந்து தொழ வைப்பவர்,அவர்'பித்அத்'காரராக அல்லது வேறு தவறுகள் செய்பவராக இருப்பினும்,நாம்ஜமாஅத்துடைய பலன் இழந்து நஷ்டம் அடைவதைவிட அவர்களுடன் சேர்ந்து ஜமாஅத்தொழுவதே மேல் என்பதை அறிய முடிகிறது.
பின்பற்றி தொழுவோர் முறையாகத் தொழுதிருக்கும்போது,இமாம் முறைகேடாகத் தொழுது இமாமுடைய தொழுகை முறிந்து விடுவதால்,அவரை பின்பற்றித்தொழுதவரின் தொழுகைக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது.
'
உங்களுக்கு சில இமாம்கள் தொழுகை நடத்துவார்கள். அவர்கள் முறையாகத்தொழ வைப்பார்களானால் உங்களுக்கு நல்லதுதான். அவர்கள் தவறிழைப்பார்களானால்உங்களுக்கு நல்லதுதான். அன்றி அவர்களுக்குத் தான் கேடு என்று நபி(ஸல்)அவர்கள் கூறியுள்ளார்கள். (அபூஹுரைரா (ரழி) புகாரி)
இப்னு உமர்(ரழி) அவர்கள் ஹஜ்ஜாஜுபின் யூசுப் எனும் மிகக் கொடியஅநியாயம் செய்தவனுக்குப் பின்னால் தொழுதுள்ளார்கள் என்று இமாம்புகாரி(ரஹ்) அவர்களும்,அபூஸயீதில் குத்ரி(ரழி) அவர்கள் பெரும்குழப்பவாதியாக இருந்த'மர்வான்'என்பவருக்குப் பின்னால் பெருநாள் தொழுகைதொழுதுள்ளார்கள் என்பதாக இமாம் முஸ்லிம்(ரஹ்) அவர்களும்,மற்றும்திர்மிதீ,அபூதாவூத்,நஸயீ முதலியோரும் தமது நூல்களில்வெளியிட்டுள்ளார்கள்.
அப்துல்லாஹ் பின் ஜுபைர்(ரழி) அவர்கள் காலத்தில் இப்னு உமர்(ரழி)அவர்கள் கஷ்பிய்யா,காரிஜிய்யா ஆகிய பெரும் குழப்பவாதிகளுக்குப் பின்னால்,அவர்கள் தமக்குள் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் நிலையில் தொழுதார்கள்.
அது சமயம் அவர்களை நோக்கி,தமக்குள் சண்டை செய்து கொண்டும் ஒருவரைஒருவர் வெட்டிக் கொண்டிருக்கும் இந்தக் கூட்டத்தாருக்கு பின்னால் நின்றுதொழுகிறீர்களா?என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள்,யார்'ஹய்ய அலஸ்ஸலாஹ்' (தொழுகைக்கு வாருங்கள்) என்று அழைப்பு விடுகிறாரோ,அவருக்குப்பதில் அளிப்பேன். யார்'ஹய்ய அலல் ஃபலாஹ்' (வெற்றியடைவதற்கு வாருங்கள்)என்று அழைப்பு விடுகிறாரோ,அவருக்கும் பதில் அளிப்பேன். ஆனால் யார்'ஹய்யஅலாகத்லி அக்கீல் முஸ்லிமி வ அக்தி மாலிஹீ' (உமது சகோதர முஸ்லிமை வெட்டிஅவருடைய பொருளை அபகரிப்பதற்காக வாருங்கள்) என்று அழைப்பு விடுகிறாரோ,அதற்கு மாட்டேன் என்று கூறிவிடுவேன் என்றார்கள் (நாபிஊ(ரழி),ஸூனனு ஸயீதுபின் மன்சூர்)
ஒரு முறை அப்துல்லாஹ் பின் உமர்(ரழி) அவர்களிடம் ஒளூவில்லாமல் ஒருவர்மக்களுக்கு தொழ வைத்து விட்டால் என்ன செய்யவேண்டும்?என்பதாககேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் அவர் மட்டும் தொழுகையை மீட்ட வேண்டும்;அவரைப் பின்பற்றி தொழுதவர்கள் மீட்ட வேண்டியதில்லை என்றார்கள்.(ஸாலிம்(ரழி),தாரகுத்னீ)
ஒரு முறை உமர்(ரழி) அவர்கள் தாம் ஜுனுபாளி - குளிப்புக் கடமைஉள்ளவர்களாயிருக்கும் போது (விஷயம் தெரியாமல்) மக்களுக்குத் தொழ வைத்துவிட்டார்கள். பின்னர் (விஷயம் தெரிந்ததும்) மீட்டித் தொழுதார்கள். ஆனால்தொழுகையை மீட்டும்படி மற்றவர்களுக்கு அவர்கள் ஏவவில்லை.(அஷ்ஷரீதுஸ்ஸகஃபி,தாரகுத்னீ)
மேற்காணும் ஹதீஸ்கள் அஃதர்- ஸஹாபாக்களின் சொற்செயல்கள் வாயிலாக தொழவைக்கும் ஓர் இமாம் அவர் தொழுகையிலோ அல்லது வெளியிலோ என்ன கோளாறுகள்செய்திருந்தாலும் அவற்றால் அவருடைய தொழுகைக்கு மட்டும்தான் பாதிப்புஏற்படுமே தவிர,அவரைப் பின்பற்றித் தொழுவோர் முறையாக தொழுதிருக்கும்போது,அவற்றால் இவர்களின் தொழுகைக்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படாதுஎன்பதை அறிகிறோம். தொழுகையில் இமாம் செய்யும் தவறுகளே மற்றவர்களின்தொழுகையைப் பாதிக்காது எனும்போது,தொழுகைக்கு வெளியில் அவர் செய்யும்தவறு எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்த முடியும்?

இங்கே இவர்கள் எடுத்துக் காட்டியுள்ள சம்பவங்களுக்கும் அல்லாஹ்வின் தூதருக்கும் எந்தச் சம்மந்தமுமில்லை. எத்தனையோ பேர் எத்தனையோ கருத்துக்களைக் கூறி இருப்பார்கள். தமது கூற்றுக்கு குர்ஆன் வசனத்தையோ நபிமொழியையோ ஆதாரமாகக் காட்டி இருந்தால் மட்டுமே அதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மேலும் இவர்கள் எடுத்துக் காட்டும் சம்பவங்களில் கூட இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றலாம் என்று கூறப்படவில்லை. எதையாவது போட்டு பக்கத்தை நிரப்புவதற்காக எழுதியுள்ளனர்.
ஒரு வேளை இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றலாம் என்ற கருத்தை இந்தச் சம்பவங்கள் தெரிவிக்குமானால் திருக்குர்ஆனுக்கு முரணாக அமைந்திருப்பதால் இதை நாம் நிராகரித்து விட வேண்டும்.
இஸ்லாத்தின் மூல ஆதாரங்கள் திருக்குர்ஆனும் நபி வழியும் தான். இணை கற்பிப்பவரை இமாமாக ஆக்க முடியாது என்பது அல்லாஹ்வின் வசனத்தில் இருந்து தெரியும் போது அதற்கு முரணாக அமைந்த எவருடைய சொல்லும் ஆதாரமாகாது என்ற அடிப்படையை விட்டு விலகி நின்று வாதிடுகிறார்கள். மேலும் இவர்கள் எடுத்துக் காட்டிய தனி நபர் தொடர்பான சம்பவங்களில் கூட இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றலாம் என்பதற்கு ஆதாரம் இல்லை. பாவம் செய்தவர்களைப் பின்பற்றலாமா என்பதற்குத் தான் ஆதாரமாக உள்ளது.


எவர் நமது தொழுகையைத் தொழுகிறாரோ
,நமது கிப்லாவைமுன்னோக்குகிறாரோ,நாம் அறுத்ததைச் சாப்பிடுகிறாரோ அவர் முஸ்லிம். அவர்அல்லாஹ்வினதும்,அல்லாஹ்வின் தூதரினதும் பாதுகாப்பில் உள்ளார். எனவே இந்தபாதுகாப்பில் இருப்பவருக்கு நம்பிக்கை துரோகம் செய்யாதீர். (அனஸ்(ரழி),புகாரி,அபூதாவூத்,திர்பிதி,அப்னுமாஜ்ஜா,தாரமி,அஹ்மத்)
அப்படியானால் அவர் ஒரு முஸ்லிம்,மற்ற முஸ்லிம்களுக்கிருக்கும் அதேஉரிமைகளும்,கடமைகளூம் அவருக்கும் உண்டு. (புகாரி) என்று இன்னொரு அறிவிப்பில் இவ்வாறு நிறைவு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆதாரங்களிலிருந்து ஷிர்க்,பித்அத் சடங்குகளைச் செய்கிறவர்கள்பின்னால் தொழுதாலும்,தொழுபவரின் தொழுகை கூடாமல் போகாது; மேலும்இக்காரணங்களைக் கூறி ஒருவர் பின்னால் தொழுவதை ஒருவர் தவிர்த்துக் கொண்டால்,அந்த இமாம் முஸ்லிம் இல்லை;காஃபிர் அல்லது முஷ்ரிக் என்றுஇவர் முடிவு செய்தே பின்பற்றாமல் இருக்கிறார். ஒருவரது உள்ளத்தில்இருப்பதை அல்லாஹ் அல்லாத வேறு யாராலும் அறிய முடியாது. அவர்களின்வெளிரங்கமான செயல்களை வைத்து ஒருவரை காஃபிர் என்றோ,முஷ்ரிக் என்றோஃபத்வா கொடுக்கும் அதிகாரம் பெறமாட்டார். இதற்குப் பல குர்ஆன்வசனங்களும்,ஹதீஸ்களும் ஆதாரங்களாக இருக்கின்றன.

இங்கே எடுத்துக்காட்டியுள்ள ஹதீஸ்கள் ஷிர்க் பித் அத்கள் செய்யும் இமாம்களைப் பின்பற்றலாம் என்ற கருத்தை எழுதி அல்லாஹ்வின் தூதர் மீது பொய்யை இட்டுக்கட்டியுள்ளனர். இந்த ஹதீஸ்கள் இவர்கள் கூறும் கருத்தைத் தருகிறதா என்று நேயர்களே அறிந்து கொள்ளலாம் இந்த ஹதீஸ்களின் கருத்து என்ன என்பதை முன்னரே நாம் விளக்கியுள்ளோம்.
Thanks To: www.onlinepj.com 

Read more...

தப்லீக் ஜமாஅத்தை கண்டால் தூர விலகு!

Tuesday, February 22, 2011


தப்லீக் ஜமாஅத் என்பது என்ன?தப்லீக் என்பது என்பதற்கு பொருள் என்ன என்று ஆராய்ந்து பார்த்தால் நம்பிக்கையை வழுப்படுத்த உருவான சமுதாயம் என்பதாக பொருள் காணப்படுகிறது! பெரும்பாலும் இந்த அமைப்பினர் வெள்ளை நிற ஜிப்பாவும் தலையில் தொப்பி யுடனும் காணப்படுவர். தங்கள் போதனைகளை மக்களிடத்தில் எத்திவைப்பதற்காக வெள்ளிக்கிழமைகளில் மூட்டை முடிச்சுகளை எடுத்துக்கொண்டு மாதத்தில் 3 நாட்கள் அல்லது நாற்பது நாட்கள் அல்லது நான்கு மாதங்கள் என்று குடும்பத்தை மறந்து பயணம் மேற்கொள்வார்கள்!

தப்லீக் ஜமாஅத்தில் மூளைச் சலவை செய்யப்படுகிறது!
பயணம் முடியும் வரை வீட்டிற்கு திரும்பமாட்டார்கள் ஒருவேளை பயணத்தின் இடையில் சொந்த குடும்பத்தார், நெருங்கிய சொந்தபந்தங்கள் யாராவது மரணித்துவிட்ட செய்தி கிடைத்தால் அந்த குறிப்பி்ட்ட நாள் மட்டும் சம்பந்தப்பட்ட நபர் மட்டும் பயணத்தை ரத்து செய்துவிட்டு சொந்த குடும்பத்தாராக இருந்தாலும் எளவு விழுந்த வீட்டின் வாசற்படிகளை கூட மிதிக்காமல் வீட்டிற்கு வெளியே நின்று ஜனாஸாவை பார்த்தவிட்டு, நல்லடக்கம் செய்யும்வரை அமர்ந்துவிட்டு மீண்டும் தங்கள் பயணத்திற்கு சென்றுவிடுவார்கள். சொந்த வீட்டில்கூட சாப்பிட மாட்டார்கள் என்று கூட கேள்விப்பட்டதுண்டு! இப்படித்தான் இந்த ஜமாஅத்தில் பங்கேற்கும் இளம் வாலிபர்களை மூளைச் சலவை செய்து அவர்களை குடும்பத்தினரிடமிருந்து தனிமைப்படுத்துகிறார்கள்!

தப்லீக் ஜமாஅத்தினர் நடவடிக்கைகள்
குடும்பத்தில் எளவு விழுந்தால் கூட தங்கள் பயணத்தை பாதியில் ரத்து செய்யத் தயங்கும் இந்த சகோதரர்கள் அப்படி என்னத்தான் போதிக்கிறார்கள் என்ற கேள்வி அனைவருக்கும் எழும் அதைப் பற்றி இங்கு காண்போம்.
மக்களுக்கு போதனைகளை எத்திவைப்பதற்காக ஒரு குழுவாக  பயணிப்பார்கள், தங்களுக்கு கண்களில் ஒரு சிறிய ஊர் அல்லது கிராமம் தென்பட்டவுடன் அங்குள்ள மசூதியில் முதலில் தொழுவார்கள் பின்னர் நைசாக அந்த மசூதிக்கு வரும் தொழுகை யாளிகளின் வசி்ப்பிடங்களை நோட்டமிடுவார்கள். தெருவில் செல்வச்செழிப்பும், வசதியும்படைத்த முஸ்லிம் யார் என்பதை கேள்விப்பட்டு அவரிடம் தங்கள் பிரச்சாரத்தை எத்திவைப்பார்கள். அந்த செல்வந்தனும் தங்களை நாடிவந்த இந்த பிரச்சாரகர்களிடம் தன் செல்வச் செழிப்பை காட்டி தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி தெருவில் உள்ளவர்களுக்கு மத்தில் தன் செல்வ பெருமையாக காட்டுவதற்காக இந்த ஜமாஅத்தாரை கவுரவித்து விருந்து கொடுப்பார்!
பின்னர் முஸ்லிம்கள் வாழும் தெருக்களை அவர் அடையாளம் காட்டி தன்னுடைய சகாக்களை துணைக்கு அணுப்புவார். பின்னர் இந்த தப்லீக் ஜமாஅத்தினர் தங்களுக்குள் 4-5 குழுக்களாக பிரிந்து விடுவார்கள்.
முஸ்லிம்களின் தெருக்களில் உள்ள முஸ்லிம்களின் வீடுகளின் கதவுகளை தைரியமாக தட்டி பெண்களிடம் தப்லீக் ஜமாஅத் வந்துள்ளது உங்கள் வீடுகளில் ஆண்கள் இருந்தால் அணுப்புங்கள் நாங்கள் பிரச்சாரம் செய்ய வந்துள்ளோம் என்று அழைப்பு விடுப்பார்கள் அப்படி ஆண்கள் வெளியே வரவில்லையெனில் தங்களுடன் வந்த அந்த ஊர் செல்வந்தனின் சகாக்களை அனுப்பி வலுக்கட்டாயமாக (ஜபர்தஸ்தியாக) ஆண்களை அழைப்பார்கள். சில ஆண்கள் செல்வந்தனின் சகாக்களை பார்த்து வெட்கப்பட்ட வந்துவிடுவார்கள் மற்றும் சிலரோ வீட்டில் ஆண்கள் இல்லை என்று குடும்ப பெண்களின் மூலமாக பொய் சொல்லிவிடுவார்கள்!

தப்லீக் ஜமாஅத்தார் அப்படி என்னத்தான் போதிக்கிறார்கள்?
மக்களை வலுக்கட்டாயமாக வரவழைத்து தெருவின் முச்சந்தியில் நின்று அவரிடம் தொழுகை பற்றி விரிவான போதனை நடைபெறும். ஆனால் இந்த தொழுகை பற்றிய போதனையில் இவர்கள் குர்ஆன் ஹதீஸ்களை ஆரம்பத்தில் ரத்தின சுருக்கமாக பயன்படுத்துவார்கள் பின்னர் குர்ஆன் ஹதீஸ்களை ஓரங்கட்டிவிட்டு தங்களுடைய "அமல்களின் சிறப்பு" என்ற தெய்வீக புத்தகத்தின் வசனங்களை அள்ளி வீசுவார்கள் இதனால் அந்த போதனைகளை கேட்கும் முஸ்லிம் சகோதரன் பயந்துவிடுவான் அந்த அளவுக்கு கப்ருவேதனை பற்றிய மிரட்டல்கள் காணப்படும்! இதோ சில போதனைகள் பாரீர்!
ஒரு இமாம் இருந்தார் அவர் தினமும் நஃபில் தொழுகைகள் மட்டும் 300 ரக்காத்து தொழுவார். ஒருவர் கப்ரில் அடக்கம் செய்யப்பட்ட பிறகு தினமும் தொழுதுக்கொண்டே இருப்பார், ஒரு பெரியவர் 70 வருடம் இடைவிடாது தொழுதுக் கொண்டே இருந்தார், மற்றொரு பெரியவர் 40 ஆண்டுகள் தூங்காமல் இருந்தார் என்று மூளைச் சலவை செய்வார்கள்
நீங்கள் ஒழுங்காக தொழவில்லையானால் கப்ருகளில் 60அடி நீளமான தேள் உங்கள் தலைக்கு மேல் நிற்கும், அதன் விஷகொடுக்கு இத்தனை அடி நீளமானதாக இருக்கும், அதன் விஷம் இப்படி அப்படி இருக்கும் அது கொட்டினால் வேதனை எப்படி இருக்கும் என்று மிரட்டுவார்கள். உடனே அதை கேட்பவன் திகில் அடைந்து கதிகலங்கி நிற்பான் உடனே எங்களுடன் தொழ வாருங்கள் என்று கூறி பரிகாரம் என்ற தொனியில் தங்கள் ஜமாஅத்தில் சேருங்கள் தொழுகையை தொடருவோம் என்று கூறுவார்க்ள அவனும் அவர்களின் மாய வலையில் விழுந்து விடுவான்!
தப்லீக் ஜமாஅத் என்ற இந்த வழிகேடு எப்போது உதயமானது?
முஹம்மது இலியாஸ் என்பவரால் 1926 ஆம் ஆண்டு வட இந்தியாவில் உள்ள மீவாட் என்னும் நகரில் தப்லிக் என்ற அமைப்பு அமைக்கப்பட்டது.

தப்லீக் ஜமாஅத்தின் ஆரம்ப காலத்து நோக்கம்
இந்திய சுதந்திரத்திற்கு முந்திய கட்டத்தில் இஸ்லாமிய தலைவர்கள் இந்தியாவில் ஹிந்துக்களைவிட முஸ்லிம்களின் எண்ணிக்கை குறைந்து வருவதை நோட்டமிட்டார்கள் பின்னர் இந்திய நாட்டில் முஸ்லிம்களின் அடையாளம் இடம் தெரியாமல் சென்றுவிடுமோ என்று பயந்ததும் இந்த அமைப்பை உருவாக்க திட்டம் தீட்டினார்கள். இந்த திட்டத்திற்கு முக்கிய கதாநாயகனாக திகழ்ந்தவர் முஹம்மது இலியாஸ். இந்த அமைப்புக்கு இட்ட சுலோகன் என்ன தெரியுமா? "முஸ்லிம்களே! முஸ்லிமாக இருங்கள்! (“O Muslims! Be Muslims”) இவர்ளின் இந்த சிந்தனை அல்லாஹ்வின் மீது இவர்களுக்கு உள்ள தாழ்ந்த நம்பிக்கைக்கு ஆதாரமாக உள்ளது!

தப்லீக் ஜமாஅத்தின் வளர்ச்சி
1926ல் மீவாட் என்ற நகரத்தில் உதயமான இந்த வழிகேட்டு அமைப்பு 1946ம் ஆண்டின் இடைப்பட்ட காலத்தில்கொஞ்சம் கொஞ்சமாக தென்மேற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆகிய, ஆப்ரிக்கா, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் தலை தூக்கியது பின்னர் காலப்போக்கில் இன்டர்நேசனல் அமைப்பாக உருவெடுத்தது!

தப்லிக் ஜமாஅத்தை ஏன் வழிகேடு என்கிறோம்.
இஸ்லாம் கூறும் சட்டதிட்டங்களை ஒழுங்காக பேணி நடந்தால் எந்த ஒரு அமைப்பையும் நாம் தரக்குறைவாக பேசக்கூடாது ஆனால் இந்த தப்லீக் அமைப்பு அந்த சட்டதிட்டங்களை மீறி நடப்பதால்தான் அதை நாம் வழிகேடு என்று விமர்சிக்கிறோம். அதற்கான ஆதாரங்கள் இதோ!

இஸ்லாத்திற்கு என்று 5 மிக முக்கிய கோட்பாடுகள் உள்ளது ஆனால் இந்த தப்லீக் அமைப்பின் நிறுவனர் முஹமது இலியாஸ் என்பவர் இந்த 5 கோட்பாடுகளை துச்சமாக மதித்து தான்தோன்றித்தனமாக 6 கட்டளைகளை (கோட்பாடுகளை) வகுத்தார். அந்த கோட்பாடுகளின் மூலமே இஸ்லாத்தை  பரப்ப முடியும் என்று கூக்குரளிட்டார்! சிந்தித்துப்பாருங்கள் சகோதர சகோதரிகளே அல்லாஹ் ஒரு சட்டத்தை வகுத்துத்தந்தான் ஆனால் அந்த சட்டத்தை மாற்றியமைக்க யாருக்கேனும் உரிமை உள்ளதா? அப்படி மாற்றுவதாக இருந்தால் இவர்கள் அல்லாஹ்விடம் அனுமதியை பெற்றார்களா? வஹி வந்ததா? இப்படி இந்த இலியாஸ் மாற்றியிருக்கிறார் என்றால் இவர் தன்னை நபி என்று கருதுகிறாரா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின் புதியதாக எந்த நபியாவது வருவாரா? இது வழிகேடு அல்லவா? சிந்திக்கமாட்டீர்களா?

இந்த ஜமாஅத்தின் கோட்பாடுகளாவன
1. முதல் கலிமா
அல்லாஹ்வைத் தவிர நாயன் வேறு யாருமில்லை நபிகளார் அவரின் தூதர்
2. ஐவேளை தொழுகை
உலகாதாயமான பொருளை ஈட்டுவதை 5 வேளை தொழுகைகள் தான் சிறந்தது அதற்காக பொருளீட்டுவதை தவிர்க்கலாம்!
3. இலம் மற்றும் ஜிக்ரு
அல்லாஹ்வை நினைவு கூறுவது, திருக்குர்ஆனையும் ஹதீஸ்களையும் படிப்பது, தொழுகையை நிலைநாட்டுவது, அமீருக்கு கட்டுப்படுவது
4. இக்ரமே முஸ்லிம் –
தங்களுடன் பிரச்சாரத்திற்கு உறுதுணையாக இருக்கும் சகோதரர்களைக் கண்ணியப்படுத்தல் அவர்களுக்கு உதவிகள் செய்வது
5. இக்லாஸ்-ஏ- நிய்யத் –
மனதை ஒருநிலைப்படுத்தி தூய்மையாக வைத்துக்கொள்ள நிய்யத் செய்வது!
6. தாபிர்-ஏ- வக்த்
குடும்பம் தவித்தாலும் பரவாயில்லை என்று எண்ணி அமீருக்கு கட்டுப்பட்டு நேரத்தை வீணடிக்காமல் உரிய நேரத்தில் பிரச்சாரத்திற்காக கூட்டமாக கிளம்புதல், அதுசமயம் திக்ருகளையும், அவ்ராதுகளையும் ஓதுதல், மக்களுக்கு தெருக்களில் பயான் செய்தல் மற்றும் தங்களின் பிரச்சாரத்தை நெடுநேரத்திற்கு முடக்கிவிட்டு அதன் மூலம் தங்களிடம் அகப்பட்ட மனிதனை தன் கட்டுப்பாட்டில் வைத்தல்

புதிய தத்துவம் எண் 7
மேற்கண்ட இந்த 6 தத்துவம் கோட்பாடுகளை வகுத்த இந்த இலியாஸ் என்ற வலிகேடன் இறுதியாக மற்றுமொரு புதிய தத்துவ கோட்பாட்டை வகுத்தான் அதாவது வீணான காரியங்களில் நேரத்தை கழிப்பதை தடுக்கப்படவேண்டும்” என்பதே அந்த 7வது கோட்பாடாகும்.

சகோதரர்களே! தாங்கள் மேலே கண்ட இந்த பித்அத் புதுமையான  தத்துவ கோட்பாடுகளையும் இறுதியான தத்துவம் எண் 7-ஐயும் அல்லாஹ் அனுமதிப்பானா? அல்லது அவனது அனைத்து நபிமார்களும் இந்த கோட்பாடுகள் சரிதான் என்று மறுமையில் சாட்சி கூறுவார்களா? சிந்தியுங்கள் செயல்படுங்கள்!

அல்குர்ஆனுக்கு போட்டியாக ஒரு புதிய வேதம்!
தப்லீக் என்ற வழிகேட்டின் தலைவர் இலியாஸ் மக்களை வழிகெடுக்க முஹம்மது ஜக்கரிய்யா என்ற மௌலானாவை நாடினார் இவர் இந்த இலியாஸின் உறவினராவார்.
இந்த ஜக்கரிய்யா என்ற வழிகேட்டு மொளானா ஒரு புத்தகத்தை உருவாக்கினான் அந்த புத்தகத்திற்கு அமல்களின் சிறப்பு என்று பெயர் சூட்டினான். இந்த நூல் இந்த வழிகேடர்களுக்கு புனித நூலாகும்!
அமல்களின் சிறப்பு என்ற இந்த வழிகேட்டு நூலில் முஸ்லிம்களை சீர்படுத்துகிறோம் என்ற பெயரில் பொய்யான கதைகளும், குடிபோதையில் உளரும் குடிகாரனும், பித்து பிடிததவன் உளரும் கதைகளையும் அத்துடன் முகவரியற்ற கப்ஸாக்களைம் ஏராளமாக அள்ளி விதைத்து உள்ளார்கள். தினமும் குர்ஆனை படிப்பதைவிட அமல்களின் சிறப்பு என்றும் இந்த வழிகேடு கிதாபை படிக்க வேண்டும் என்ற கட்டளை வேறு உள்ளது!

தப்லிக் என்ற வழிகேட்டின் முக்கிய நடைமுறை குறிக்கோள்
தாபிர்-ஏ-வக்த் என்ற 6வது கோட்பாட்டை மையமாக வைத்து அதாவது உலகத்தில் பொருளீட்டுவதற்காக செலவிடப்படும் நேரத்தை குறைத்து அமல்களின் சிறப்பு என்ற வழிகேட்டு புத்தகத்தில் வகுக்கப்பட்ட தப்லீக் சட்டங்களை பரப்புவதில் அதிக மதிகம் கவனம் செலுத்துவது.
தினமும் 2 முறை அதாவது ஒருமுறை மசூதியிலும் மற்றொரு முறை தங்கள் வீடுகளிலும் "அமல்களின் சிறப்பு" என்ற வழிகேட்டு புத்தகத்தை படிப்பது
வாரம் இருமுறை மக்களை சந்திப்பது. ஒரு குழு மசூதிகளின் பக்கமும் மற்றொரு குழு பொதுமக்களின் பக்கமும் சென்று பிரச்சாரம் மேற்கொள்வது!
ஒரு மாதத்தில் 3 நாட்கள் சொந்த ஊரை விட்டு வெளியேறி வேறு ஊர்வாசிகளுக்கு பிரச்சாரம் செய்வது.
ஒரு வருடத்தில் 40 நாட்கள் சொந்த ஊரை விட்டு வெளியேறி வேறு ஊர்வாசிகளுக்கு பிரச்சாரம் செய்வது.
வாழ்நாளில் 4 மாதங்கள் சொந்த ஊரை விட்டு வெளியேறி வேறு ஊர்வாசிகளுக்கு பிரச்சாரம் செய்வது.
தினந்தோறும் தப்லிக்-ஐ வீரியப்படுத்துவதற்காக குறைந்தது 2 மணிநேரம் ஆலோசணைக்காக கூட்டம் கூடுவது!
வருடத்தில் ஒருமுறை சொந்த நாட்டின் தப்லிக் தலைமையகத்தில் கூடுவது!

சர்வதேச தப்லிக் கூட்டம்
முதலாவது சர்வதேச தப்லிக் கூட்டம் பங்ளாதேஷ் நாட்டில் கூடுகிறது இந்த கூட்டத்திற்கு வங்காள மொழியில் பீஷ்வா இஸ்திமா (BISHWA IJTEMA-World Gathering) என்று பெயர். இந்தக் கூட்டம் பங்களாதேஷின் தலைநகரான டாக்காவின் அருகில் உள்ள டோங்கி என்ற ஊரில் குறைந்தபட்சம் 2 இலட்சம் பேருடன் அரங்கேரும்.
இரண்டாவது சர்வதேச தப்லிக் கூட்டம்
பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ரஜ்வின்ந் என்ற நகரத்தில் வருடத்தின் இரண்டாவது சர்வதேச தப்லீக் இஸ்திமா நடைபெறும்.  கடந்த 2008 ஆம் ஆண்டு 1.5 இலட்சம் பேர் இந்த கூட்டத்தில் கூடினர்.

தப்லீக் ஜமாஅத் என்னும் வழிகேட்டின் அங்கத்தினர் யார்?
அரசியல் தலைவர்கள்
  • பாகிஸ்தான் நாட்டு அதிபராக இருந்த முஹம்மது ரபீக் தரார்,
  • பரூக் லெஹரி,
  • நவாஸ் ஷெரீப்,
  • முன்னால் பங்களாதேஷ் நாட்டு அதிபராகவும் ராணுவ தலைவராகவும் இருந்த மேஜர் ஜெனரல் ஜியாவுர் ரஹ்மான்
  • பாகிஸ்தான் ராணுவ லெப்டினன் ஜெனரல் ஜாவித் நஸீர்
கிரிக்கெட் வீரர்கள், பிரபலங்கள்
  • ஷாஹீத் அப்ரிடி (பாகிஸ்தான்)
  • ஷக்லைன் முஸ்தாக் (பாகிஸ்தான்)
  • இன்ஸமாம் உல் ஹக் (பாகிஸ்தான்)
  • முஷ்தாக் அஹமது (பாகிஸ்தான்)
  • சயீத் அன்வர் (பாகிஸ்தான்)
  • சலீம் மாலிக் (பாகிஸ்தான்)
  • மொயின் அக்தர் (பாகிஸ்தான்)
  • ஹாஷிம் ஆம்லா (தென் ஆப்ரிக்கா)
  • பாடகர் ஜுனைத் ஜம்ஷட்
  • குல்ஜார் ஆலம்
  • ஆலம்ஜேப் முஜாஹித்
  • தலைசிறந்த எழுத்தாளரான டாக்டர் நாதிர் அலிகான்
(நன்றி en.wikipedia.org/wiki/Tablighi_Jamaat).
தப்லிக் ஜமாஅத்தினரின் இந்த கேடுகெட்ட வழிமுறைக்கு இறைவனிடம் அங்கீகாரம் கிடைக்குமா?

மஹ்ஷரில் தோல்வியுற வேண்டுமா? அப்போ வாங்க!
அருள்மறை குர்ஆன் அத்தியாயம் 25 ஸூரத்துல் ஃபுர்ஃகான் வசனம் 26ல் அந்த நாளில் (மறுமைநாளில்) உண்மையான ஆட்சி அர்ரஹ்மானுக்குத்தான்என்று வருகிறது இதன்படி அந்த மறுமை நாளில் அந்த ரஹ்மான் தண்டிப்பானே என்ற பயம் இந்த தப்லீக் ஜமாஅத்தினருக்கு ஏற்பட வேண்டாமா? இவர்களின் இந்த செயல் கீழ்கண்ட வசனத்தை நினைவுபடுத்தவில்லையா?

எனக்கு வந்த கேடே! (என்னை வழி கெடுத்த) ஒருவனை நண்பனாக ஆக்கிக்கொள்ளாது இருந்திருக்க வேண்டாமா? (25-28)

அந்நாளில் அறியாமைக்காரன் தன் இரு கைகளையும் கடித்துக்கொண்டு அத்தூதருடன் நானும் (நேரான) வழியை எடுத்துக்கொண்டிருக்க வேண்டாமா? எனக் கூறுவான் (25-27)

மறுமை(யின் நிலையான வாழ்க்கை)க்குப் பகரமாக, (அற்பமான) இவ்வுலக வாழ்க்கையை விலைக்கு வாங்கிக் கொண்டவர்கள் இவர்கள்தாம்; ஆகவே இவர்களுக்கு (ஒரு சிறிதளவும்) வேதனை இலேசாக்கப்பட மாட்டாது; இவர்கள் உதவியும் செய்யப்படமாட்டார்கள்.(குர்ஆன் 2:86)

நிச்சயமாக, என்னிடம் நல்லுபதேசம் வந்த பின்னரும் அதிலிருந்து அவன் என்னை வழி கெடுத்தானே! மேலும் ஷைத்தான் மனிதனுக்கு மிகவும் சதி செய்பவனாக இருக்கிறான்!” (என்று புலம்புவான்.) (குர்ஆன் 25:29)

நாதாக்களும், தலைவர்களும் கைகொடுப்பார்களா?
அன்றியும் அனைவரும் (வெளிப்பட்டு மறுமை நாளில்) அல்லாஹ்வின் சமூகத்தில் நிற்பார்கள், அப்போது (இவ்வுலகில்) பலஹீனமாக இருந்தவர்கள் (இவ்வுலகில்) பெருமை அடித்துக்கொண்டிருந்தவர்களை நோக்கி “நிச்சயமாக நாங்கள் (உலகில்) உங்களைப் பின் தொடர்பவர்களாக இருந்தோம், இப்போது நீங்கள் அல்லாஹ் (வழங்க இருக்கும்) வேதனையிலிருந்து எதையேனும் எங்களை விட்டும் தடுக்க முடியுமா? என்று கேட்பார்கள்! (அதற்கு) அவர்கள் “அல்லாஹ் எங்களுக்கு (ஏதாவது) வழியைக் காட்டினால் நாங்கள் அவ்வழியை உங்களுக்கு காட்டுவோம், (தப்பிக்க வழியே அன்றி வேதனையை அஞ்சி) நாம் பதறிக் கலங்கினாலும், அல்லது பொறுமையாக இருந்தாலும் நமக்கு ஒன்றுதான், வேறு புகழிடமே நமக்கு இல்லையே! என்னு (கை சேதப்பட்டுக்) கூறுவார்கள். (14-21)

தவறுகளை திருத்திக்கொள்பவர்களைப்பற்றி அல்லாஹ் கூறுகிறான்
அவர்களில் சிலர் சிலரை முன்னோக்கி விசாரித்துக்கொள்வார்கள் (52-25)

இதற்கு முன் (உலகில்) நாம் நம் குடும்பத்தாரிடையே இருந்தபோது (வேதனை பற்றி) நிச்சயமாக அஞ்சியவர்களாகவே இருந்தோம் (52-26)

ஆனால் அல்லாஹ் நம்மீது உபகாரம் செய்து கொடிய வேதனையிலிருந்து நம்மை காப்பாற்றினான் (52-27)

நிச்சயமாக நாம் முன்னே (உலகில்) அவனைப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தோம், நிச்சயமாக அவனே மிக்க நன்மை செய்பவன், பெருங்கிருபையுடையவன் (52-28)

அல்லாஹ் கூறுவது போல் நன்மையின் எடைகள் பற்றி பயந்து கொள்ளுங்கள்
எவருடைய (நன்மைகளின்) எடைகள் கனமாக இருக்கின்றனவோ அவர்கள் தாம் வெற்றியாளர்கள் (23-102)
ஆனால் எவருடைய (நன்மைகளின்எடைகள் இலேசாகஇருக்கின்றனவோ அவர்கள் தாம் தங்களையை நஷ்டப்படுத்திக்கொண்டவர்கள்அவர்கள் தாம் நரகில் நிரந்தரமனவர்கள் (23-103)

சிந்திக்க சில தேன் துளிகள்
  • இந்த தப்லீக் தலைவர்கள் ஒன்று கூடி இஸ்லாமிய சமுதாய மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு குரள் எழுப்பி போராட்டங்கள், பேரணிகள் நடத்தியது உண்டா?
  • இந்த தப்லீக் ஜமாஅத்தினர் கத்தம் ஃபாத்திஹா ஓதுவதை தடுத்தது உண்டா?
  • இந்த தப்லீக் சகோதரர்கள் தர்காஹ்வை எதிர்த்து மேடையில் பேசியது உண்டா?

  • இந்த தப்லீக் சகோதரர்கள் தொழுகைக்கு அழைக்கிறார்களே அது போன்று மவ்லூது, மீலாது விழாக்களை தடுத்தது உண்டா?
  • இந்த தப்லீக் சகோதரர்கள் ஸலவாத்துன் நாரியாவை எதிர்த்தது  உண்டா?
  • இந்த தப்லீக் சகோதரர்கள் இந்துக்கள், கிருஸ்தவர்கள், நாத்திகர்களுக்கு உபதேசம் செய்கிறார்களா? அல்லது மார்க்க விளக்க பொதுக் கூட்டங்கள் நடத்துவது உண்டா?

நீங்கள் தீமையை தடுக்காவிட்டால் என்ன நடக்கும்?
அல்லாஹ்வின் (சட்ட) வரம்புகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பவனுக்கும் அவற்றை மீறி நடப்பவனுக்கும் உவமை – ஒரு சமுதாயத்தைப் போன்றதாகும். அவர்கள் கப்பலில் (தங்களுக்கு இடம் பிடிப்பதற்காகச்) சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். (அதன்படி) அவர்களில் சிலருக்குக் கப்பலின் மேல் தளத்திலும் சிலருக்குக் கீழ்த் தளத்தில், இடம் கிடைத்தது.கீழ் தளத்தில் இருந்தவர்களுக்குத் தண்ணீர் தேவைப்பட்டபோது (அதைக் கொண்டு வர) அவர்கள் மேல் தளத்தில் இருப்பவர்களைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது. (அதனால் மேலே இருந்தவர்களுக்குச் சிரமம் ஏற்பட்டது). அப்போது, கீழ்த் தளத்தில் இருந்தவர்கள் (தமக்குள்) ‘நாம் (தண்ணீருக்காக) நம்முடைய பங்கில் (கீழ்த் தளத்தில்) ஓட்டையிட்டுக் கொள்வோம், நமக்கு மேலே இருப்பவர்களைத் தொந்தரவு செய்யாமலிருப்போம்’ என்று பேசிக் கொண்டார்கள். அவர்கள் விரும்பியபடி செய்து கொள்ள அவர்களை மேல் தளத்தில் உள்ளவர்கள் விட்டுவிட்டால் (கப்பலில் இருப்பவர்கள்) அனைவரும் அழிந்து போவார்கள். (ஓட்டையிட விடாமல்) அவர்களின் கரத்தைப் பிடித்துக் கொள்வார்களாயின் அவர்களும் தப்பிப் பிழைத்துக் கொள்வார்கள். (அவர்களுடன் மற்ற) அனைவரும் தப்பிப் பிழைத்துக் கொள்வார்கள். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, திர்மிதீ)

அழகிய அழைப்பு
தப்லீக் ஜமாஅத்தை விரும்பக்கூடிய சகோதர சகோதரிகளே இனிமேலாவது தப்லீக் ஜமாஅத், தப்லீக் அமீர், தப்லீக் லீடர் ஆகியோரை அணுகாதீர்கள் துஷ்டனை கண்டால் விலகுவது போன்று இவர்களி்டமிருந்து சற்று விலகி நின்று உங்களையும், உங்கள் குழந்தைகளையும், இளம் வாலிபர்களையும் மீட்டெடுங்கள்.
குர்ஆனுக்கு எதிராக அமல்களின் சிறப்பு என்ற வழிகேடு நிறைந்த புத்தகத்தை இந்த மடையர்கள் தொகுத்து உள்ளதால் அது உங்களிடமிருந்தல் உடனே நெருப்பில் பொசுக்குங்கள்!
இவர்கள் இஸ்லாத்திற்கு எதிராக செயல்படும் வழிகெட்ட கூட்டம் என்பதை உணருங்கள்! இவர்கள் ஃபித்னா என்னும் புரளியை பெரியார்கள், ஷைகுகள், மறுமைநாள், கப்ருவேதனை ஆகியவற்றின் பெயரால் கிளப்புகிறார்கள்!
குர்ஆனை படித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டிய வழிமுறையை பின்பற்றி வாழக்கூடியவர் தொழுகையை மட்டும் ஏவமாட்டார் கூடவே பித்அத்கள் என்ற மார்க்கத்தின் பெயரால் புதியதாக புகுத்தப்பட்ட அநாச்சாரங்களை தடுப்பார்கள்! இதோ குர்ஆன் கூறுகிறது சற்று கவனமாக படியுங்கள்!
என் அருமை மகனே! நீ தொழுகையை நிலை நாட்டுவாயாக; நன்மையைஏவி, தீமையை விட்டும் (மனிதர்களை) விலக்குவாயாக; உனக்கு ஏற்படும் கஷ்டங்களைப் பொறுத்துக் கொள்வாயாக; நிச்சயமாக இதுவே வீரமுள்ள செயல்களில் உள்ளதாகும். (குர்ஆன் 31:17)
அல்லாஹ் இந்த தப்லிக் ஜமாஅத்தினருக்கும் நேர்வழிகாட்ட துவா செய்வோமாக!

Read more...

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

  © SLTJ Head Office Web site

Site Designed and Developed by
MSM SAFWAN 2009

Back to TOP